செவ்வாய், 9 மே, 2023

தேவி விளக்கு பகுதி 05-07

தேவி விளக்கு பகுதி 05

Credit to Facebook User: Nandhini Silk | Facebook

Flashback - முன்கதை

தேவதாஸ். தாடி மீசை வளராத தேவதாஸ். நாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான என்ஜினியரிங் கல்லூரிகள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான B.E. பட்டதாரிகளில் நானும் ஒருவன். படிப்பு முடித்ததும் அப்பாவின் கடையில் உட்கார கூடாது என்பதற்காகவே சென்னை வந்தேன். கால் சென்டர் வேலை. சில வாரங்களில் வேலை பிடிக்கவில்ல, சில மாதங்களில் வாழ்க்கையே பிடிக்கவில்லை. ராஜினாமா செய்தேன். இங்க என்ன சொல்லுது? சிவகார்த்திகேயன் போல ஹீரோ ஆக வேண்டுமென்று சொன்னது. காமெடி, டான்ஸ் ஷோ ஆடிஷனுக்காக டிவி சேனல்கள் வாசலில் காத்துக்கிடந்தேன். நண்பர்களுடன் சேர்ந்து குறும்படம் எடுக்க முயற்சி செய்தேன். இப்படி சுற்றி திரிந்து கொண்டிருந்த போது தான் அந்த விபத்து நடந்தது. ஸ்கூட்டி மோதல். அல்ல. மோதிய பெண்ணின் மேல் காதல். அவள் ஸாரி சொல்லிவிட்டு போய்விட்டாள். அலைந்து திரிந்து அவளின் பெயர், ஊர், வீடு விலாசம் அனைத்தும் தெரிந்து கொண்டேன். அவள் பெயர் தியா. ஒரு வரியில் அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் டிபிகல் சிட்டி கேர்ள். எங்கு சென்றாலும் அவளை பின்தொடர்ந்தேன். அன்புத் தொல்லைகள் கொடுத்தேன். கிறுக்குத்தனமான ஹீரோயிஸங்கள் செய்து 'ஐ லவ் யூ' என்று ப்ரபோஸ் செய்தேன். அவளின் மனம் கவர்ந்தேன். அவளும் 'ஐ லவ் யூ டூ' என்று புன்னகைத்தாள். காதல் பூ மலர்ந்தது.

தேவி விளக்கு பகுதி 06

எல்லா காதல் ஜோடிகள் போல நாங்களும் பார்க், பீச், மூவி என்று சுற்றி திரிந்தோம். ஷாப்பிங் போனால் நான் செத்தேன். ஒரே மாதத்தில் என் பேங்க் பேலன்ஸ் ஜீரோ. ஒரு நாள் ஐஸ்கிரீம் பார்லரில் சந்தித்தோம். அடுத்த வாரம் அவளுடைய பிறந்தநாள் வருகிறது என்றாள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள், உனக்கு என்ன கிஃப்ட் வேணும் என்றேன். என்ன கேட்டாலும் தருவியா என்றாள். என் உயிர கேட்டாலும் தருவேன்னு சொன்னேன். அதெல்லாம் வேணாம், நீ என் பர்த்டே பார்ட்டியில டான்ஸ் ஆடணும். ம்ம்ம்.. ஆனா பெண் வேஷத்துல என்று சொன்னாள். விளையாடதடி, என்னால முடியாது என்றேன். அவள் அழுது சீன் போட்டு என்னை வற்புறுத்தினாள். என் உண்மையான காதலுக்காக நானும் ஒத்துக் கொண்டேன். அடுத்த சில நாட்கள் எனக்கு பல குத்துப் பாட்டுகளுக்கு நடன பயிற்சி வழங்கப்பட்டது. அவள் பிறந்த நாளன்று அதிகாலையில் ECRல் ஒரு ரிஸார்ட்டுக்கு அழைத்து வரப்பட்டேன். சில அழகுக்கலை நிபுணர்கள், பல மணி நேர ஒப்பனை மற்றும் தங்களின் கைத்திறனால் என்னை ஒரு கவர்ச்சி கன்னியாக மாற்றினார்கள். தங்க சிலை போன்று ஜொலிக்கும் என் தோற்றம் கண்டு எனக்கே காமம் தலைக்கு ஏறியது. அந்த நொடியிலிருந்து என் தலைவிதியும் மாறியது.

தேவி விளக்கு பகுதி 07

ஃபினிஷிங் டச் ஒரு டாட்டூ. எந்த மாதிரி வேண்டுமென கேட்டார் டாட்டூ ஆர்ட்டிஸ்ட். நானும் ஆல்பத்தில் இருந்து ஒரு டிசைன் செலக்ட் செய்தேன். அந்த டிசைனில் DEVDIYA என்று எனது பின்புறத்தில் இடுப்புக்கு மேலே எழுத சொன்னேன். அவரும் அப்படியே எழுதி, ஹார்ட் வரைய வேண்டிய இடத்தில் ஒரு கோடு போட்டு விட்டு ரெட் இங்க் எடுக்க சென்றார். அதற்குள் தியாவின் தோழிகள் வந்து நேரமாகிவிட்டது என்று என்னை பார்ட்டி ஹாலுக்கு அழைத்து சென்றார்கள். அங்கு ஒரு மேடையில் என்னை ஏற்றி விட்டார்கள். மொத்த ஹாலும் மங்கலான லைட். 20-25 பேர் கூடியிருந்தனர். நான் மேடையில் திரும்பி நின்று இருந்தேன். மியூசிக் ஆரம்பமானது. என் மீது ஃபோகஸ் லைட் போட்டனர். என் DEVIDIYA டாட்டூவை பார்த்து சிலர் சிரித்தனர். நான் மெதுவாக இடுப்பை அசைத்து ஆடத்தொடங்கினேன். நாகின் (ஹந்தி), ரிங்க ரிங்கா (தெலுங்கு), மஸ்காரா (தமிழ்) போன்ற பாடல்களுக்கு செக்ஸியாக ஆடினேன். ஆண் வேடமிட்ட சில பெண்களும் என்னுடன் ஆட்டம் போட்டனர். அவர்கள் ஆட்டத்தின் நடுநடுவே என் ஆடைகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்து சென்றனர். ஒரே கைத்தட்டல் மற்றும் விசில் சத்தம். கூட்டத்தில் இருந்து சிலர் என் மீது ரூபாய் நோட்டுகளை வீசினர். எல்லா லைட்களும் ஆன் செய்யப்பட்டது. பெரிய கேக் ஒன்றை மேடைக்கு கொண்டு வந்தனர். அப்போது தான் கவனித்தேன் அங்கு வந்திருந்த அனைவரும் இளம் பெண்கள். தேவதை போல் உடை அணிந்த ஒரு வெளிநாட்டு பெண் கேக் வெட்டினாள், தியா அவளருகில் நின்று கைதட்டி கொண்டிருந்தாள். நான் மட்டும் ஹாப்பி பர்த்டே பாடினேன். அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தனர். வெல் டண். சொன்ன மாதிரியே செய்து விட்டாய் என்று தியாவை ஆங்கிலத்தில் பாராட்டி கோல்ட் செயின் பரிசளித்தாள் ஜூலியா. இங்கு என்ன நடக்கிறது என்று குழப்பத்தில் தியாவிடம் கேட்டேன். உன்னை மாதிரி ஒரு ஸிஸ்ஸி (sissy) ஐ இப்படி டான்ஸ் ஆட ஏற்பாடு பண்ணுணதுக்கான பேமென்ட் இந்த செயின் என்றாள். உன்னோட பேமென்ட் என்று கூறி 2000 ரூபாய் நோட்டை என்னிடம் நீட்டினாள். கீழே கிடக்குற நோட்டெல்லாம் உனக்கு கிடைச்ச டிப்ஸ் என்று கூறி சிரித்தாள் தியா. அவமானத்தால் எனக்கு கோபம் பொங்கியது. அவளை அடிக்க பாய்ந்தேன். ஜூலியாவின் பாடிகாட்ஸ் என்னை அலேக்காக தூக்கிச் சென்றனர். ஸ்டோர் ரூமில் என்னை கட்டி வைத்தார்கள். சிறிது நேரம் கழித்து அங்கே தியா வந்தாள். என்னடி தேவிதியா எப்படி இருக்க? என்ன நடக்குதுன்னு புரியலயா? சொல்றேன் கேளு. இது என் பர்த்டே பார்ட்டி இல்ல, என் ஃபாரின் ஃபிரண்ட் ஜூலியாவின் பேச்சலரேட் பார்ட்டி (Bachelorette Party). ஜூலியா அவளோட பேச்சலரேட் பார்ட்டியை வித்தியாசமா கொண்டாட ஆசை பட்டா. எப்படி பாய்ஸ் பேச்சுலர் பார்ட்டியில ஐட்டம் கேர்ள்ஸை வரவச்சு ஸ்ட்ரிப் டீஸ் டான்ஸ் (ஆடை அவிழ்ப்பு நடனம்) ஆட வைக்கிறாங்களோ அதே மாதிரி நாம பாய்ஸ்ஸ லேடி கெட்-அப்ல ஆட வைப்போம்னு நான் ஐடியா கொடுத்தேன். ஜூலியா ரொம்ப ஹாப்பி ஆயிட்டா. சொன்னது மாதிரி செஞ்சா எனக்கு தங்க செயின் கிஃப்ட் பண்ணறேனு சொன்ன ஜூலியா. காசுக்காக எந்த ஆம்பளையும் பொட்டச்சி வேஷம் போட்டு ரிக்கார்டு டான்ஸ் ஆடமாட்டான். அதான், லவ் லவுனு பொண்ணுங்கள டார்ச்சர் பண்ற உன்ன மாதிரி வெட்டி பசங்க லிஸ்ட் எடுத்தோம். அதுல ஸ்லிம்மா, அழகா இருந்த உன்ன பிளான் போட்டு தூக்குனோம். யூஸ் பண்ணிகிட்டோம். எங்க பிளான்ல இல்லாம தானா நடந்தது உன்னோட அந்த சூப்பர் டாட்டூ தான்டி என்று சிரித்தாள். ஸ்வீட் ட்ரீம்ஸ் ஸிஸ்ஸி. Bye சொல்லிவிட்டு சென்று விட்டாள். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம், அவமானம் என்று ஒட்டு மொத்த அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான். பாடிகாட் உள்ளே வந்து எனக்கு மயக்க ஸ்பிரே அடித்தான். நான் மயங்கி விழுந்தேன். என் வாழ்க்கையே இருண்டு போனது.

(தொடரும்...)

அன்புடன்

#nandhinisilk #நந்தினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக