புதன், 6 டிசம்பர், 2023

காலமெல்லாம் காலடியில், EP02



பெண் பார்க்கும் படலம் முதல் கல்யாணம் வரை


நாங்களும் வீட்டோட போய் பொண்ணு பார்த்தோம், அன்று அவள் கொண்டு வந்த காப்பியை எல்லோருக்கும் கொடுத்து விட்டு, ஹாலில் எல்லோருக்கும் சேர்த்து கை கூப்பி வணக்கம் சொல்லி விட்டு, அங்கே விரித்து இருந்த ஒரு பாயில் உட்கார்ந்து கொண்டாள். என் அம்மா, தங்கை, மன்னி எல்லோரும் அவளிடம் பேசி கொண்டு இருந்தார்கள். அன்று அவளும் அவர்களிடம் நன்கு பணிவுடன், மரியாதையாக பேசினாள். எங்க வீட்டிலும் எல்லோருக்கும் அவளை ரொம்ப பிடித்து போய் விட்டது. அதனால் அங்கேயே எங்கள் வீட்டார், அவளை பிடித்து விட்டதாகவும், அவள் வந்தால், அவளை தங்கள் வீட்டு மகா லட்சுமி என்று மதிப்பாக நடத்துவோம் என்றெல்லாம் சொல்லி விட்டார்கள்.

அவ குடும்பத்துக்கும் என்னோட குடும்பத்தை நன்கு பிடித்துவிட, அவங்க வீட்டிலும் எனக்கு ஓகே சொல்லி விட்டார்கள். இப்படியாக எனக்கும் அவளுக்கும் பெரியவங்க நிச்சயம் பண்ணின கல்யாணம் முடிவானது.

விரைவில் திருமண தேதியும் குறித்தாகி விட்டது, நல்ல காரியத்தை தள்ளி போட கூடாது என்று. அதனால் திருமணத்துக்கு முன்பு பழக ரொம்ப வாய்ப்பு கிடைக்க வில்லை.

அலுவலகத்தில் எல்லாம் வடக்கத்தி பசங்க, நானோ ஹிந்தி எல்லாம் நல்லா பேசி அவங்களை அதட்டி வேலை வாங்குவேன்.

ஆனால் பொண்ணுங்க கிட்ட பேசி பழக்க மில்லை. பொண்ணுங்க கிட்ட பேசும் போது மட்டும் ரொம்பவே கூச்ச சுபாவம், அதுனால நானாக போய் அவளிடம் பேச கொஞ்சம் தயக்கம்.

அவளே சில சமயம் என்னை போனில் அழைப்பாள். ஹாய் டா என்பாள், எப்படிடா இருக்கே, எப்படி போயிட்டு இருக்கு கல்யாண வேலை எல்லாம் என்று கேட்பாள். நான் வார்த்தையை அளந்து பேசுவது போல கேட்ட கேள்விக்கு மட்டும் ஏதோ டீச்சர் கிட்ட பேசும் சின்ன பையனை போல பதில் சொல்லி விட்டு, வைத்து விடுகிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுவேன்.

என் தங்கை மற்றும் மன்னி கூட இதை கேட்டு கொஞ்சம் கவலை பட்டு கொண்டே கிண்டல் அடிப்பார்கள், பாருடா இந்த சுதாகருக்கு வர போற பொண்டாட்டியை, இப்பவே அவள் நம்ம சுதாகரை டா கூட போட்டு பேசி இருக்காளாம். இவனோ வாங்க போங்க என்று அவளுக்கு மரியாதை கொடுத்து அவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறான் என்று.

நான் என் தங்கை உட்பட எல்லா பெண்களையும் சின்ன வயதில் இருந்தே மரியாதையாக வாங்க போங்க என்று சொல்லி பழக்க பட்டவன். அதே பழக்கத்தில் இப்போதும் நான் எனக்கு வரப்போகும் மனைவியிடம் இன்னும் வாங்க போங்க என்று மரியாதையுடன் தான் பேசுகிறேன். என்ன நீ, என்னை போய் வாங்க, போங்க என்று பேசுற என்று அவள் கூட சொல்லி இருக்கிறாள். அதற்கு அதுதான் எனது வழக்கம் என்று சொன்னேன்.

சரி உனக்கு எது வசதியாக இருக்கோ அப்படியே கூப்டுக்கோ, நான் உன்னை அப்படி கூப்பிட வேண்டும் என்று மட்டும் வற்புறுத்தக் கூடாது என்றாள். நானும் அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டேன், உங்களுக்கு எப்படி வசதியாக இருக்கோ அப்படி கூப்டுக்கோங்க, மரியாதை மனசுல இருக்கணும், வாய் வார்த்தைல இல்ல என்று சொல்லி விட்டேன்.

ஆனாலும் நான் என் வீட்டில் என் தங்கை மற்றும் மன்னி சொன்னதை நித்யா விடம் சொன்னதும், அதற்கு அவள், இப்படி வாங்க போங்க என்று சொன்னால் நமக்கிடையே ஏதோ ரொம்ப தூரம் இருப்பது போல உள்ளது, எனக்கு உரிமையாக டேய், டா என்று கூப்பிடுவதுதான் பிடித்து உள்ளது.

நான் உன்னை மற்றவர்கள் முன்னிலையில் எப்போதும் டா போட்டு கூப்பிட மாட்டேன். நான் இப்படி உன்னிடம் மட்டும் தனிமையில் இருக்கும் போது டா போட்டு செல்லமாய் உரிமையுடன் பேசுவதை எல்லாம் அவர்களிடம் சொல்லி கொண்டு இருக்க, அசடாடா நீ என்று செல்லமாய் அதட்டினாள். நானோ உண்மையில் ஒரு அசடாட்டம் நின்று கொண்டு இருந்தேன்.

பிறகு அதை மனதில் வைத்து கொண்டு, அவள் அதன் பின்பு என்னை எல்லோர் முன்பும் வாங்க போங்க என்று சொல்லா விட்டாலும், டா போடாமல், கொஞ்சம் மரியாதையாக இங்க கொஞ்சம் வாயேன், போயேன் என்று சொல்ல ஆரம்பித்தாள்.

கல்யாணமும் நல்ல படியா முடிஞ்சது. அவங்க வீட்டுல இருந்து தான் ரொம்ப பேர் வந்து இருந்தாங்க. அவளோட நண்பர்கள் மற்றும் கூட வேலை பார்ப்பவர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகம்தான்.

என் கூட வேலை பார்க்கும் சில பேர் என்னை பயமுறுத்தி வைத்தார்கள். டேய் உனக்கு பார்த்த பொண்ணு உன்னை விட வசதியான குடும்பம், பெரிய கம்பெனில வேற வேலை பாக்குறா, எப்படி இருப்பாளோ, உன்னை மதிப்பாளா என்றெல்லாம்.

கல்யாணம் ஆயாச்சு, இனிமே யோசிக்க ஒன்னும் இல்லை. பார்த்துக்கலாம் என்று எண்ணி கொண்டேன் மனதில் தைரியத்தை வர வழைத்து கொண்டு.

வழக்கமா எங்கள் வீட்டு பழக்க படி, மாப்பிள்ளை தான் முதலில் முதல் இரவு அறைக்குள் இருக்க வேண்டும். பின்பு மணப்பெண் கையில் பால் சொம்புடன், அவள் தோழி அல்லது அம்மா சற்றே கிண்டல் பண்ண, வெட்கத்துடன் புது பட்டு புடவை சர சரக்க உள்ளே வருவாள்.

அன்று நான் எனது கல்யாணத்துக்கு வந்து இருந்த தங்கையின் புகுந்த வீட்டு உறவினர்களுடன் பேசி கொண்டு இருந்ததில் சற்று நேரம் ஆகி விட்டது. எனவே என் மனைவி ஏற்கனவே முதல் இரவு அறைக்குள் சென்று விட்டாள். நான் சற்று நேரம் கழித்து சென்ற போது, என் அம்மா என்னிடம் வந்து, உள்ளே கொண்டு சென்ற பால் ஆறி இருக்கும், அதனால் இந்த சூடான புது பாலை கொண்டு போடா என்று சொல்லி என்னிடம் இன்னொரு பால் சொம்பை கொடுத்தார்கள்.

என் தங்கையோ அதை பார்த்து, என்னடா எல்லாம் தலை கீழ மாறி இருக்கு, மாப்பிள்ளை, பொண்ணு போல பால் சொம்பு தூக்கிட்டு போறான் என்று சொல்லி கிண்டல் செய்தாள். அந்த அம்மாவோ, அடியே ரொம்ப கிண்டல் பண்ணாதே, புது மாப்பிள்ளை பயந்துட போறான் என்று அவர்களும் சேர்ந்து என்னை கேலி செய்கிறார்கள்.

நானோ அதை எல்லாம் கேட்டு, என் அழகான புது பொண்டாட்டியை பார்க்கும் ஆவலில் நிஜமாகவே கொஞ்சம் வெட்க பட்டு கொண்டே, தலையை குனிந்து கொண்டு, ஒரு கல்யாண பொண்ணை போல, கையில் பால் சொம்புடன் எனது முதல் இரவு அறைக்குள் நுழைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக