செவ்வாய், 12 செப்டம்பர், 2023

இனி வரும் காலம் - Gopal Jayyaraj Comments


பொட்டச்சி புருஷன்: இப்பல்லாம் கிராமத்து பொண்ணுங்க கூட நல்லா படிச்சு நகரத்துக்கு வந்து வேலை பாக்குறாங்க. நகரத்து பசங்க வெட்டியா சுத்தி கிட்டு கடைசில அந்த கிராமத்து சின்ன பொண்ணுங்க கிட்ட அடிமையா வீட்டு வேலை பாக்குற வேலைக்காரனுங்களா மாறிக்கிட்டு வராங்க. 

கிராமத்து பொண்ணுங்க இப்பல்லாம் புடவை கட்டமா, கெத்தா ஜீன்ஸ் பாண்ட் டீ-ஷர்ட் போட்டு கிட்டு பல்சர் / என்பீல்ட் பைக் ஒட்டி கிட்டு போறாங்க. பசங்க புடவை கட்டி கிட்டு அவங்க பின்னால உட்கார்ந்து போறாங்க தலையை குனிந்து காலை ஒரு பக்கமா தொங்க போட்டு கிட்டு.

கிராமத்துல இருந்து வரும் பொண்ணுங்களோட அம்மா, அப்பா அதை பார்த்து பெருமை படுறாங்க மாறி வரும் காலத்துக்கு ஏற்ப தங்கள் பெண் முன்னேறி வருவதை பார்த்து.

------------

கோபால் ஜெயராஜ்: கிராமத்தில் இருந்து வரும் சில பெண்களின் அம்மாக்கள் 45 வயதிற்குள் இருக்கிறார்கள். அவர்கள் நகரத்துக்கு வந்த சில நாட்களில் பாண்ட் - ஷர்ட், டீ-ஷர்ட், அணிந்து ஸ்டைல் ஆக மாறி விடுகிறார்கள். அவர்கள் மருமகனை அதிகாரம் செய்கிறார்கள். மருமகன்கள் மாமியார் காலில் விழுந்து கிடக்கின்றனர். இதை வீடியோவில் காணும் பையனின் தாயார் மனம் என்ன பாடுபடும் என்பதை பெண்கள் அறிவார்களா?

----------------

பொட்டச்சி புருஷன்: மருமகன்கள் மாமியார் காலில் விழுந்து கிடப்பதை பார்க்கும் பையனின் அம்மா மனம் என்ன பாடுபடும் என்று வருந்துகிறீர்கள். அதே மருமகளை அந்த மாமியார் என்ன பாடு படுத்தி இருந்தாள் முன்பு என்று நினைத்து பார்த்தால் இது ஒன்றும் தவறாக தோணாது. சொல்ல போனால், மாமியார் காலில் மட்டுமல்ல, கட்டின பொண்டாட்டி காலிலும் விழுந்து கிடக்க வேண்டும் - தன் மனைவியை தனது அம்மா கொடுமை படுத்தும்போது கண்டும் காணாமல் இருந்ததுக்கு தண்டனையாக இந்த காலத்து ஆண்கள்.

---------------

கோபால் ஜெயராஜ்: இந்த காலத்து பையன்கள் மற்றும் ஆண்கள் பள்ளி, கல்லூரி & உயர் கல்வி நிலையங்களில் பெண்களை விட பின் தங்கி இருக்கிறார்கள். படிப்பை பற்றி அதிக அக்கறை காட்டாமல் ஊர் சுற்றி, பெண்களை சுற்றி, மது அருந்தி, போதை பொருள்களை சாப்பிட்டு, சூதாட்டத்தில் கலந்து கொண்டு படிப்பை வீணாக்கி நிற்கிறார்கள். பெண்கள் குடும்பத்தைக் காக்க வேண்டும், பெற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று கடினமாக உழைக்கிறார்கள். ஆண்கள் போட்டி தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. விளைவு கூரியர், ஜோமட்டோ, சுவிக்கி, மற்றும் இதர வேலைகளில் சேருகின்றனர். பெண்களின் கையில் சம்பளம் அதிகம் தரும் வேலைகள், அதிகாரம் உள்ள வேலைகள் கிடைக்கின்றன. எனவே இந்த காலத்து ஆண்கள் போட்டிகளில் அலுவலக பெண்களிடம் தோற்பது அதிசயம் இல்லை. 10 ஆண்டுகளில் ஒரு பெண் 20 ஆண்களுக்கு தலைவி ஆகிறாள். ஆண்களை விட 3 மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். கணவனை விட பல மனைவிகள் பல மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர்.

பெண் கணவனை வேலையை விட சொன்னால் வேலையை விடுகிறான். மனைவிக்கு சேவை செய்கிறான். மாமியாருக்கு அடி பணிகிறான். நாளடைவில் அவன் பழகி விடுகிறான். புது வாழ்வை விரும்புகிறான். பெண் போல் சிறப்பாக, வசதியாக, கவலை இல்லாமல் வாழ்கிறான். மனைவியை திருப்தி செய்து அடிமையை சந்தோசமாக வாழ்கிறான். இவனை நம்பிய குடும்பத்தாருக்கு உதவ மனைவியை எதிர் பார்க்கிறான். மனைவி பணம் கொடுக்கவில்லை என்றால் இவன் அம்மா கதி அதோ கதி தான்.

அதற்காக த்தான் வருந்துகிறேன், ஆண்களுக்கு விடிவு காலம் பிறக்க என்ன செய்ய வேண்டும்.

--------------

பொட்டச்சி புருஷன்: இப்போதைய நிலை போதாது. எத்தனை காலம் பெண்களை அடக்கி வைத்து இருந்தார்கள். பையன் இன்னும் முழுதும் மாற முடியாமல், வேறு வழி இன்றி அதற்கு தன்னை தையார் செய்து கொள்ள ஆரம்பித்து உள்ளான் கொஞ்சம் கொஞ்சமாக. இன்னும் ரொம்பவே அனுபவிக்க வேண்டும். பையனை பெற்ற தாய்மார்கள் உணர வேண்டும், தங்கள் மருமகளை தங்கள் மகளாக கருத வேண்டும். மகள் தனது கணவனை கைக்குள் போட்டு கொண்டால் எப்படி மகிழ்கிறார்களோ அதை போல தனது மகனை மருமகள் அடக்கி ஆளும்போது மருமகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். வேணும்டா உனக்கு என்று மருமகளுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட காலம் விரைவில் வரும், அப்போது இது ஏதும் தவறாக தோணாது. ஆண்களும் பழகி கொள்வார்கள் - பெண்களுக்கு அடிமையாகி இருக்க, வீட்டோடு மாப்பிள்ளையாக, வீட்டு வேலைக்காரனாக இருப்பது சர்வ சாதாரணமாகி விடும். அதுதான் ஆண்களுக்கு உண்மையான விடிவு காலம் என்று நான் கருதுகிறேன்.

-----------------

கோபால் ஜெயராஜ்: நீங்கள் சொல்வது ஒரு யுக புரட்சி. மகன் துன்ப பட்டாலும் வேண்டும் டா உனக்கு என்று அம்மா கூறி விட்டால் இவன் சப்த நாடியும் ஒடுங்கி விடும். அம்மாவே மருமகளுக்கு ஆதரவு அளித்து இவனை அனாதை ஆக்கினால் இவன் ஒன்றும் செய்ய முடியாது. மனைவிக்கும், மாமியாருக்கும் அடங்கி நடந்து வீட்டு மாப்பிள்ளை ஆக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் அடங்கி நடப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

எனக்கு பயமாக உள்ளது.

------------

பொட்டச்சி புருஷன்: இதில் பயப்பட ஒன்றும் இல்லை. நீங்கள் பயப்படுகிறீர்கள் ஏன் என்றால், இன்னும் சமுதாயம் அதற்கு ஏற்ப மாறவில்லை. பையனின் ஆணவத்தை கம்பீரம் என்று சொல்பவர்கள், பெண்களுடைய தைரியத்தை திமிர் என்று நினைக்கிறார்கள்.  

--------------------

கோபால் ஜெயராஜ்: கம்பீரமான பெண்ணின் நிழலில் வாழ ஆண்கள் தயாராக வேண்டும். மனைவி, மாமியார் மற்றும் அனைத்து உறவு பெண்கள், மனைவியின் அலுவலக தோழிகள் ஆகிய அனைவரிடமும் ஆண் மரியாதையாகவும், மதிப்பு கொடுத்தும் நடக்க வேண்டும். தன்னை விட வயதில் சிறிய பெண்ணாக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும். கணவனின் அம்மா மருமகளுக்கு ஆதரவாக செயல் பட ஆரம்பித்தால் அதையும் சமாளிக்க வேண்டும். தன் அம்மா விடமும் இவன் பணிந்து நடந்து மனைவியை திருப்தி படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்.


மனைவி சொல் மந்திரம்.

மனைவிக்கு அடி பணி.

மனைவி கண் கண்ட தெய்வம் என்று வாழ வேண்டும்.

----------------


கோபால் ஜெயராஜ்: இனி வரும் காலங்களில் ஆண்களுக்கு தாய் வீட்டில் இருந்து ஆதரவு கிடைக்குமா?


பொட்டச்சி புருஷன்: இனி வரும் காலங்களில் ஆண்களுக்கு தாய் வீட்டில் இருந்து ஆதரவு கிடைக்குமா என்று கேட்டீர்கள் - கிடைக்கும் தந்தை இடம் இருந்து - எப்படி முன்பு மகள் புகுந்த வீட்டுக்கு வரும்போது தாய் ஆதரவு அளித்தாரோ அது போல இனி வரும் காலங்களில், மகன் புகுந்த வீட்டுக்கு வரும்போது அங்கே இருக்கும் தந்தை ஆதரவு அளிப்பார்.


கோபால் ஜெயராஜ்: உங்கள் பதிலை கேட்பது ஆதரவாக இருக்கிறது. பாவம் ஆண்கள். அவர்கள் பிழைத்து கொள்ளட்டும். பொதுவாக பையன்கள் படிக்கும் போது அப்பா சொல்வதை கேட்பதில்லை.படிப்பை பற்றி கேட்டாலே அவர்களுக்கு கோபம் வரும். அப்பேற்பட்ட அப்பா தான் பின்னால் அவனுக்கு கஷ்டம் வரும் போது ஆதரிக்கிறார். மனைவி இடமும், மாமியார் இடமும் துன்புறும் போது உதவுகிறார்.

அப்பாக்கள் எப்போதும் great dhaan.

------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக