சனி, 14 நவம்பர், 2026

சுகமான அவமானங்கள், P03

அமுதா அப்படி என் தங்கை முன்னால் என்னை அவமானப் படுத்தியதும், எனக்கு அது ஆரம்பத்தில் பிடித்து இருந்தாலும், சில நிமிடங்களில் மீண்டும் என் நிலையை பார்த்து நானே வெட்க பட ஆரம்பித்தேன், தலை குனிந்து நின்றேன், அவர்களை பார்க்க தைரியம் இல்லாமல்.

அதை உணர்ந்து கொண்ட அமுதா, சுமதியை பார்த்து கண் சைகை காட்ட, உடனே என் தங்கை சுமதியும் என்னை கேலியாக பார்ப்பதை நிறுத்தி கொண்டு, ஆதரவாக என் முடியை கோதி விட்டு கொண்டே, "டேய் அண்ணா, ரொம்ப யோசிக்காதே, அமுதா விளையாட்டாக சொல்வதை எண்ணி கவலை படாதே, நாங்கள் இருவரும் உன்னை நன்கு புரிந்து கொண்டவர்கள், சும்மா உன்னை கிண்டல் செய்தோம், நாங்கள் கிண்டல் செய்யாமல், வேறு யார் உன்னை உரிமையோடு கிண்டல் செய்ய முடியும், எனவே எப்போதும் போல இருடா" என்று ஆறுதலாக பேசினாள். 

அவள் அப்படி பெரிய மனுஷி (அக்கா) மாதிரி பேசினது எனக்கு பிடித்து இருந்தது. எனவே நானும் "சரிடி, நான் ஒன்னும் பெருசா எடுத்துக்கலை, இனிமே உன் அண்ணன் மாதிரி ஒரு ஆம்பிளையா நடந்துக்குறேன் பார்" என்று சவால் விட்டேன். 

அமுதா அப்படி நான் வீரத்துடன் பேசியதை கேட்டு, என்னை இன்னும் கலாய்க்கும் எண்ணத்தில், "ஓஹ், ஹோ, சார் இனிமே ஆம்பிளையா இருக்க போறார் போல, சரி வந்து இந்த புல்லட் ஐ தள்ளி கொண்டு போய் ஸ்டான்ட் போட்டு நிறுத்துங்க சார்" என்று என்னிடம் அவள் அது வரை பிடித்து கொண்டு இருந்த புல்லட் பைக் ஐ என்னிடம் கொடுத்தாள். 

நான் அதை தள்ளி கொண்டு செல்ல முயல, அதன் வெயிட் அதிகம் என்பதால், சரியாக தள்ள முடியாமல் பாலன்ஸ் தடுமாறினேன். 

உடனே அமுதா ஓடோடி பக்கத்தில் வந்து அந்த புல்லட் ஐ மீண்டும் பிடித்து பாலன்ஸ் செய்து, தள்ளி கொண்டு சென்று ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். "விட்டால் வண்டியை கீழே போட்டு விடுவாய் போல, அப்புறம் என் அப்பா என்னை கண்டித்து விடுவார். நீயா திட்டு வாங்குவ அவரிடமென்று" என்னை கோபமாய் கேட்டாள். 

நான் பயந்து விட்டேன், “சாரி சாரிங்க” என்று அவளிடம் கெஞ்சாத குறையாக கை எடுத்து மன்னிப்பு கேட்டேன்.

அமுதா நான் பயந்து விட்டதை பார்த்து, என் மேல் பரிதாப பட்டு, "சும்மா கோப படும்படி சொன்னேன், அதெல்லாம் ஒன்னும் ஆகாது, என் அப்பா என்னை எப்போதும் திட்ட மாட்டார், என் மேல் அவருக்கு கொள்ளை பிரியம், ஏதும் அடி பட்டு கொண்டால் தான் திட்டுவார், வண்டிக்கு ஏதும் ஆனால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார், சும்மா உன்னை அதட்டி வேடிக்கை பார்த்தேன், ரொம்ப பயப்படுற நீ, தைரியமா இருடா, உனக்கு ஓகே னா நான் நாளை முதல் சுமதிக்கு ஓட்ட கத்து தருவதாக கூறி உள்ளேன், அப்போது உனக்கும் சேர்த்து இந்த புல்லட் ஓட்ட கத்து தரேன், என்ன கத்துக்கறியா?" என்று கேட்டாள். 

நான் அதற்கு "எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது, வேண்டாம், வேண்டாம்" என்று அவசரமாக கூறி அங்கிருந்து கிளம்பி விட்டேன். 

அதை கேட்டு அமுதா சற்று திகைத்து "என்னடி ஆச்சு இந்த சுதாவுக்கு" என்று கேட்க, சுமதி "விடுடி, அவன் அப்படிதான்" என்று சொல்லி, மெல்ல அவளை அழைத்து கொண்டு வீட்டிற்குள் சென்றாள். 

-------------------------------------------------------------------

இப்போதெல்லாம் மாலையில் கல்லூரியில் இருந்து வந்ததும் அமுதாவும், சுமதியும் புல்லட் எடுத்து கொண்டு ஒட்டி பழக கிளம்பி விடுகின்றனர். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் கல்லூரி கிரிக்கெட், கபடி விளையாட்டு எல்லாம் விளையாட ஆரம்பித்து விட்டனர். 

காலையில் சீக்கிரம் எழுந்து ஜாகிங் செய்ய கூட செல்கின்றனர். 

இருவரும் ஸ்போர்ட்ஸ் ப்ரா, ட்ராக் பாண்ட், ஷர்ட் அணிந்து செல்வதை பார்க்கும் போது கம்பீரமாக ஆண்மையுடன் இருப்பார்கள். 

அதை பார்த்து எனக்கு சற்று பொறாமையாக இருக்கும். "என்னடா நீயும் வருகிறாயா ஜாகிங் பண்ண" என்று என்னை கூப்பிட்டதால் ஒருநாள் அப்படி அவர்களுடன் ஜாகிங் சென்றேன். 

ஆனால் அவர்கள் வேகத்துக்கு என்னால் ஜாகிங் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, அதற்கு பிறகு அவர்களுடன் ஜாகிங் செய்ய வெட்க பட்டு கொண்டு, "போங்க எனக்கு சீக்கிரம் எழுந்துக்க விருப்பம் இல்லை" என்று சொல்லி, அடுத்த நாளே சமாளித்து விட்டு ஜாகிங் செல்வதை நிறுத்தி விட்டேன். 

----------------------------------------------------------------------------------------------------

இப்படி ஒரு மாதம் ஆகி விட்டது அமுதா வந்து. இப்போதெல்லாம் நான் என் அம்மாவோடு சேர்ந்து, அமுதா அம்மாவுக்கும் செல்ல பிள்ளை ஆகி விட்டேன். அவர்களுக்கும் அவர்கள் வீட்டு வேலையில் உதவி செய்து கொடுக்கிறேன். 

மாமி என் வீட்டில் வந்து என் அம்மாவோடு சேர்ந்து கதை பேசி கொண்டு இருப்பார்கள், டிவி பார்ப்பார்கள். நான் அப்போது அவர்களுக்கு உதவியாக வீட்டு வேலை எல்லாம் பார்த்து கொடுப்பேன். 

சமையல் கூட ஏற்கனவே என் அம்மா மூலமாக நன்கு கற்று கொண்டு விட்டதால், பல நாட்கள் நான் சமையல் கூட செய்து விடுவேன், அவர்கள் அப்படி அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது. அமுதா அம்மாவுக்கு என் சமையல் ரொம்பவே பிடித்து போய் விட்டது. 

------------------------------------------------------------------------

அன்று ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால், அமுதா, சுமதி, மாமி, அம்மா எல்லோரும் ஒன்றாக என் வீடு ஹாலில் அமர்ந்து பேசி கொண்டும் டிவி பார்த்து கொண்டும் இருந்தனர். 

அம்மா என்னை கூப்பிட்டு, "கொஞ்சம் சமையலை கவனித்து கொள்" என்று கூறி விட்டதனால், நான் சமையல் அறையில் சமைத்து கொண்டு இருந்தேன். 

நான்கு பெண்களிருந்தும், அன்று நான் சமைக்கிறேன் என்று அறிந்தவுடன், பேச்சு வாக்கில் மாமி, என் அம்மாவிடம், "எனக்கு கூட இந்த கை பக்குவம் வர மாட்டேன் என்கிறது, ஆனால் சுதா என்ன அருமையாக சமைக்கிறான். நேற்று கூட அவன் சமைத்து கொடுத்ததை அமுதா சாப்பிட்டு விட்டு, "என்னம்மா, இப்பல்லாம் உன் சமையல் ரொம்ப அருமையாக உள்ளதே" என்று சப்பு கொட்டி கொண்டு சாப்பிட்டாள் தெரியுமா. அப்புறம் சொன்னாள், "அம்மா, இந்த முறை அப்பா வந்தவுடன், இப்படி அருமையாக சமைத்த உன் கைக்கு புது வளையல் வாங்கி கொடுக்க சொல்றேன்" என்று. 

அப்ப நான் சொன்னேன், இது நான் சமைக்கலை, சுதா சமைத்தது" என்று. அதை கேட்டு அமுதா, "நம்பவே முடியலை, சுதா நன்றாக சமைக்க கூட செய்வானா, சும்மா சொல்லாதே , இது அவன் அம்மா செய்து கொடுத்தது தானே" என்று என்னை நம்பாமல் பேசினாயே, இப்ப பார் யார் சமைத்து கொண்டு இருக்காங்க னு" என்று என்னை காமித்து கூறினார்கள். 

அப்புறம் மாமி அமுதாவை பார்த்து, "நீ என்னிக்காவது சமையல் அறையில் எனக்கு உதவி செய்து உள்ளாயா, பார் சுதா எப்படி அவன் அம்மாவுக்கு உதவி செய்கிறானென்று. உனக்கு வெண்டைக்காய், தக்காளி ரசம் பிடிக்கும் என்று நான் சொன்னதை கேட்டு சுதா அம்மா இன்று உனக்கு அது பண்ணி தருவதாக கூறி அழைத்துள்ளார்கள். ஆனால் சுதா தான் அதை சமைத்து கொண்டு இருக்கிறான். நேற்று சந்தேகமாக கூறினாயே, இன்று உன் கண் முன்னால் சமைக்கிறான் பார். அவன் சமைத்ததை சாப்பிட்டு விட்டு பேசு பார்ப்போம்" என்று சவால் விட்டார்கள்.

அதை கேட்டு சுமதியும், "ஆமாம் அமுதா, சுதா நன்றாக சமைப்பான், என் அம்மாவை விட நன்றாக" என்று என் அம்மாவை வேறு வம்புக்கு இழுத்தாள். 

என் அம்மா சுமதியின் தலையில் செல்லமாக குட்டி, "ஆமாண்டி, நீ ஒன்னும் கத்துக்காத, என்னிக்காவது சமையல் அறைக்குள் வந்தாயா, ஆனால் உன் அண்ணன் சமைப்பதை நல்லா சாப்பிட மட்டும் வா" என்று. 

அப்படி அவர்கள் என்னை பற்றி, என் சமையலை பற்றி பேசுவது என் காதுக்கு விழுந்ததும் எனக்கு சற்று வெட்கமாக போயிற்று. அம்மாவை கூப்பிட்டு, "பேசியது போதும், சமையல் எல்லாம் முடிந்து விட்டது, சுட சுட சாப்பிட வாங்க" என்று அழைத்தேன். 

அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட, நான் அவர்களுக்கு பரிமாறி கொண்டு இருந்தேன். 

அனைவரும் என் சமையலை நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட்டனர். 

மாமி அமுதாவிடம், "இப்ப என்ன சொல்ற, சுதா நன்றாக சமைப்பானா என்று நம்பிக்கை இல்லாமல் பேசினாயே, எப்படி இருக்கு அவன் கை பக்குவம்" என்று அவளை கேட்க, அப்போது அமுதா, "நிஜமாகவே சுதா நன்றாக சமைத்து உள்ளான், அதனால் நேத்து சொன்ன மாதிரி, இந்த முறை அப்பா வந்ததும், புது வளையல் வாங்கி அவனுக்கு தான் போட்டு விட போகிறேன், உனக்கு இல்லை" என்று சொல்லி சிரித்தாள். அப்புறம் என்னை பார்த்து, "என்ன சுதா, சரிதானே, நிஜமாலும் உன் சமையல் சூப்பர் டா, உன் கைக்குத்தான் வளையல் போடணும், அம்மாவுக்கு இல்ல" என்று சொல்லி சிரித்தாள் விகல்பம் இல்லாமல். 

அவள் அப்படி எனக்கு வளையல் வாங்கி போட்டு விடுவதாய் சொன்னதை கேட்டு அனைவரும் சிரிக்க எனக்கு ரொம்பவே வெட்கமாக போய் விட்டது. "போங்க சும்மா விளையாடாதீங்க" என்று வெட்கத்துடன் தலை குனிய, எல்லோரும் என்னை பார்த்து சிரித்தனர். 

"என் செல்ல சுதா குட்டிக்கு வெட்கத்தை பாரு, கண்டிப்பாக என் அப்பா கிட்ட சொல்லி இப்படி அருமையா சமையல் செய்து கொடுத்த உனக்கு வளையல் வாங்கி தர சொல்லி போட்டு விடுறேன்", என்று அமுதா சொல்ல, தலை குனிந்து வெட்கத்துடன் சிரித்து ரசித்தேன். 

நான் அப்படி ரசிப்பதை உணர்ந்த அமுதா, என்னை இன்னமும் கேலி செய்ய என் தங்கையுடன் சேர்ந்து ஏதோ செய்ய முற்பட (அவள் கையில் அணிந்து இருந்த வளையலை கழட்டி, எனக்கு அப்போதே போட முயற்சி செய்தாள்), அவள் அம்மா அதை அமுதா என்னை அவமான படுத்த செய்வதாக கருதி தடுத்து விட்டார்கள். 

ஒருவேளை அமுதா எனக்கு அப்போது வளையல் அணிவித்து இருந்தால், அதை அவமானமாக கருதாமல், பரிசாக கருதி, கை நீட்டி இரண்டு கைகளிலும் வேண்டும் என்று கேட்டு வாங்கி போட்டு கொண்டு, மீண்டும் அவளே கழட்டாத வரை, அவள் அணிவித்த வளையலை ஆசையுடன் அணிந்தே இருப்பேன். சொல்ல போனால் எனக்கு அந்த சுகம் கிடைக்காமல் போய் விட்டதே என்று வருத்தமே. அந்த சுகமான அவமானம் எப்போது கிடைக்கும், சீக்கிரம் கிடைக்காதா என்று மனம் அலை பாய்கிறது, ஏங்குகிறது. நான் அந்த சுகமான அவமானத்தை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன். 

5 கருத்துகள்:

  1. Happy and surprised to see three updates... brillant start.. how we get frequent updates..

    பதிலளிநீக்கு
  2. Wow slow ah steady ah poguthu super

    பதிலளிநீக்கு
  3. Thanks for the encouraging comments, keep posting your expectations and feedback.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. த்ருஷ்டி போட்டு தான, வைச்சு விட்டா போச்சு, சீக்கிரமா அதுவும் பண்ணிடலாம். வளையலோட சேர்த்து பொட்டும் வைத்து விடுவோம்.

      நீக்கு