புதன், 8 நவம்பர், 2023

ஆண் சிங்கம் - பெண் மான் P9 - இறுதி பகுதி


இப்போதெல்லாம் வீட்டில் பெண்கள் உடை அணிய அதிகம் வாய்ப்பு இல்லாததால், அலுவலகத்தில் பொட்டச்சியாக இருக்க ஆசை படுவதாக என் விருப்பத்தை அவளிடம் சொல்லி அவள் என்ன ஏற்பாடு செய்ய போகிறாளோ என்று ஆவலுடன் காத்து கொண்டு இருந்தேன் அல்லவா.

அப்போது ஒருநாள் எங்கள் டீம் மெம்பெர்ஸ் எல்லோரும் கலந்து கொள்ளும் ஒரு டீம் எங்கேஜ்மெண்ட் பிரைவேட் பார்ட்டி நடக்க ஏற்பாடு செய்தாள் வசந்தா. அந்த பார்ட்டிக்கு என அவள் சொன்ன டிரஸ் code என்னவென்றால், அத்தனை ஆண்களும் பெண்கள் உடையில் வர வேண்டும் என்பதாகும். ஒரு வித்தியாசமான, வேடிக்கை நிகழ்ச்சி என்பதால் அதில் யாரும் வெட்கப்பட தேவை இல்லை என்று சொல்லி விட்டாள்.

வேடிக்கை நிகழ்ச்சிகளை அவளே தயார் செய்து இருந்ததால், அவள் முன்னேற்பாடாக புடவை எல்லாம் கொண்டு வந்து இருந்தாள். சொல்ல போனால் இதுவே அவளின் ஐடியா தான், என் ஆசைப்படி என்னை என் டீம் மெம்பெர்ஸ் முன்பு பெண்கள் உடையில் நிற்க வைக்க இதுவே நல்ல வாய்ப்பு என்று கருதி. இப்படி ஒரு நிகழ்ச்சி வரும்போது அந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ள நானும் முடிவு செய்தேன், அவளும் அதற்கு சம்மதித்ததால்.

அந்த நிகழ்ச்சி வரும்போது வசந்தா தெளிவாக சொல்லி ஆரம்பித்தாள்: நான் இதனை காலமாக ஆண் உடை அணிகிறேன். என்னை போல பல பெண்கள் ஆண்  உடைகளை அணிகிறார்கள், அதனால் நாங்கள் ஆண்களாக மாறி விட்டோம் என்று இல்லை. அதே போல நீங்கள் பெண்கள் உடை அணிவதால் பெண்கள் என்று ஆகி விடாது, பொட்டை என்றும் கருத பட மாட்டீர்கள்.   

இதற்கு எனது கணவர் - உங்கள் மேனேஜர் சுதாகர் அவர்களே சாட்சி. அவரையே முதலில் அணிய சொல்கிறேன் என்று சொல்லி என்னை அனைவரின் முன்னிலையில் புடவை அணிய வைத்தாள்.

நானும் வெட்க படுவது போல நடித்து கொண்டே ஆசையுடன் புடவை அணிந்து கொண்டு வந்து பெண்களை போல நடை பயின்றேன். அனைவரும் என்னை பார்த்து வாயை பொத்தி சிரித்து கொண்டே பிறகு தாங்களும் அங்கு இருந்த புடவைகளை கட்டி கொண்டார்கள்.

சில ஆண்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழி இன்றி பாஸ் மேடம் சொல்வதை தட்ட முடியாமல் அணிந்து கொண்டார்கள். அப்படி சிலர்  ஒரு கட்டாயத்துடன் அணிந்து உள்ளதை அறிந்ததும், வசந்தா வேண்டுமென்றே அவர்களுக்கு மென்மேலும் பெண்களுக்கான வேலைகளாக கொடுத்து செய்ய வைத்தாள் - எல்லோருக்கும் ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுப்பது, பார்ட்டி நடக்கும் இடத்தை பெருக்கி சுத்த படுத்துவது, புடவை அணிந்தவுடன் ஏற்கனவே நாங்கள் போட்டு இருந்த பாண்ட் ஷர்ட்ஐ கழட்டி போட சொல்லி விட்டாள். அப்படி நாங்கள் கழட்டி போட்ட துணிகளை மடித்து வைப்பது போன்ற வேலைகளை எல்லாம்.

நானெல்லாம் ஒரு காளை, சிறந்த ஆம்பிளைடா என்ற திமிரோடு வலம் வந்து கொண்டு இருந்த அந்த சில ஆண்களும், ஏற்கனவே தங்களை விட வயதில் குறைந்த ஒரு சின்ன பெண்ணிற்கு கீழே வேலை செய்ய வேண்டி உள்ளதே என்ற கட்டாயத்தில் அவள் திட்டினாலும் மனதுக்குள் பொருமி கொண்டு, பல்லை நற நற வென்று கடித்து கொண்டு வேலை செய்கிறவர்கள், இப்போது வேறு வழியின்றி பொட்டச்சியாக புடவை அணிந்து வேலை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள்.

அப்போது அங்கு ஒரே ஒரு பெண், வசந்தா கம்பீரமாக ஆண் உடையில் கால் மேல கால் போட்டு அமர்ந்து இருக்க, என் டீம் மெம்பெர்ஸ் அத்தனை பேரும் புடவை கட்டி கொண்டு பொட்டச்சிகளாக அவளின் முன்பு வரிசையாக நடந்து வந்து குனிந்து அவளின் பாதம் தொட்டு வணங்கி கும்பிடுகிறோம்.

பிறகு நாங்கள் அனைவரும் எதிரில் நிற்க, அவள் விளையாட்டாக பேசுவது போல சிரித்து கொண்டே, எண்ணங்கடி பொட்டச்சிங்களா வாங்கடி selfie எடுத்து கொள்வோம் என்று எங்களை எல்லாம் புடவையில் போட்டோ எடுத்து கொண்டாள் - தனித்தனியாக, மொத்த குரூப் ஆக - அவள் மட்டும் அமர்ந்து இருக்க நாங்கள் எல்லோரும் நின்று கொண்டு இருப்பது போல.

பிறகு இதுவே நன்றாக உள்ளது, எண்ணங்கடி இன்று முழுவதும் இப்படியே இருக்கீங்களா என்று கேட்டாள், பெரும்பான்மையான ஆண்கள் அனைவரும் உங்கள் விருப்பம் போல மேடம் என்று சொல்ல, உடனே அவள் இனிமே என்னை மேடம் என்று கூப்பிட வேண்டாம், நான்தான் ஆம்பிளை டிரஸ் போட்டு கிட்டு இருக்கேன், நீங்க எல்லாம் பொட்டச்சிகளாக இருப்பதால் இனிமேல் என்னை பாஸ் என்று அழையுங்கள் என்று உத்தரவு இட்டாள். நாங்களும் அப்படியே ஆகட்டும் பாஸ் என்று கோரஸாக சொன்னோம்.

அன்று எங்கள் டீம் மெம்பெர்ஸ் முன்னிலையில் நான் புடவை உடுத்தி ஆசை தீர என் புருஷன் வசந்தாவுக்கு பணிவிடை செய்தேன், ட்ரிங்க்ஸ் எடுத்து கொடுப்பது, சாப்பாடு தட்டில் போட்டு எடுத்து செல்வது, அவள் சாப்பிடும் எச்ச தட்டை வாங்கி கொண்டு சென்று அதை நிரப்பி கொடுப்பது என்று. அவள் கை கழுவியதும் என் புடவை முந்தானையில் துடைத்து கொண்டாள்.

அப்புறம் எல்லோரும் கேட்கும்படி, என்னடி சுதா, இன்னிக்கு நீ என் பொண்டாட்டி, நான்தான் உன் புருஷன், அதுனால் இப்ப நான் சாப்பிட்ட எச்ச தட்டுல சாப்பிடுவியாடி என்று விளையாட்டாக கேட்பது போல கேட்க, நானும் வெட்கமே இன்றி, புருஷன் தட்டுல சாப்பிடுறது பொண்டாட்டிக்கு கிடைத்த  பாக்கியம் என்று சொல்லி அனைவரின் முன்பு அவளின் காலடியில் அமர்ந்து அவளின் எச்ச தட்டில் நான் சாப்பிட்டேன்.

அன்று அந்த நிகழ்ச்சி முடிவு பெறும்போது, நாங்கள் மீண்டும் ஆணுடையில் இருக்க, அவள் பேசினாள், இன்று நடந்ததை ஒரு விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டும், உங்களுக்கு பிடித்து இருந்தால், இதே போல உங்கள் பொண்டாட்டிகளிடம் விளையாடி கொள்ளுங்கள். நீங்கள் விருப்ப பட்டால், வாரத்தில் ஒரு நாள் நம் அலுவலகத்தில் இதே போல இருக்கலாம் என்று சொல்ல, அனைவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அலுவலத்துக்கு புடவை அணிந்து வருவது கட்டாயம் என்று அதிகாரபூர்வமாக சொல்ல முடியாததால், நான்கு ஆண்கள் முதல் வாரம் வழக்கமான பாண்ட் ஷர்ட் டில் வந்து இருந்தனர். நான் உட்பட ஏழு ஆண்கள் புடவை அணிந்து இருந்தோம். வசந்தா அந்த நான்கு ஆண்களை நன்கு அதட்டி மிரட்டி வேலை வாங்கினாள் அன்று மிகவும் கடுமையுடன் மீட்டிங்கில் புடவையணிந்த எங்கள் முன்னால், உங்களை எல்லாம் எதுக்குடா ஆம்பிளைங்கனு சொல்லிக்கிட்டு சுத்துறீங்க, வெட்கமா இல்லை என்றெல்லாம் கடிந்து கொண்டாள். அவர்கள் முகம் சிறுத்து விட்டது. அதே சமயம் எங்களிடம் கனிவாக நடந்து கொண்டாள். தவறு செய்து இருந்தாலும் சொல்லிக் கொடுத்து சரி செய்ய வைத்தாள். பின்பு மீட்டிங் முடிந்து வெளியே வந்தவுடன் மற்றவர்கள் அவர்களுக்கு புரிய வைத்தனர்.

அவள் கொடுத்த வேலையை திரும்பி செய்து அதை காண்பிக்க செல்லும்போது, வேறு வழியின்றி புடவை அணிந்து சென்று, அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அவள் குறும்பாக சிரித்து கொண்டே, எங்கடா போச்சு உங்க ஆம்பிளை வீரம் என்று முதலில் கேலி செய்து, பிறகு இப்பத்தாண்டா அழகா இருக்கீங்க பொட்டச்சிங்களா என்று சொல்லி அவர்களை அப்போது கொஞ்சம் அனுதாபத்துடன் பேசி அனுப்பி வைத்தாள். அதன் பிறகு அடுத்த வாரத்தில் இருந்து அந்த திமிர் கொண்ட ஆண்களும், தன்னாலே புடவை அணிந்து வர தொடங்கினர்.

அவள் இந்த டீம் மெம்பெர்ஸ் இடம் இப்படி நடந்து கொள்வதை அறிந்த மற்றொரு டீம் மெம்பெர்ஸ் கூட அவள் சொல்லாமலே தங்களுக்குள் கூடி பேசி வாரத்தில் ஒரு நாள் பெண்கள் உடை அணிந்து வர தொடங்கினர். இப்படியாக அலுவலகத்தில் எல்லோரும் குறைந்தது ஒரு நாள் பெண்கள் உடை அணிவது வழக்கமாகி விட்டது. புடவை மட்டும் என்றில்லாமல் - சுடிதார், லெக்கிங்ஸ், ப்லோரல் டாப்ஸ் என்று அணிந்து வருகின்றனர். 

இப்படியாக வாரத்தில் ஒரு நாள் அவள் என்னை மட்டும் இல்லை, எனது அலுவலத்தில் உள்ள அணைத்து ஆண்களையும் பொட்டச்சிகளாக மாற்றி அதிகாரம் செய்து மகிழ்கிறாள். அப்போது பெண்மையின் மகத்துவம் பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பாள்.

எங்கள் அலுவலத்தில் ஒரே பெண்ணான வசந்தா ஆண் உடை அணிந்து கெத்தாக கம்பீரமாய் ஆண்மையின் வீரத்துடன் கால் மேல கால் போட்டு அமர்ந்து இருக்க, அணைத்து ஆண்களும் பெண்கள் உடை உடுத்தி அவள் முன்னே பொட்டச்சிகளாய் கை கட்டி நின்று அவள் எடுக்கும் பாடங்களை கேட்டு கொண்டு இருப்போம்.

இப்படியாக எங்கள் அலுவலத்தில் அணைத்து ஆண்களும் பெண்கள் உடை அணிய ஆரம்பித்த உடன், எங்கள் இருவரின் ஆசைப்படி இப்போதெல்லாம் நான் தினமும் பெண்கள் உடை அணிந்து வர தொடங்கினேன். 

அதன் பிறகு அடுத்து நடந்த பேமிலி பார்ட்டியில் எங்கள் டீம் மெம்பெர்ஸ்ன் மனைவிகள் முன்பு அணைத்து ஆண்களையும் புடவை அணிந்து பொட்டச்சிகளாக வர வைத்தாள்.

அப்போது அவர்களின் மனைவிகள் இப்போது புரிகிறது எங்கள் கணவர்கள் வீட்டில் இப்போதெல்லாம் முன்பு போல இல்லாமல் எங்களுக்கு மரியாதை கொடுத்து மதிப்போடு நடத்துவது எதனால் என்று. எல்லாம் மேடம் உங்கள் கைங்கர்யம் தானா என்று சொல்லி ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள், தங்கள் கணவர்கள் எந்தவித கூச்சமும் இன்றி புடவை அணிந்து நிற்பதை.

தங்கள் புருஷர்கள் இப்போதெல்லாம் தங்களுக்கு மரியாதை கொடுத்து நடத்துவதாகவும், தங்கள் வாழ்க்கை சந்தோசமாக இருப்பதாகவும் எங்கள் அணியின் மனைவிமார்கள் சொல்வதை கேட்கும்போது வசந்தா மனதுக்குள் சிரித்து கொள்கிறாள்.

அத்துடன் தனது டீம் மெம்பெர்ஸ்-ஐ பார்த்து சொல்கிறாள்: பெண்களை மதித்து நடப்பதே நல்ல ஆண்களுக்கு அழகு. ஆண்கள் அனைவரும் ஒரு நாளாவது பெண்ணாக வாழ்ந்து பார்த்தால் தான் அவர்களின் அருமை புரியும். நீங்கள் அந்த வகையில் பொட்டச்சிகள் என்று புடவை கட்டி கொண்டதோடு மட்டுமில்லாமல், வீட்டில் உங்கள் பொண்டாட்டிக்கு உதவி செய்ய ஆரம்பித்து விட்டர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. உண்மையில் நீங்கள்தான் மிகவும் சிறந்த ஆண்கள் என்று சொல்லி மிகவும் பாராட்டுகிறாள்.

அங்கே இருக்கும் அனைவரும் (நான், வசந்தா, டீம் மெம்பெர்ஸ் மற்றும் அவர்களின் மனைவிகள்) சந்தோசமாய் சிரிக்கிறோம்.

இப்படித்தான் சென்று கொண்டு இருக்கிறது எங்கள் வாழ்க்கை. ஆண் சிங்கம் இப்போது பெண் மானாக, பெண் மான் சிங்க பெண்ணாக, இல்லை இல்லை ஆண் சிங்கமாக.

2 கருத்துகள்:

  1. Please write atleast one story in English so we can also enjoy your stories

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Unfortunately, I can't bring the emotions in English as much I used to get it in my mother tongue Tamil. That's the reason I write stories in Tamil only. Hope you got my point of view. Regret I could not fulfill your wishes. Though I have kept the translation tool bar, I know it doesn't translate as it is written in Tamil. I tried to translate my story in English one day to match to original as written in Tamil. But since my stories are too long, it is difficult to translate the entire story in English.

      நீக்கு