அவன் அம்மா ஏற்கனவே அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள், உடனே என் அம்மாவிடம் கூப்பிட்டு சொல்லி விட்டார்கள். என் அம்மாவுக்கோ தலையும் புரியல, வாலும் புரியல, குழம்பி போய் நிற்கிறார்கள், என்ன பதில் சொல்வது என்று. முதலாளி அம்மா வீட்டுக்கு, தன் மகள் வாழ போவதெல்லாம் கனவில் கூட நடக்க முடியாது என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கும் போது, அது நிஜத்தில் நடக்க வாய்ப்பு தன் வீடு தேடி வருவதை பார்த்து.
ஆனால் நாந்தான் எனக்கு சற்று யோசிக்க
நேரம் வேண்டும் என்றேன். அப்போது அவன் அம்மா, ஏண்டி இதில் என்ன யோசிக்க இருக்கு என்றார்கள்.
அப்போது நான் தைரியத்துடன் சொன்னேன், உங்க வீட்டுக்கு நான் கல்யாணம் பண்ணி கொண்டு
வந்தால், நான்
ஒரு மருமகளா இருக்க மாட்டேன், ஒரு வேலைக்காரியாக தான் கடைசி வரை இருக்க வேண்டி இருக்கும், அதில் எனக்கு
விருப்ப மில்லை என்றேன்.
அதை கேட்ட அவர்கள் சிரித்து
விட்டார்கள். அட போடி பைத்தியகாரி, நீ எதுக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும், இப்பவே அவன் உனக்கு வேலைக்காரனாக தான் இருக்கிறான். கல்யாணம் வேற ஆகி
விட்டால் அவன் உனக்கு முழு நேர அடிமை ஆகி விடுவான், என்னடா நான் சொல்வது சரிதானே என்கிறார்கள்
அவனை பார்த்து. அதை கேட்ட அவனுக்கோ ஒரே சந்தோசம். வெட்கத்துடன் தலை குனிந்து
கொள்கிறான். அதை பார்த்து அவன் அம்மா, பாருடி இவனை, எப்படி வெட்க படுகிறான், பொண்ணு நீயோ
எவ்வளவு தைரியமா பேசுற, பையன் இவன், பொம்பிளை மாதிரி வெட்க படுறதை. விட்டா புடவைய கட்டிக்கிட்டு அவனே
உனக்கு பொண்டாட்டியா கூட
வந்துடுவான் போல இருக்கு என்கிறார்கள்.
அம்மா அப்படி சொன்னதை கேட்டதும், அவனுக்கு தலை
கால் புரியவில்லை. என்ன சொல்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல், மனதுக்குள்
இருக்கும் ஆசைகள் தன்னாலே, வார்த்தைகளா வெளிய வர ஆரம்பித்து விட்டது அவனுக்கு. உடனே, “எப்ப அம்மா நான்
புடவைய கட்டி கிட்டு, அவங்களுக்கு பொண்டாட்டியா இருக்க போறேன்” என்று கேட்டு
விட்டான்.
அதை கேட்ட அவன் அம்மா, என்னடா, நான் ஏதோ ஒரு
விளையாட்டுக்கு சொன்னா, நீ என்னடாவென்றால்,
எப்படா அப்படி நடக்கும் என்று கேட்கிறாய், உள்ளதை சொல், உனக்கு அப்படி
ஏதும் ஆசைங்க இருக்கா? என்று என் முன்னாலேயே அவனை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அவனும் இதுதான்
சரியான தருணம், இனிமேலும் ஒளித்து வைப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று
தெரிந்துகொண்டு, மெல்ல அப்படியே தலையை குனிந்து கொண்டே சொல்ல ஆரம்பித்தான், அவனுக்கு
பெண்கள் உடைகளை அணிவதிலும், பெண்களுக்கு அடங்கி நடப்பதிலும் உள்ள தன்னோட ஆசைகளை. அதை
கேட்டு அவன் அம்மா திகைத்து போய் விட்டார்கள். உனக்கு இப்படி ஒரு ஆசை எப்படி
வந்தது என்று அவன்கிட்ட கோபமாய் கேட்டார்கள்.
அதற்கு அவன் சொல்கிறான், தன்னோட சின்ன
வயசுல இருந்தே அவன் அப்பா, அதிகம் குடித்து கொண்டு, வியாபாரத்தை நன்றாக பார்த்து கொள்ளாமல், கடனாளியாக
இருக்கும் நிலைக்கு சென்றது. அப்புறம் அப்பா உடல் நிலை சரியில்லாம போய் சீக்கிரம்
இறந்து விட்டது, அப்ப அம்மா, தைரியமாக தன்னந்தனியாக நின்று கம்பெனிய முன்னேற்றி கொண்டு வந்தது.
அதுபோல வசந்தாவின் அம்மாவும், அவர்கள் புருஷன் ஓடி போய் விட்ட போது, கலங்காமல், தைரியமாக நின்று தன் பெண்ணை வளர்த்து
ஆளாக்கினது எல்லாம் பார்த்த போது, அவனுக்கு பெண்கள் மேல ரொம்ப மரியாதை வந்து விட்டதாம். ஆண்கள்
சுயநலமா இருக்காங்க, பெண்கள் தான் சிறந்தவர்கள், அதனால தானும் ஏன் ஒரு பெண்ணாக பிறக்க வில்லை
என்று பல நாள் அவன் ஏங்கி இருக்கானாம். அதனால் இனிமே குறைந்த பட்சம் அப்படி பட்ட
ஒரு தைரியமா பொண்ணுக்கு கீழே அடங்கி நடந்துக்குற ஒரு பெண்ணாக வாழணும்னு அவனுக்கு
ரொம்ப ஆசையாம்.
அவன் அம்மாவிடம், வசந்தாவை
அப்படி பட்ட ஒரு தைரியமான பெண்ணாக பார்ப்பதாகவும், புடவைய கட்டி கிட்டு அவங்களுக்கு ஒரு
பொண்டாட்டியாக அடங்கி இருக்க ஆசை படுவதாகவும் கூறினான். இதை கேட்டு, முதல்ல கோப பட்ட
அவன் அம்மா, இப்ப ரொம்ப பெருமையா உணர்ந்தாங்க. என்னிடம் என்னடி, என் பையன அவன்
ஆசை பட்ட மாதிரி கல்யாணம் பண்ணிக்க சம்மதமா என்கிறார்கள்.
எனக்கும் சின்ன வயதில் இருந்தே பெண்கள்
தான் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு இருப்பதால், அவனை இப்ப எனக்கு ரொம்ப பிடித்து விட்டது, அவன் மேல ஒரு
மதிப்பு உண்டானது. இருந்தும் அவன் இப்போது சொன்னது, இரவில் என்னிடம் பேசியது எல்லா வற்றையும்
வைத்து ஒரு முடிவு எடுக்க கொஞ்சம் தயக்கம் இருந்தது. சொல்வது ஒன்று, ஆனால் செய்வது
வேறாக இருந்து விட்டால் என்ன செய்வது. என்னதான் கையில் ஏகப்பட்ட வீடியோ, போட்டோ என
இருந்தாலும், அவர்களோ பணக்காரர்கள்,
எல்லாவற்றையும் எளிதாக உடைத்து விடுவார்கள், என்னை மாட்டி
விடுவார்கள் என்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்தது - என்னதான் சொன்னாலும் நான்
இன்னும் அவங்களோட ஒரு வேலைக்காரி தான், வேலைக்காரி மகள்தான் என்பதை எப்படி மறக்க
முடியும்.
எனவே மெல்ல தயங்கியபடியே சற்று தணிந்த
குரலில் சொன்னேன், அம்மா (அவனின் அம்மாவை நான் அப்படித்தானே கூப்பிடுவேன்) நீங்க
என்னதான் சொன்னாலும் எனக்கு பயமாக இருக்கு, இதெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்று. எனக்கு அந்த
தயக்கம் போக வேண்டுமென்றால், இப்போது சொன்னதை எல்லாம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாகவாது நிஜத்தில்
நடந்து பார்க்க வேண்டும்
என்றேன்.
அதை கேட்ட அவன் அம்மா, கொஞ்சம்
யோசித்து விட்டு பிறகு சொன்னார்கள் - அப்ப ஒன்னு பண்ணுவோம், இவன் ஆசை பட்ட
மாதிரியே, உனக்கு
பொண்டாட்டியா, அடங்கி இருக்க, நிஜத்தில் அவனுக்கும் தைரியம் இருக்கிறதா என்று சோதித்து பார்க்க, நீ அவனை ஒரு
நாள் பொண்ணு பார்க்க வா. அன்று அவன் ஒரு பொம்பிளைய போல புடவைய கட்டி கிட்டு, உனக்கு காப்பி
எல்லாம் கொண்டு வந்து கொடுத்து, உனக்கு வேலைக்காரன் போல எங்க எல்லோர் முன்னாலயும் நடந்துக்கட்டும்.
அப்போ நாங்களும் அவன் நிஜமாகவே அவனது எண்ணத்தில் உறுதியாக இருக்கிறான் என்று
புரிந்து கொள்வோம். அன்னிக்கு அவன் உன் காலில் விழணும், நீ வேட்டி சட்டை
அணிந்து ஆம்பிளையா நடந்து கொள் என்கிறார்கள். என்னடா உனக்கு சம்மதமா என்கிறார்கள்
அவனை பார்த்து. அவன் உடனே ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் சம்மதம் என்று கூறி
விட்டான்.
நானும் நீங்க சொன்னா, சரிதான், உங்க
வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு சம்மதிக்கிறேன். அன்று உங்கள்
பிள்ளை நீங்க இப்ப சொன்ன படி, அவரோட ஆசை என்று கூறியபடி, அப்படி நடந்து கிட்டா, நானும் அன்றே
கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி விடுவேன் என்றேன்.
நான் சொன்னதை கேட்ட அவன் அம்மா, அவனிடம் என்னடா
நீ இதற்கு ஒத்து கொள்கிறாயா என்கிறார்கள். அவனோ மீண்டும், ஒரு நிமிடம் கூட
யோசிக்காமல், சம்மதம் என்று கூறி விட்டான். அவன் அம்மா சொல்கிறார்கள், விட்டா இப்பவே
உன்னை பொண்ணு பார்க்க வசந்தாவை, வசந்த் ஆக வர சொல்லி விடுவே போல இருக்கே. அப்புறம் உன்னை சுதா
என்றுதான் கூப்பிடனும், என்னடி சுதா, என்னிக்கு உன்ன பொண்ணு பார்க்க வர சொல்ல என்று கேலி செய்கிறார்கள்.
அவனோ அப்ப பொண்ணு மாதிரி தலைய குனிந்து கிட்டு, கால் விரலால, தரையை கீறி, கீழே கோலம் போட்டு கிட்டு இருக்கான். அதை பார்த்த
அவன் அம்மா ரொம்பவே ஆச்சர்ய பட்டாங்க.
அப்புறம் என்ன, உடனே ஒரு நல்ல
நாள் பார்த்து, என் பையன, முறையா பொண்ணு பார்க்க வா என்று சொல்லி
கண் சிமிட்டினார்கள். அன்று வரை ஒரு வேலைக்காரியாக, சின்ன பெண்ணாக பார்த்து வந்த ஒரு பெண், இன்று இவ்வளவு
தைரியமாக இருப்பதை பார்த்து அவன் அம்மா ரொம்பவே ஆச்சர்ய பட்டர்கள். அதே நேரம் வலையில்
விழுந்தாகி விட்டது, இனிமே அதில் இருந்து தப்புவது இயலாத காரியம் என்பது அவனுக்கு
புரிந்து விட்டது.
என் அம்மா தான் கொஞ்சம் பயப்பட்டார்கள். இதெல்லாம் சரி பட்டு வருமா என்று. நான் என் அம்மாவை சமாதான படுத்தினேன். நான் பார்த்து கொள்கிறேன், தைரியமாக இரு என்று. இரவு அவன் என்னிடம் அன்று நடந்தது எல்லாம் கூறி ரொம்ப சந்தோச பட்டான். நானும் அவனை, அவன் விருப்ப பட்ட வாழ்க்கை வாழ வாழ்த்தினேன் - மனதுக்குள் சிரித்து கொண்டே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக