சுதாகரின் வேலை மாற்றங்கள், 01
மீண்டும்
நான் (சுதாகர்) சொல்லும் வகையில் (சுமார் இரண்டு வருடங்கள்
பின்னோக்கி):
இடையில்
வந்தது இந்த பொல்லாத கொரோனா காலம். என் மனைவி நித்யா வேலை பார்ப்பது IT
லைன்
என்பதால், வீட்டில் இருந்து வேலை
பார்க்க வாய்ப்பு கிடைத்ததில்,
அவளுக்கு வேலையில்
ஏதும் பிரச்சினை இல்லை.
ஆனால்
எனக்கு சைட் வேலை அதிகம் என்பதால், அவ்வாறு
வேலை செய்ய வழி இல்லாமல், வீட்டில் சும்மா இருக்க
வேண்டியதாகி விட்டது. எனது கம்பெனி சம்பளம் முழுதும் கொடுக்க முடியாமல், ஏதோ பெயருக்கு கொஞ்சம்
கொடுத்தார்கள். என்ன வேலையை விட்டு தூக்க
வில்லை, அது வரைக்கும் எனக்கு
சந்தோசம்.
அந்த
நேரம் பார்த்து எனது மனைவி ஆறு மாத கருவை சுமந்து கொண்டு இருந்தார். அம்மா வேறு
தங்கை வீட்டுக்கு சென்று மாட்டி கொண்டார். மாமியார் உட்பட யாரும் உதவிக்கு வர
வாய்ப்பில்லாமல்,
நாங்களே
தனியாக எங்களை பார்த்து கொள்ள வேண்டிய கால கட்டம் அது.
நான்
வீட்டில் வேலை இல்லாமல் இருக்க,
என்
பொண்டாட்டி வீட்டில் இருந்த படியே வேலை செய்யும் நிலை. அதுவும் என் அன்பு மனைவி கர்ப்பமாக
வேறு இருந்ததால்,
இப்போது
மொத்த வீட்டு வேலையும் நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.
எங்கள்
குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்ற அக்கறையில், நானே எல்லா வேலைகளையும் இழுத்து
போட்டுக் கொண்டு செய்தேன்.
காய்கறிகள்
நறுக்கி, சமைப்பது, வாஷிங் மெஷினில் துணி
துவைத்து,
அதை மாடியில்
காய போடுவது,
காய்ந்த
துணிகளை எடுத்து வந்து மடித்து ஐயன் செய்து வைப்பது, வீடு பெருக்குவது (வாக்குவம்
கிளீனர் உண்டு) என்று.
இடை
இடையில் மனைவிக்கு காப்பி போட்டு கொடுப்பது, அவள் குடித்து வைத்து வைக்கும்
எச்சில் தம்ளரை கழுவி வைப்பது,
இரவில்
பாத்திரம் கழுவுவது முதல் எல்லாம் நானே செய்ய ஆரம்பித்து விட்டேன்.
அவளை
நடை பயிற்சி செய்ய வைப்பது,
கருவில்
வளரும் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கும் படி பார்த்து கொள்வது, அவள் கர்ப்ப காலத்தில்
உடல் எடை கூடும்போது,
அதனால் கால்
வலிக்கும் தருணங்களில் கால் அமுக்கி விடுவது எல்லாம் என் பொறுப்பு.
அவள்
என்னை அடிக்கடி காதலுடன் பார்த்து சிரிப்பாள், உன்னை எனது கணவனாக அடைய நான்
கொடுத்து வைத்து இருக்கிறேன் என்று சொல்லி முத்தமிடுவாள். அதுவே எனக்கு இன்னும்
உற்சாகத்தை கொடுக்கும். நானும் செல்லமாய் போங்க, இதெல்லாம் ஒரு வேலையா, என் கடமை என்று
சொல்லி சிரித்தவாறே எல்லா வேலையும்
செய்வேன்.
வீட்டில்
யாரும் இல்லாததால்,
அவள்
விளையாட்டாக என்னை தனது நயிட்டி ஐ கொடுத்து போட்டுக்க சொல்லி, அடியே என் செல்ல பொட்டச்சி
புருஷா, நீ தாண்டி இனிமே எனக்கு
செல்ல பொண்டாட்டி என்று கொஞ்சி மகிழ்வாள். நானும் அவளுக்கு எனது வேட்டி, சட்டை கொடுத்து போட்டுக்க
சொல்லி, நீங்கதான் என் செல்ல
ஆம்பிளை பொண்டாட்டி என்றும்,
சில சமயம்
என் செல்ல புருஷா என்றும் அழைத்து காலில் விழுந்து வணங்கி மகிழ்வேன்.
எங்களுக்கு
குழந்தை பிறந்த நேரம் கோரோனோ தடை உத்தரவு ரிலாக்ஸ் ஆனதும் என் மாமியாரும், அம்மாவும் வந்து பார்த்து கொள்ள
ஆரம்பித்தனர்.
அப்போது
எனக்கு சிறிது நேரம் கிடைத்ததில்,
அவள் என்னை
மேற்கொண்டு படிக்க சொன்னாள். நானும் அவள் பரிந்துரைத்த சில கம்ப்யூட்டர் கோர்ஸ் online
இல்
படித்தேன்.
சிறிது
காலத்தில் எனது கம்பெனி மீண்டும் வழக்கமான பணியை ஆரம்பித்தனர். வேலை அதிகம்
ஆயிற்று, ஆனாலும் சம்பளம் என்னவோ
அதிகம் கொடுக்கவில்லை.
கொரோனா
காலத்துக்கு பிறகு புதிய வடக்கத்திய தொழிலாளர்கள் வந்தனர். வேலை செய்ய தெரியாத
அவர்களை வைத்து வேலை பண்ணுவது கடினமாக
இருந்தது. அத்துடன் புதிய மேல் அதிகாரியாக ஒரு பெண்மணி மும்பையில் இருந்து
வந்தார். அவர் என்னை அதிகம் கசக்கி பிழிந்து வேலை வாங்க மட்டும் செய்வார், ஆனால் எந்த உதவியும் செய்ய
மாட்டார். விடுமுறை கொடுக்க மாட்டார், அதிக
நேரம் வேலை வாங்கி ஆனால் அதற்கு உண்டான ஓவர் டைம்
ஊதியம் கொடுக்க மாட்டார். எல்லாம் புதிய வடக்கு ஊழியர்களுக்கு வாரி
வழங்குவார், அவர்கள் சரியாக வேலை
செய்யாத போதும்.
என்
குடும்பம் நான் கஷ்ட படுவதை பார்த்து கவலை பட்டனர். அப்போது எல்லோரும் (என் அம்மா, மாமியார்) அமர்ந்து
இருக்கும் நேரத்தில் அவள் சொன்னாள், நீ
ஏன் இப்படி கஷ்ட படனும்,
பேசாம இந்த
வேலையை விட்டு விடு. எனது கம்பெனியில் நான் இப்போது நல்ல நிலையில் சீனியர் மேனேஜர்
ஆக உள்ளேன்,
உன்னை எனது
கம்பெனியில் சேர்த்து விடுகிறேன்.
உனது
பழைய வேலை அனுபவத்துக்கும்,
இப்போது
கற்று கொண்ட புதிய கம்ப்யூட்டர் அறிவுக்கும் சேர்த்து நல்ல வேலை கிடைக்கும்.
ஆரம்பத்தில் இடைநிலை பதவி கிடைக்கும். அதுவே நீ இப்போது வாங்கும் சம்பளத்தை விட
அதிகமாக இருக்கும். உனது திறமைக்கு விரைவில் நீயும் என் கம்பெனியில் மேனேஜர் ஆக
பதவி பெறலாம்.
எனக்கு
கீழே வேலை பார்க்க வேண்டுமே என்று தயங்காதே, உன்னை பிரபாகர் சார் இடம் சேர்த்து
விடுகிறேன். அவர் உன்னை நன்கு கவனித்து கொள்வார். வேலையும் விரைவில் கற்று
கொள்ளலாம் என்று எனக்கு ஊக்கம் அளித்தாள்.
எனக்கு
பிரபாகர் சார் ஐ நன்கு தெரியும்,
எனது கல்யாணத்துக்கு
பிறகு. அவர் சில சமயம் எங்கள் வீட்டுக்கு
வரும்போது என் மனைவிடம் அலுவலக விஷயமாக பேசிக்கொண்டு இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன். பல நாட்கள் அவர் மாலை
நேரங்களில் என் மனைவியிடம் போனிலும் பேசுவதை கேட்டுள்ளேன்.
என்
மனைவி மேனேஜர் ஆக பொறுப்பேற்ற நாள் முதல் பிரபாகர் சாரே, எனது மனைவியை நித்யா என்று முன்பு
போல பெயரை சொல்லி கூப்பிடாமல் மேடம் என்று அழைப்பதை கேட்டு நான் ஆச்சர்ய
பட்டுள்ளேன். ஒருமுறை அவரிடம், சார் நீங்கதான் என் மனைவி
நித்யாவுக்கு ட்ரைனிங் கொடுத்தவர், இப்போது
அவர்களும் உங்களை போன்று மேனேஜர் ஆக இருக்கிறார்கள். அப்புறம் ஏன் அவர்களை நீங்கள்
மேடம் என்று அழைக்கிறீர்கள்,
அவர்கள் இடம்
அடிக்கடி உங்கள் வேலையை காட்டி அவர்களின் ஒப்பீனியன் வேறு அறிய முற்படுகிறீர்கள், பின்பு அவர்கள் சொல்வதை
அப்படியே ஏற்று கொண்டு ரிப்போர்ட் ஐ மாற்றி கொள்கிறீர்கள், அவர்கள் ஒன்றும் உங்கள் மேல்
அதிகாரி இல்லையே என்று நேரிடையாகவே கேட்டு விட்டேன்.
அதற்கு
அவர், உன் மனைவி, மேடம் அவர்கள், ரொம்ப திறமைசாலி. நான்
இந்த பதவிக்கு வர எத்தனை வருடங்கள் ஆயிற்று, ஆனால் அவர்களோ வெகு விரைவில் இந்த
அளவுக்கு உயர்ந்து விட்டார்கள்,
அதிலும்
இப்போது MBA
படித்து
விட்டு மேனேஜ்மென்ட் லேடெர் இல் முன்னேறும் வாய்ப்பில் உள்ளார்கள். இந்த மாதிரி கார்பொரேட்
கம்பெனியில் எல்லாம் வயதுக்கு இல்லை, திறமைக்கு
தான் மதிப்பு,
மரியாதை
எல்லாம். அந்த வகையில் தான் நான் உன் மனைவி நித்யா மேடத்துக்கு மதிப்பு
கொடுக்கிறேன் என்றார்.
இப்போது
எங்கள் கம்பெனியில் மேடம் மட்டுமே ஒரே பெண் அதிகாரி, அப்படி இருந்தும் அவர்கள் எந்த பயமும்
இல்லாமல் மொத்த ஆண்கள் கூட்டத்தை தன்னந்தனியே ஆட்டி படைத்து வருகிறார்கள். பெரும்பாலான ஆண்கள் மேடத்தை
விட வயதில்,
அனுபவத்தில் அதிகம்
உள்ளவர்கள்தான்,
எனினும் இப்போது
மேடம் சொல்வதுதான் வேத வாக்கு அத்தனை ஆண்களுக்கும். எதிர்த்து பேச என்னையும் சேர்த்து யாருக்கும்
துணிவு கிடையாது.
யார்
கண்டது, விரைவில் மேடம் எனக்கே
மேல் அதிகாரியாக வரக் கூட அதிகம் வாய்ப்பு உள்ளது என்று சொல்லி சிரித்தார்.
இப்போது அது நடந்து விட்டதை அறிந்து நான் ஆச்சர்ய படுகிறேன்.
அதையெல்லாம்
கருத்தில் கொண்டு,
தற்போதைய
கார்பொரேட் உலகில்,
நானும் உங்களுக்கு
கீழே வேலை பார்க்க வேண்டுமென்றாலும் அதில் ஒன்றும் எனக்கு தயக்கம் இல்லை, பெருமையாகவே கருதுவேன்.
எனக்கு உங்கள் கம்பெனியில் வேலை கிடைக்கும் என்றால் நான் சேர்ந்து கொள்கிறேன்
என்று கூறினேன்.
அவ்வாறே
எனக்கு அவள் தனது கம்பெனியில் வேலை ஏற்பாடு செய்ததும், எனது தற்போதைய வேலையை விட்டு
விட்டு அவளது கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
Gopal Jayyaraj
பதிலளிநீக்குகார்பொரேட் செக்டர் களில் படிப்பு, திறமை, குறிக்கோளை எட்டுவது (target achievement) ஆகியவற்றிற்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். அங்கு ஆண், பெண் பேதம் கிடையாது. வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். அனுபவத்திற்கும் அங்கு வேலை இல்லை. இதை ஸ்டாப் புரிந்து கொள்ள வேண்டும்.
திறமையானா இளம் பெண்களிடம் அனுபவம் வாய்ந்த ஆண்கள் பணி செய்ய நேரிடும். அப்போ அந்த இளம் பெண்ணின் கேள்விகளுக்கு ஆன்கள் பதில் சொல்லி யாக வேண்டும். அவரின் கட்டளைக்கு கீழ் படிந்து ஆக வேண்டும். இளம் பெண் அதிகாரி கால் மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்து இருக்க அனுபவஸ்தர் அவர் முன் நின்று கொண்டு பதில் சொல்ல வேண்டும்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது corana முடிவிக்கு வந்த பின் சுதாகர் தன் வேலையில் சேர்ந்து பல இன்னல்களை அனுபவிக்கிறான். பின் மனைவி, அம்மா, மற்றும் மாமியார் ஆதரவுடன் நித்யா கம்பெனி இல் நித்யாவின் கீழ் ego எதுவும் இல்லாமல் சேர்ந்து பணி புரிகிறான்.
மனைவியின் கீழ் அவர் கட்டளை படி வேலை செய்வது இழிவு இல்லை என்பதை கணவன் உணர்ந்து வேலையில் செய்கிறான்.
அவன் பணியை புரிந்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.