ஞாயிறு, 13 அக்டோபர், 2024

மாலதியின் மருமகன், EP27

 

திருமணம் முடிந்து 3 நாட்களிலேயே ஸ்ரேயா ரேஸ் டிராக்கிற்கு பயிற்சிக்கு வருவாள் என யாரும் நினைத்து பார்க்கவில்லை. திருமணத்திற்கு பிறகு அடங்கி விடுவாள் என்று நினைத்த ஆண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது.

கடுமையான பைக் ரேஸில் மூன்றாவது இடம் பிடிப்பதே கடினம். இந்த நிலையில் மூன்றாம் இடத்தை பிடித்த கண்கள் சந்தோஷ படாமல் வெட்கி தலை குனிந்தே இருந்தனர். காரணம் முதல் இரண்டு இடத்தையும் ஸ்ரேயா மற்றும் ஆஷாவே பிடிப்பது வழக்கமான நிகழ்வானது.


அழுது கொண்டு தலையை குனிந்து கொண்டும் நிற்கும் ஆண்களை பார்க்க ஸ்ரேயாவிற்கும் ஆஷாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

போயும் போயும் இரண்டு பெண்களிடம் பைக் ரேஸில் தோற்றுவிட்டோமே என்று அவமானப்பட்டு சில ஆண்கள் கண்ணீர் சிந்துவர். ஒரு சிலர், மூன்றாம் பரிசை கூட பெற விரும்பாமல் அவமானத்துடன் அந்த இடத்தை விட்டே கிளம்பி விடுவர்.

ஒரு பெண்ணின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்ற விரதத்தியால் ஒருவன் பைக் ஓட்டுவதையே விட்டுவிட்டான். பைக்கை தொட்டாலே அவனுக்கு ஸ்ரேயாவிடம் தோற்றதுதான் நியாபகம் வந்தது. அதனால் பைக் ஓட்டுவதையே விட்டு விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக