நான் அன்று இரவே எனது அம்மாவிடம் அவளின் புகைப்படத்தை காட்டி இன்று மாலை அவள் சொன்னதை கூறி விட்டேன். அம்மா முதலில் தயங்கினார்கள். அது மட்டுமல்லாமல் அவளின் போன் நம்பர் வாங்கி உடனே வீடியோ கால் செய்து அவளிடம் பேசினார்கள். அவளின் அம்மாவையும் கூப்பிட்டு பேசினார்கள்.
எனது அம்மா சிறு வயதில் இருந்தே தனது கணவர் தவறி போன பிறகு தன்னந்தனியே
வாழ்ந்து என்னை நல்ல முறையில் படிக்க வைத்து பெரிய ஆளாக வளர்த்ததில் அவர்களுக்கு எப்போதும்
தன் மீது ஒரு பெருமை உண்டு. தனக்கு வர போகும் மருமகளும் அந்த மாதிரி ஒரு தைரியமான பெண்ணாக
இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஒரு கனவு. இப்போது வசந்தாவை பற்றி நான் சொன்னதும், அவள் தான் விரும்பியதை
போன்று இருக்கும் பெண்ணாக நினைத்து மகிழ்ந்தார்கள். அவளுடன் பேசிய பிறகு என் அம்மாவுக்கு
அந்த நம்பிக்கை, தனது ஆசை
நிறைவேற போகும் மகிழ்ச்சி வந்து விட்டது. வசந்தா
உண்மையில் நல்ல அழகுடன்,
அறிவும், பண்பும்
நிறைந்த பெண்ணாக என் அம்மா மனதுக்கு பட்டு விட்டாள். அவளை எப்பாடு பட்டாவது எனக்கு
மனைவியாக ஆக்கி விட வேண்டும் என்று என் அம்மா முடிவு எடுத்து விட்டார்கள். அது எனக்கு
ரொம்ப வசதியாக போயிற்று.
பின்பு எனது சந்தோஷம் தான் முக்கியம், உனக்கு இதில் விருப்பம் என்றால் எனக்கும் சரி என்று கூறி விட்டார்கள். எல்லோருக்கும்
சம்மதம் என்றாகி விட்டது. அன்று வெள்ளி கிழமை, வரும் ஞாயிற்று
கிழமை நல்ல நாள் வருகிறது, நீங்கள் ஞாயிறன்று இவனை பொண்ணு பார்க்க
வாருங்கள் என்று என் அம்மா சிரித்தவாறே சொல்லி விட்டார்கள். அதை கேட்டதும் எனக்கு வெட்கம்
வந்து விட்டது, நான் உடனே ஒரு பெண்ணை போல முகத்தை மூடி கொள்கிறேன். அதை பார்த்த அவர்கள் அனைவரும் பாருடி இப்பவே இவன் பெண்கள் போல வெட்க படுவதை
என்று சொல்லி கேலி செய்கிறார்கள். நான் வீடியோ கால் ஐ கட் செய்தேன் உடனடியாக.
அம்மா
எனக்கு சிறு வயது முதலே பெண்களிடம் மரியாதையை கொடுக்கும் பழக்கம் ஏற்படுத்தி இருந்தார்கள்.
சிறு வயதில் இருந்தே என்னால் பத்து ஆண்களை அதிகாரம் செய்ய முடியும், அவர்களுடன் சண்டை
போட முடியும், ஆனால் ஒரு பெண்ணை கூட அதட்டி சத்தமாக பேச முடியாது. படித்தது எல்லாம்
ஆண்கள் பள்ளி, கல்லூரி, வேலைக்கு சேர்ந்த
இடத்திலும் எல்லோரும் ஆண்கள் தான்.
அம்மாவுக்கு அப்புறம் நான் பார்த்து அதிகம் பேசிய பெண்ணே வசந்தா
தான். அதுவும் இப்படி ஒரு அழகான, அன்பான, அறிவான இளம் பெண்
இதுவரை என் வாழ்வில் நான் பழகியதே இல்லை. அதனால் நான் அவளிடம் மயங்கியதில் ஆச்சர்யம்
இல்லை. அம்மாவுக்கும் அது நன்கு புரிந்து விட்டது, பரவா இல்லை, நல்ல பெண்ணாகவே அமைந்து விட்டது என்று என் அம்மாவுக்கும் மகிழ்ச்சி.
நல்ல வேளை அடுத்த நாள் சனி கிழமை என்பதால் அலுவலகம் இல்லை. காலை
வசந்தா போன் செய்து ஒரு பிங்க் நிற புடவையை வீடியோவில் காட்டினாள். பிறகு சொன்னாள்
நான் இதை கட்டி வருவேன், அங்கு வந்த வுடன் நான் வேட்டி சட்டைக்கு மாறி
விடுவேன், பின்பு நீ இந்த புடவையை கட்டி கொண்டு வர வேண்டும் என்றாள்.
நான் சொன்னேன் எனக்கு புடவை கட்ட தெரியாதே என்று. அதற்கு அவள்
அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, முதல் முறையாக நானே உனக்கு எனது
புடவைய கட்டி விடுகிறேன் என்றாள்.
எனது அம்மா நாங்கள் பேசுவதை கேட்டு கொண்டு வந்து சிரித்தவாறே
சொல்லி விட்டார்கள் - எதுக்கும் கவலை படாதே,
நாளைக்கு பாரு நீயே அசந்து போய்டுவ என்று
சொல்லி எங்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். எனது அம்மாவுக்கு டைலரிங் தெரியும் என்பதால்
அவர்களே, எனக்கு
அளவு எடுத்து, பிங்க்
நிறத்தில் மேட்சிங் ஆக ஒரு ப்ளௌஸ் தைத்து விட்டார்கள்.
ஞாயிறன்று அம்மா என் உடம்பில் இருந்த அத்தனை முடியையும் மழிக்க
சொன்னார்கள். பிறகு மஞ்சள் தேய்த்து குளிக்க சொன்னார்கள். என்னம்மா இப்பவே புடவை
கட்டிக்கணுமா என்று நான் கேட்க,
அம்மா அதெல்லாம் தேவை இல்லை,
வசந்தா சொன்ன மாதிரியே அவளே வந்து உனக்கு தன் கையால முதலில் புடவை கட்டி விடட்டும், இப்போதைக்கு நீ
வழக்கம் போல மாப்பிள்ளை பையனா கம்பீரமா பட்டு வேட்டி சட்டை போட்டு கிட்டு இருடா என்று
சொல்லி விட்டார்கள்.
ஞாயிறு காலை வசந்தாவும், அவள் அம்மாவும் எனது
வீட்டுக்கு வந்தார்கள். வசந்தாவை அன்று தான் முதல் முதலாய் ஒரு அழகான பிங்க் புடவையில்
பார்த்தேன், ஒரு தேவதையை
போல இருந்தாள். நான் அப்போது ஒரு வெண் பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை போல கம்பீரமாய்
இருந்தேன். நாங்கள் இருவரும் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்து கொண்டோம்.
அதே போல சற்று நேரம் கழித்து உள்ளே கூப்பிட்டாள். அவள் இப்போது
புடவைய கழட்டி விட்டு ஒரு ஆண் மகன் போல வேட்டி சட்டையில் இருந்தாள். இப்போது நாங்கள்
இருவரும் வேட்டி சட்டையில் இருந்தோம். நான்
உள்ளே சென்ற வுடன், இருவரையும்
சேர்த்து ஒரு போட்டோ எடுத்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக