ஸ்ரேயா செல்லும் வழியில் பெண்கள் சிலர் குளித்து விட்டு சாலையில் கோலம் போட்டு கொண்டிருந்தனர். கோலத்தின் மேல் ஏற்றாமல் ஸ்ரேயா லாவகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு, கருத்தடை மாத்திரை வாங்க எந்த மருந்தகம் செல்லலாம் என்ற யோசனையில் சென்று கொண்டிருந்தாள். நேராக மருந்தகம் சென்று கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் வாங்கிக் கொண்டு ஹாஸ்டலை வந்தடைந்தாள். பைக் ரேஸ் பயிற்சிக்கு போகலாம் என்று எண்ணியிருந்த ஸ்ரேயா, கருத்தடை மாத்திரை உட்கொள்ள போவதால் மேலும் இரண்டு நாள் பயற்சியை தள்ளி வைக்க முடிவு செய்தாள்.
வினோத்தும், ஸ்ரேயாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் போனில் பேசி வந்தனர். இரண்டு
நாள் கழிந்தது. திரும்பவும் இரவில் சந்திக்க முடிவு செய்தனர். மறுபடியும்
சந்தித்து தங்கள் இட்சையை தீர்த்துக் கொண்டனர். இரவெல்லாம் சரியாக தூங்காததால்
அவளால் பயிற்சியில் சரியாக ஈடுபட முடியவில்லை. ரேஸ் டிராக்கில் முன்பு பைக்
ஓட்டியதை போல அவளால் இப்போது பைக்கை வேகமாக ஓட்ட முடியவில்லை.
இப்படியே சில நாட்கள் சென்றது. தன்னை அறியாமல் வினோத்தை நேசிக்க
ஆரம்பித்து விட்டாள். வினோத்திற்கும் அவள் மீது காதல் இருக்கவே,
இருவரும் இரவு நேரங்களில் பின்னி பிணைந்தே இருந்தனர். ஸ்ரேயாவும் உடல் சுகத்திற்கு
அடிமையாகி விட்டாள். இதனால் அவள் பைக் ரேஸ் பயிற்சி பாதிக்கபட்டது. பயிற்சியாளர்
கோபமடைந்து அவளுக்கு பயிற்சி அளிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ஸ்ரேயா இதனால்
மனமுடைந்து போனாள். என்ன செய்வது என்று தெரியாமல் அவள் தாய் மாலதிக்கு போன் செய்து
பேசலாம் என்று எண்ணினாள்.
ஸ்ரேயாவிற்கு அவள் தாய் டாக்டர் மாலதி மேல் சிறு வயதிலிருந்தே
வெறுப்பு. குழந்தை பருவத்தில் அவளை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தது தான்
காரணம். லீவ் நாட்களில் தான் அம்மாவின் அரவணைப்பு கிடைத்தது. மற்ற தாய்மார்களை போல
அவளுக்கு மாலதி எதுவும் சமைத்து கொடுத்ததில்லை. ஆனால் அவளுக்காக எவ்வளவு
வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருந்தாள் அவளது தாய். இப்போதிருந்த மன
நிலையில் மனம் விட்டு பேச யாரும் இல்லாததால் அவள் தாயை அழைத்தாள்.
மாலதி
போன் செய்யும் போதெல்லாம் ஏதாவது ஒரு முறை தான் ஸ்ரேயா போனை எடுத்து பேசுவாள்.
தினமும் மாலதி அனுப்பும் மெசேஜ்க்கு மட்டும்தான் பதில் அனுப்புவாள் ஸ்ரேயா. ஆனால்
மாலதி, தன் மகள் அழைத்தாள், எவ்வளவு முக்கியமான நேரத்திலும் போனை எடுத்து விடுவாள்.
டாக்டர் மாலதி: என்ன டார்லிங் எப்படி இருக்க? Is everything ok there?
ஸ்ரேயா: Mummy, I am kind of Confused. எந்த
பக்கம் போனாலும் dead end
ஆ
இருக்கு. I have So many
problems. நான் உங்க hospital
க்கு work
பண்ண
வரலாம்னு இருக்கேன்.
மாலதி: Of course, இந்த ஹஸ்பிட்டலே
உனக்கு தான். நீ எப்போ வேணும்னாலும் வரலாம். But Bike Racing உன்னோட பேஷன் ஆச்சே! நீ எதுக்கு அதுல ஆர்வம் காட்டாம work பண்ணனும்னு நினைக்கற?
ஸ்ரேயா: Racing பொண்ணுங்களுக்கு
ஏத்தது இல்லை Mom!
அதெல்லாம்
ஆம்பளங்களுக்கு தான் சரிவரும்.
மாலதி: Don't talk like a stupid. உன் கூட
பைக் ரேஸ் practice பண்ணற so called ஆம்பளங்க யாரும்
உன்னோட lap time பக்கதுல
கூட வர முடியல. நியாயமா பாத்தா அவங்க தான் பைக் ஓட்டறத விட்டுட்டு புடவை கட்டிட்டு
வீட்டோட இருக்கனும். Why
don't you move-in here? நான் உன் bank
account ல காசு போட்டாலும் நீ அதை கம்மியாதான் செலவு பண்ணற. உனக்கு என் கூட
தங்க விருப்பம் இல்லை. சரி. எதாவது ஸ்டார் hotel இல்லை, நல்ல Serviced
apartment ல தங்கறதுக்கு என்ன?
ஸ்ரேயா
மெளனமாக இருந்தாள்.
மாலதி: I think you have a lot of problem.
அம்மா
கிட்ட ஓப்பனா சொல்லு. ஒன்னு ஒன்னா Clear பண்ணலாம். உன்னோட பைக் ரேஸ் பிராக்டிஸ்
என்ன ஆச்சு?
ஸ்ரேயா
அழுகையை அடக்கிக் கொண்டு, "Performance
சரியில்லைனு
கோச் வர வேண்டாம்னு சொல்லிடாங்க மம்மி"
மாலதி:
நீ நாளை இருந்து attend பண்ண
ஆரம்பி. உன் ரேஸிங் அகடமில எனக்கு தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க. நான் recommend பண்ணறேன்.
ஸ்ரேயா:
அந்த அகடமி Coach தான் mom அதுக்கு owner. அவருக்கு recommendation சுத்தமா பிடிக்காது. CM recommend செஞ்ச ஒருத்தனயே
சேர்த்துக்கல.
மாலதி:
யாரு. அந்த பிரபாகரன் தான? அவனுக்கு நீ என்னோட பொண்ணுனு தெரியாது இல்லையா.
ஸ்ரேயா:
ஆமாம்.
மாலதி
சரித்தாள். "சரியா போச்சு போ. இதுக்கா நீ பைக் ரேஸிங் ஒத்து வராதுனு சொன்ன? நீ இப்போவே அவனுக்கு போன் போட்டு, எங்க அம்மா டாக்டர்
மாலதி உங்க கூட பேசனும்னு சொன்னாங்க னு தெளிவா சொல்லி பாரு.
ஸ்ரேயா
தயங்கினாள்.
மாலதி:
நல்ல பொண்ணுமா நீ. சின்ன விஷயத்தை போட்டு குழப்பிட்டு இருக்க. உன்னோட மத்த
பிரச்சனைகள் என்னனு என்னால யூகிக்க முடியுது. அத பத்தி நாம அப்புறம் பேசலாம்.
முதல்ல இந்த விஷயத்தை நீ செஞ்சு முடி.
ஸ்ரேயா,
அவளது
ரேஸிங் கோச்சுக்கு போன் செய்தாள்.
ஸ்ரேயா:
கோச், எங்க அம்மா உங்கள தெரியும்னு சொன்னாங்க. உங்க கூட பேசனும்னு
சொன்னாங்க.
கோச்,
சற்று
எரிச்சலுடன், "யாரு உங்க அம்மா? என்று கேட்டான்.
ஸ்ரேயா:
அவங்க ஒரு டாக்டர். பேரு மாலதி.
மறுமுனையில்
1-2 நொடி சத்தத்தை காணோம்.
கோச்:
மாலதி மேடம் பொண்ணா நீ! என்னம்மா சொல்லற! நீ ஏன் இதை
இவ்வளவு நாள் என்கிட்ட சொல்லல? நீ முதல்ல இங்க கிளம்பி வா. உன்னோட ரேஸிங் Suit ஐ எடுத்துட்டு
வந்துடு மறக்காம.
ஸ்ரேயா இவ்வளவு சீக்கிரமாக இது முடியும் என்று நினைத்து கூட
பார்க்கவில்லை. பெரிய பிரச்சனை என்று நினைத்தது, ஒரு நிமிட போன்
காலிலேயே முடிந்துவிட்டது. ஸ்ரேயாவிற்கு கோச்சிடமிருந்து போன் வந்தது.
கோச்
பிரபாகரன்: நான் அவசரத்துல மேடம் நம்பர் வாங்க மறந்துட்டேன் அம்மா பக்கத்துல இருந்தா
போன் அவங்ககிட்ட குடுக்கறயா?
ஸ்ரேயா:
அம்மா இப்போ பக்கத்துல இல்லை சார். நான் வேணும்னா Conference கால் போடவா?
அம்மாவும்,
பிரபாகரனும் என்னதான் பேசி கொள்வார்கள் என்று அவளுக்கு கேட்க ஆர்வமாக இருந்தாள்.
ஸ்ரேயா: Mummy! பிரபாகரன் சாரும் லைன்ல
இருக்காரு.
மாலதி:
எப்படிடா இருக்க பிரபா!
பிரபாகரன்:
மேடம்! நான் நல்லா இருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க?
மாலதி:
இதென்னடா புது பழக்கம் மேடம்னு கூப்பிட்டுட்டு. அக்கானு கூப்பிடுடா.
பிரபாகரன்:
ஐய்யோ அக்கா. ரொம்ப வருஷம் ஆயுடுச்சு. அதான் சட்டுனு அக்கானு கூப்பிட வரல. சாரி
அக்கா. உங்க பொண்ணுனு தெரியாம போச்சு. பாப்பாவும் என்கிட்ட இப்போதான் சொல்லறா.
மாலதி:
அவ அப்படிதான்டா. வித்தியாசமா இருக்கா. அவ திறமையை வெச்சுதான் எதுலயும் முன்னேறனும்னு நினைக்கறா. அவளுக்கு என்ன பத்தி கூட முழுசா எதுவும்
தெரியாது.
பிரபாகரன்:
அவ நல்லா தான் பைக் ஓட்டறா அக்கா. இனிமேல் நான் அவளை நல்லா பாத்துக்கறேன்.
மாலதி:
சரி டா. அவளுக்கு சில பிரச்சனைகள் இருக்கு. நான் அதை சரி செஞ்சுடறேன். நேரம்
கிடைக்கும் போது உன்னை academy
ல சந்திக்கிறேன்.
பிரபாகரன்:
நிச்சயமா அக்கா. நீங்க அவசியம் வரணும்.
ஸ்ரேயாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது. அவள் பைக் ரேஸ் அகெடமிக்கு
சென்று தன் கோச் பிரபாகரனை சந்தித்தாள்.
பிரபாகரன்:
வா மா ஸ்ரேயா! உங்க அம்மா கிட்ட ரொம்ப நாளைக்கு
அப்புறம் பேசினதுல சந்தோஷம்.
ஸ்ரேயா:
எங்க அம்மாவை உங்களுக்கு எப்படி தெரியும் சார்?
பிரபாகரன்:
உங்க அப்பா அம்மாவுக்கு கல்யாணம் ஆன சமயம் எனக்கு 15 வயசு. நான் அவங்க பக்கத்து வீட்டில தான் இருந்தேன். சமைக்கிறது,
பாத்திரம்
தேய்கிறது எல்லாம் பொம்பளங்க சமாச்சாரம்னு இருந்த அந்த காலத்துலயே, உங்க
வீட்டுல மட்டும் உங்க அப்பாதான் சமையல் பண்ணுவாங்க, வீட்டு வேலைகளை
செய்வாங்க. உங்க அம்மா அந்த காலத்துலயே அவ்வளவு நல்லா பைக் ஓட்டுவாங்க. ஆம்பளங்க
பல பேர் சைக்கிள் ஓட்டிட்டு இருந்த காலம் அது. புல்லட் ஓட்டறது ஆம்பளங்களுக்கே
பெரிய விஷயமா இருக்கும் போது உங்க அம்மா தைரியமா தெருவுல புல்லட் ஓட்டிட்டு வருவாங்க. எனக்கு பைக் ஓட்ட கத்து குடுத்ததே உங்க அம்மாதான். ஓட்டறது
மட்டும் இல்லாம, ரேஸ்லயும் கலந்துக்க ஆரம்பிச்சாங்க. அங்க ரேஸ்ல கலந்துக்கிட்டா முதல் இடம் அவங்களுக்குதான் என்ற நிலை உருவாச்சு.
ஸ்ரேயா:
என்ன சொல்லறேங்க கோச்? எங்க அம்மாவும் ஒரு பைக் ரேஸரா?
பிரபாகரன்:
சாதாரண பைக் ரேஸர் இல்லம்மா. அவங்களுக்கு அதுல பெரிய passion இருந்தது. பொம்பளக்கு
பின்னால பைக் ரேஸ் முடிச்சு 2nd prize வாங்க வெக்கப் பட்டுட்டு ஒரு ரேஸ்ல ஆண்கள் எல்லோரும் விலகிட்டாங்கன்னா பாத்துக்கோ.
நான் அன்னைக்கு சொன்னேன் இல்லையா? இந்த ரேஸ் டிராக்ல unofficial lap record. அதை செஞ்சதே உங்க அம்மாதான்.
ஸ்ரேயா: அப்புறம் ஏன் எங்க அம்மா பைக் ரேஸிங்கை விட்டாங்க?
பிரபாகரன்:
அவங்க நேஷனல் Level ல
கலந்துக்கிற சான்ஸ் கிடைச்சது. அதுல ஜெய்ச்சா International Level ரேஸ்ல கலந்துகிற சான்ஸ் இருந்தது. 1st round ல சுலபமா win பண்ணிட்டாங்க. இந்தியாவின்
பல இடங்களில் இருந்து வந்த ஆம்பளைங்க, ஒரு பொம்பள 1st வந்ததை பார்த்து
மிரண்டுட்டாங்க. முதல் ரேஸ் முடிந்த நாள்லதான் உங்க அம்மா கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சது. அடுத்த போட்டிக்கு ஒரு வாரம் இடைவெளி இருந்தது. கர்ப்பத்தை
கலைச்சுட்டு கலந்திருந்தா அவங்க ரேஸ் உலகத்துல எங்கயோ போயிருப்பாங்க. ஆனால் உன்னை
பெத்து எடுக்கிறதுக்காக பைக் ரேஸ் ல கலந்துக்காம விட்டுட்டாங்க.
ஸ்ரோவிற்கு
அவள் அம்மா செய்த தியாகத்தை எண்ணி கண்ணில் நீர் வந்தது.
திரும்பவும் பயிற்சியில் ஈடுபட்ட ஸ்ரேயா, பழையபடி வேகமாக
பைக்கை ஓட்டினாள்.
-------------------------
பயிற்சி முடிந்ததும் வினோத்திற்கு போன் செய்தாள்.
ஸ்ரேயா:
வினோத்! எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒரு லட்சியத்தோட இருக்கேன்.
பைக் ரேஸிங்கில் பெரிய அளவு சாதனை பண்ணனும்னு என் லட்சியம். என்னால ஒரு சராசரி
பொண்ணு மாதிரி கல்யாணம் பண்ணிட்டு, வீட்டு வேலை செஞ்சுட்டு, புருஷனுக்கு அடக்கமா இருந்து, குழந்தை
பெத்துட்டு வாழ முடியாது. என்னை நினைச்சுட்டு இருந்தா உன் வாழ்க்கையும் பாழாயிடும். நாம பிரிந்து இருப்பது தான் நல்லது.
வினோத்திற்கு
இது அதிர்ச்சியாக இருந்தது.
வினோத்:
நீ ஏன் அப்படி யோசிக்கற ஸ்ரேயா? நமக்கு கல்யாணம் ஆனா நான் உனக்கு எல்லா விதத்திலும்
உறுதுணையாக இருப்பேன். சமைக்கிறது, வீட்டு வேலை செய்யறதுனு எல்லா வேலைகளிலும் உனக்கு உதவுவேன். குழந்தை
பெத்துக்கறத கூட தள்ளி போடலாம். எவ்வளவோ பெண்கள் குழந்தை பெத்ததுக்கு அப்புறம்
சாதிக்கிறது இல்லையா? குழந்தை வளர்ப்பிலும் நான் உனக்கு உறுதுணையாக இருப்பேன்.
ஸ்ரேயா:
சமைக்கறது, வீட்டு வேலை செய்யறதெல்லாம் பெண்களோட வேலைனுதான் ஆம்பளங்க நீங்க
நினைக்கிறேங்க. எனக்கு "உதவி" எதுவும் வேண்டாம். இதையெல்லாம் உன் கடமையா
எடுத்து நீயே செய்ய முடியுமா சொல்லு?
வினோத்:
கண்டிப்பா! நானே வீட்டு வேலைகள் எல்லாம் செய்யறேன். நீ உன் பைக் ரேஸ் ல கவனம்
செலுத்தினால் மட்டும் போதும்.
ஸ்ரேயா:
இதெல்லாம் சாத்தியமானு நீயே யோசிச்சு பாரு. என்னோட அம்மா வந்து தங்கினா
அவங்களுக்கும் சமைச்சு போடுவியா? இல்லை உன்னோட அம்மா வந்து நம்மளோட தங்கினா, அவங்க கண்
முன்னாடியே வீட்டு வேலைகளை நீ செய்ய முடியுமா?
வினோத்
மௌனமாக யோசித்தான்.
வினோத் இப்போது தான் புடவை கட்டி
அவன் அம்மாவிற்காக வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பிக்கிறான். ஸ்ரேயாவிற்காகவும் செய்ய
முடியும் ஆனால் மாமியாருக்காக, ஒரு மருமகன் எப்படி சமையல் செய்ய முடியும்? அது அவன் ஆண்மைக்கே இழுக்காக
தோன்றியது. அதுவும் ஸ்ரேயாவிற்கு பணிவிடைகள் செய்யும் போது அவன் அம்மா கூட
இருந்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும். மருமகள் பைக் ரேஸ் செல்ல, மகன்
பொட்டச்சி போல வீட்டில் சமையல், தட்டு கழுவுவது என்று அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருந்தால்
எப்படி அவன் தாயால் பொருத்துக் கொள்ள முடியும்?
ஸ்ரேயா:
உன்கிட்ட இதுக்கு பதில் இல்லை தானே! எனக்கு இது ஒத்து வரும்னு தோணல. நீயும் நல்லா
யோசிச்சா உனக்கே நான் எடுக்கற முடிவு சரினு தான் தோணும்.
பேசி
முடித்துவிட்டு ஸ்ரேயா கண்ணீர் வடித்தாள். அவள் அம்மாவை சந்திக்க வேண்டும் என்று
என்றைக்கும் இல்லாமல் இன்று தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக