ஞாயிறு, 7 மே, 2023

தேவி விளக்கு – பகுதி 01-04


Credit to Facebook User: Nandhini Silk | Facebook

என் பெயர் தேவ். வயது 25. நான் ஒரு மிமிகிரி கலைஞன். சமயவிளக்கு திருவிழாவுக்காக கொல்லம் சென்று இருந்தேன். கோட்டான் குளங்கர பகவதி அம்மன் கோயில் அருகே ஒரு ஓட்டலில் தங்கினேன். கொரோனா வைரஸ் தொற்றால் விழா ரத்து செய்யப்பட்டது. சரி விடுமுறையை அங்கேயே கழிக்க முடிவு செய்தேன். அறை கதவை தாழிட்டேன். என் உடைகளை களைந்து விட்டு துண்டால் மார்பு வரை கட்டிக்கொண்டு குளிக்க சென்றேன். ஹேர் ரிமூவல் லோஷனை பயன்படுத்தி உடம்பில் உள்ள முடிகளை நீக்கினேன். குளித்த பின் நன்றாக டவலால் துவட்டினேன். ஸ்கின் ஸ்மூத்தாக இருந்தது. மார்பில் கட்டியிருந்த துண்டை திறந்து என் முழு அழகையும் கண்ணாடியில் பார்த்து ரசித்தேன். பின்னர் மேக் அப் செய்ய தொடங்கினேன். சிறிது நேரத்திற்கு பிறகு கண்ணாடியில் தேவி யின் முகம் தெரிந்தது. பின்னர் லிப் ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டேன். என் மார்பில் சிலிக்கான் பிரஸ்ட்ஃபோர்மை (Breast form) ஒட்டி கொண்டேன். நிஜ மார்பகங்கள் போல தெரிந்தது. சிவப்பு நிற பிரா பேண்டி அணிந்தேன். பாவாடை தாவணி உடுத்தி கொண்டேன். பிறகு வளையல், கொலுசு, நெக்லஸ், நெத்திசூடி, ஒட்டி யாணம் அணிந்து கொண்டேன். கண்ணாடி பார்த்து நான் புன்னகைத்தேன், அவளும் புன்னகைத்தாள். விதவிதமான போஸ்களில் செல்ஃபி எடுத்து கொண்டு இருந்தேன். திடிரென கதவு பலமாக தட்டப்பட்டது.

தேவி விளக்கு பகுதி 02

நான் பயந்து போனேன். என் இதயம் படபடவென்று துடிப்பதை பிரெஸ்ட்ஃபார்மையும் தாண்டி உணர்ந்தேன். கதவு தொடர்ந்து தட்டப்பட்டது. தைரியத்தை வரவழைத்து கொண்டு மெதுவாக கதவை திறந்தேன். ரூம் பாய் பதட்டத்துடன் சொன்னான் "மேடம், சீக்கிரம் புறத்தே வரும். ரூம் காலி செய்யும்." நான் ஏன் என்று கேட்பதற்குள் அவன் அடுத்த அறைக்கதவை தட்டச் சென்றான். ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. எதிர் அறையில் இருந்து வெளியே வந்த ஒரு வாலிபன் கத்தினான் "What the f**k is happening here". என்னை பார்த்தவுடன் Oh I'm sorry, miss, let's go and enquire at the reception" என்று கூறி ரிசப்ஷனை நோக்கி நகர்ந்தான். அவன் என்னை ஒரு 'பெண்' ணாக நினைத்ததை எண்ணி பிரமித்து நின்றேன். அவன் என்னிடம் கேட்டான் miss are you coming with me? என் கண்ணம் சிவந்தது. Yes. I'm coming with you என்று பெண் குரலில் பதிலளித்தேன். ஒரு அழகான வாலிபருடன் நடந்து சென்ற அந்த சில நிமிடங்கள் என் பெண் மனம் குதுகலித்தது. ரஹ்மான் இசையில் ஒரு டூயட் "மலர்களே மலர்களே இது என்ன கனவா? உருகியதே எனது உள்ளம்". இந்த நிமிடம் இப்படியே நீண்டு கொண்டே போக வேண்டுமென்று விரும்பினேன். ரிசப்ஷன் ஒரே களேபரமாக இருந்தது. பயத்தில் நான் அந்த வாலிபரின் கையை பிடித்துக் கொண்டேன்.

தேவி விளக்கு பகுதி 03

அவனும் என் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டு சொன்னான் "Don't worry". எனக்கு கொஞ்சம் பயம் குறைந்தது. இருவரும் ரிசப்ஷன் சென்று விசாரித்தோம். ரிசப்ஷனில் சொன்ன பதிலை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மொத்த மாநிலமும் மூடப்பட்ட உள்ளது. டோட்டல் லாக் டவுன். பேருந்து, ரயில், விமானம் அனைத்தும் இன்று இரவோடு ரத்து செய்யப்படுகிறது. ஓட்டலும் மூடப்படுகிறது, அனைவரும் காலி செய்யவும். மொபைலில் நியூஸ் சேனல்களை பார்த்தோம். டோட்டல் லாக் டவுன் உண்மைதான். என் ரூமுக்கு விரைந்து சென்றேன். உடை மாற்றுவதற்கு நேரமில்லை. எனது உடமைகள் அனைத்தையும் அள்ளி டிராவல் பேக் கில் திணித்தேன். ரூமை காலி செய்து விட்டு ஓட்டலுக்கு வெளியே ஆட்டோ பிடிக்க நின்று கொண்டிருந்தேன். அனைத்து வாகனங்களும் ஹவுஸ் ஃபுல். நான் செய்வதறியாமல் தாவணி தலைப்பை (Pallu) என் கைவிரலில் சுற்றிக்கொண்டு இருந்தேன். அப்போது சட்டென்று ஒரு ஆட்டோ என் முன்னால் வந்து நின்றது. ஆட்டோவில் இருந்து அதே அழகிய வாலிபர் என்னை பார்த்து கூப்பிட்டார். "Please get in, I will drop you". நானும் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கு போகும்படி டிரைவரிடம் கூறினான். நான் அவனிடம் Thanks சொன்னேன். அவன் welcome என்று புன்னகைத்தான். சிறிது நேர மௌனம் நிலவியது. அவனே பேச்சு கொடுத்தான். Hi I'm Ashish from Mumbai. Hi I'm Devi from Chennai. தொடர்ந்து பேசினான். அவன் சென்னையில் ஒரு MNC ல் App development Team lead. நான் என்னைப் பற்றி ஒரு கற்பனை கதையை கூறினேன். ரயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம்.


தேவி
விளக்கு பகுதி 04

நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது, சென்னை எக்ஸ்பிரஸ் 9வது பிளாட்பாரத்தில் சங்கு ஊதிக் கொண்டு கிளம்பியது. உஊஊூ. இருவரும் ரயிலை பிடிக்க ஓடினோம். ஆஷிஷ் வேகமாக ஓடிச்சென்று கடைசி பெட்டியில் தொற்றிக் கொண்டான். பாவாடையில் என்னால் வேகமாக ஓட முடியவில்லை. ஆஷிஷ் படியில் தொங்கிக் கொண்டு come on fast என கையசைத்து கூப்பிட்டான். நான் பாவாடையை தூக்கி பிடித்து கொண்டு வேகமாக ஓட ஆரம்பித்தேன். எதிர் காற்றில், என் மாரப்பு நழுவியது, பாவாடை மேலே பறந்தது. மாங்கனி போன்ற என் பருத்த மார்பகங்கள் குலுங்க குலுங்க, வெண்ணெயில் செய்தது போன்ற என் தொடை தெரிய ஓடினேன். 


(உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு). நா வறண்டு, மூச்சு இரைக்க தொடர்ந்து ஓடினேன், அவன் கை பிடித்திட. எங்கள் கைகள் இணையும் தருணத்தில் என் கால் பிரண்டது. நான் நிலை தடுமாறி தரையில் விழுந்தேன். விழுந்த அதிர்ச்சியில் எனக்கு மயக்கம் வந்தது. இமை மூடும் போது நான் கண்ட கடைசி காட்சி, என்னை நோக்கி வரும் மக்கள் கூட்டத்திற்கு பின்னால், ரயிலின் கடைசி பெட்டி ஸ்டேஷனை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது. அதன் பின் எல்லாம் இருண்டது. ஒரே நிசப்தம், மற்றும் இருள்.

ஒரு மின்னல் ஒளியில் 'தியா' வின் அழகிய முகம் சட்டென்று தோன்றி மறைந்தது. ஸாரி, சார். தெரியாமல் உங்க மேல ஸ்கூட்டில வந்து மோதிட்டேன். அவளின் ரம்யமான குரல் என் காதில் ஒலித்தது.

(தொடரும்...)

அன்புடன்

#nandhinisilk #நந்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக