சனி, 9 செப்டம்பர், 2023

இனி வரும் காலம்


உலகில் ஆண்கள் எப்பவும் தங்களை பெரியவர்களாகவும், பெண்களை தனக்கு அடங்கி நடப்பவளாகவும் கருதி வருகின்றனர். அப்படி இருந்தால்தான் உலகத்தில் தங்களை மதிப்பார்கள் என்ற எண்ணம் உண்டு அவர்களுக்கு எப்பவும். பெண்களும் அதுதான் உலக நியதி என்று நினைத்து கொண்டு, ஆண்கள் தங்களை ஆதிக்கம் செலுத்துவதை ஏற்று கொண்டு அடங்கி போய் விடுகிறார்கள்.

 

ஆனால் காலம் மாறி கொண்டு வருகிறது. இப்போதெல்லாம் பெண்களும் ஆண்களுக்கு இணையாக படித்து, வேலைக்கு எல்லாம் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் சொல்ல போனால், ஆண்களை விட உயர் பதவிக்கு இப்ப பெண்கள் தலைமை ஏற்று நடத்த ஆரம்பித்து விட்டார்கள். 


ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்து, ஒரே அலுவலகத்தில் வேலைக்கு சேரும் ஆண்கள் மற்றும் பெண்களில், பெண்கள் தங்கள் திறமையால் முன்னேறி, கூட வேலைக்கு சேர்ந்த அதே ஆணுக்கு மேல் அதிகாரியா மாறி, அவனை அதிகாரம் செய்து வேலை வாங்கும் நிலையில் இன்று பல பெண்கள் உள்ளனர். சில நாட்கள் முன்பு வரை, வாடி போடி என்று கூப்பிட்டு வந்த சம வயது, கூட படித்த ஒரு பெண்ணை, பல ஆண்கள் ஒன்று சேர்ந்து இப்போது மேடம் என்று மரியாதையாக கூப்பிடும் நிலைக்கு வந்து விட்டனர்.

அவளோ இன்றும் அவர்களை என்னடா, வாடா, போடா, டேய் என்று அழைத்தாலும், ஆண்களால் வேறு வழியின்றி, சொல்லுங்க மேடம் என்று மரியாதையாக எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் சொல்வது, அந்த பெண் எதிரில் சூழல் நாற்காலியில் கால் மேல கால் போட்டு உட்கார்ந்து இருக்க, ஆண்கள் எதிரில் நின்று கொண்டு கை கட்டி அவர்கள் சொல்வதை, “நீங்கல்லாம் எதுக்குமே லாயக்கு இல்லைடா, என்னடா பண்றீங்க, ஒரு வேலைய ஒழுங்கா செய்ய துப்பு இல்ல, எதுக்குடா அலுவலகம் வருகிண்றீர்கள்” என்றெல்லாம் திட்டுவதை, தலை குனிந்து ஒரு வித பயத்துடன் கேட்டு கொண்டு இருப்பது இப்பல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது.


அதிலும் இந்த காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே என்ற நிலையில், ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் ஆகி விட்ட நிலையில், கல்யாணத்துக்கு ஆண்களுக்கு பெண்கள் கிடைப்பது அரிது ஆகி விட்டது. குறைவான எண்ணிக்கையில் உள்ள பெண்கள், காலத்தின் கட்டாயத்தால், நன்கு படித்து, தனது திறமையால் முன்னேறி செல்லும் போது, அதற்கு எதிர் மறையாக ஆண்கள் அதிக அளவில் உதவாக்கரை ஆகி வருகிறார்கள். 


பெண்களுக்கு தனது தகுதிக்கும், வாங்கும் சம்பளத்துக்கு ஏத்த மாதிரி ஆண்கள் கிடைப்பது இல்லை. அதே நிலைதான் ஆண்களுக்கு, தங்களை விட குறைந்த வயது பெண்கள் கூட, நல்ல உயர் பதவி, சம்பளம் வாங்கும்போது அவர்களை கல்யாணம் செய்து கொள்ள முடியாமல், தாழ்வு மனப்பான்மை உடன் வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். 


இன்னும் சில இடங்களில், கல்யாணத்துக்கு பின்பு சில வருடங்களில் மனைவி உயர உயர சென்று விட, ஆண்களோ அதே இடத்தில், அப்படியே இருந்து கொண்டு, மனைவியின் கையை எதிர்பார்த்து வாழும் நிலைக்கு தள்ள படுகிறார்கள்.


முன்பு ஆண்கள் மட்டும் பார்த்து அறிந்து வந்த படுக்கை அறை சம்பந்தமான விஷயங்கள் எல்லாம் இப்போது இன்டர்நெட் மூலம் பெண்களுக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. அதனால் படுக்கை அறையில் கூட பெண்கள், தங்களை அடக்கி ஆள நினைக்கும் ஆண்களை, தாங்கள் அடக்கி ஆள தலை பட்டு விட்டார்கள். படித்த, அழகான, திறமையான பெண்களுக்கு, ஆண்களை அடிமை படுத்துவது இப்போதெல்லாம் எளிதாக உள்ளது. இப்போதெல்லாம், வேறு வழி இன்றி, ஆண்களே விரும்பி தங்களை, அப்படி பட்ட பெண்களுக்கு அடிமையாக்கி கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக