சனி, 4 நவம்பர், 2023

ஆண் சிங்கம் - பெண் மான் P7


அலுவலகத்தில் எனது டீம் மெம்பெர்ஸ் அனைவரும் இப்போது அவளுக்கு கீழே வேலை பார்க்கிறார்கள். அவள் மட்டுமே எனக்கு நேரிடையாக ரிப்போர்ட் செய்கிறாள். அவள் என்னதான் அவர்களை அதட்டி, மிரட்டி, திட்டி எல்லாம் வேலை வாங்கினாலும், அப்படி அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு அவள் எப்போதும் உரிமை எடுத்து கொள்வதில்லை. என்னிடமும் மற்றும் எங்கள் மேலதிகாரிகளிடம் அவர்கள் செய்த வேலைக்கான பாராட்டுதல்களை வாங்கி கொடுத்து விடுவாள். அவர்களுக்கு உண்டான ஊதிய உயர்வு கிடைக்கும்படி செய்வாள்.

அதனால் என் டீம் மெம்பெர்ஸ் அனைவரும் அவளிடம் வேலை செய்வதை பெருமையாக நினைத்து கொண்டு அவளுக்கு அடி பணிந்து மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வார்கள். அவள் காலால் இட்ட வேலையை தலையால் செய்து கொடுப்பார்கள். நல்லா பண்ணி இருக்க என்று அவள் பாராட்டும்போது, வயதான ஆண்கள் கூட வெட்கம் பார்க்காமல் மற்றவர்கள் பார்த்து கொண்டு இருக்கும்போதே அவள் பாதம் பணிந்து, எல்லாம் நீங்க போட்ட பிச்சை அம்மா என்று சொல்லி கும்பிடுகிறார்கள். அதை யாரும் தப்பாக எடுத்து கொள்ளாத வகையில் இருக்கிறது அவள் அவர்களை வேலை வாங்கும் விதம்.

எனவே விரைவில் எனக்கு சரி சமமாக அவளுக்கு மேனேஜர் ஆக பதவி உயர்வு கிடைத்து விட்டது. அவள் அதே இடத்தில தொடர, நான் வேறு டீமுக்கு மாற்ற பட்டேன்.

இதற்கிடையில் கோரோனோ வந்து விட நாங்கள் எல்லோரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை வர, அதுதான் சமயம் என்று வசந்தா குழந்தை பெற்று கொள்ள முடிவு எடுத்தாள்.

வீட்டில் இருந்தே வேலை செய்வதால், என்னுடன் சேர்ந்து என் அம்மா மற்றும் மாமியார் நன்கு கவனித்து கொள்ள, அவளது அலுவலக டீம் மெம்பெர்ஸ் இன்னும் நன்கு புரிதலுடன் ஒழுங்காக வேலை செய்து கொடுக்க, அவள் வேலையில் எந்த தொய்வும் இல்லாமல் குழந்தையும் பெற்று எடுத்து விட்டாள்.

அதே நேரம், அதுவும் வீட்டில் இருந்தே வேலை செய்யும் போது இன்னும் பெண்மை உணர்வு அதிகம் சேர்ந்து கொள்ள, நான் முன்பு போல அதட்டி, மிரட்டி வேலை வாங்க முடியாமல், கனிவாக நடந்து  கொள்வதால், என்னால் எனது புதிய டீம் இடம் அதிகம் வேலை வாங்க முடியாமல், எனது டீம் செயல் திறன் குறைவாக இருந்தது.

வசந்தாவுக்கு அவளது டீம் மெம்பெர்ஸ் நன்கு வேலை செய்து கொடுத்த காரணத்தால், கோரோனோ காலத்திலும் அவளின் டீம் நன்கு வேலை செய்து கம்பனிக்கு அதிக லாபத்தை ஈட்டி கொடுத்தது. அதனால் விரைவில் சிறந்த வேலை செயல் திறன் உடையவளாக மேலிடம் கருதி அவளுக்கு சீனியர் மேனேஜர் பதவி உயர்வும் கொடுத்தார்கள்.

அதே நேரம் ஒட்டு மொத்தமாக அலுவலகத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு செயல் திறம் குறைவாக உள்ள சில பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்தார்கள். அதில் எனது பெயரும் உள்ளது என அறிந்து மிகவும் கவலை கொண்டேன். இந்த வயதில் வேலை போனால் அதிலும் செயல் திறன் குறைவான காரணத்தால் என்று தெரிய வரும் போது புது வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்புதான் என்று எனக்கு நன்கு புரிகிறது.

என் நிலையை அறிந்து கொண்ட அம்மாவும், மாமியாரும் கூட என்னிடம் பரவா இல்லைடி, அதுதான் உன் புருஷன் வசந்தாவுக்கு இப்போது சீனியர் மேனேஜர் ஆக பதவி உயர்வு கிடைத்து உள்ளதால், நல்ல சம்பளம் கிடைக்கும். நீ வேலைக்கு போய் என்ன கிழிக்க போறே. பேசாம வீட்டோட முழு நேர பொண்டாட்டியா இருந்து உன் புருஷனையும், குழந்தையையும் நன்கு பார்த்துக்கோ என்று சொல்கிறர்கள்.

வசந்தா எனது நிலையை பார்த்து பரிதாப பட்டு ஒரு யோசனை சொல்கிறாள். அவள் சீனியர் மேனேஜர் ஆக பதவி உயர்வு பெற்றதால், அவள் இடத்துக்கு ஒரு மேனேஜர் வேண்டும். பேசாம நீயே ஏன் அந்த இடத்துக்கு வந்து விட கூடாது என்று. நான் மேலிடத்தில் சொன்னால் அவர்கள் கேட்பார்கள் என்ன சொல்கிறாய் என்று.

அம்மா மற்றும் மாமியார் இன்னும் ஆக்ட்டிவாக இருப்பதால் சுதாவுக்கு முழு நேர பொண்டாட்டியாய் வீட்டு வேலை பார்க்கும் தேவை இல்லை என்று என் அம்மாவிடமும், மாமியாரிடமும் சொல்லி அவர்களையும்  சம்மதிக்க வைத்து விட்டாள். அதனால் வேறு வழியின்றி அவளின் கீழே வேலை செய்ய சம்மதித்தேன்.

இப்படியாக இப்போது நானே அலுவலகத்திலும், அவளுக்கு கீழே வேலை செய்பவனாக மாறி விட்டேன். ஒரு காலத்தில் எனக்கு கீழே வேலைக்கு சேர்ந்தவள் இன்று எனது மேல் அதிகாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக