EP01 - முதல் சந்திப்பு
என் பெயர் சுதாகர். என் மனைவியின்
பெயர் நித்யா. இது என்னோட வாழ்வில் நடந்த கதை.
எனக்கு இப்ப வயது 32, அப்பா தவறி போனதால குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பு வரை
நன்கு படித்தும், நான் வேற வழி இல்லாம மெக்கானிக்கல் இன்ஜினியரிங்ல டிப்ளமோ
படிச்சுட்டு 19 வயசுல வேலைக்கு சேர்ந்தேன், ஒரு அதிகம் அறிய படாத தனியார் கம்பெனில. 12 வருஷம்
கழிச்சு இப்பதான் SUPERVISOR ஆகி இருக்கேன்.
எனக்கு ஒரு அண்ணா மற்றும் ஒரு தங்கை
உண்டு. அப்பா போனதுக்கு அப்புறம் அண்ணாதான் என்னையும், தங்கையையும்
படிக்க வைத்து, தங்கைக்கு கல்யாணமும் பண்ணி வைத்தார். அப்புறம் அண்ணா கல்யாணம் பண்ணி
கொண்டார். இதனால் எனக்கும் லேட்டா தான் கல்யாணம் பண்ண, பொண்ணு பார்க்க
ஆரம்பிச்சாங்க.
நான் குடும்ப சூழல் காரணமாக
மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து விட்டு பிரைவேட் கம்பெனில வேலை பாக்குறதால
சீக்கிரம் பொண்ணு கிடைக்கல. இப்பல்லாம் பொண்ணுங்க நல்லா படிச்சுட்டு IT லைன்ல கை நிறைய நல்ல சம்பளம் எல்லாம்
வாங்குறதனால் (அதுவும் முக்கியமா எங்க ப்ராஹ்மண பொண்ணுங்க), என்னை மாதிரி
இருக்குற பையனுக்கு யாரும் அவ்வளவு சீக்கிரமா பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க.
அப்பத்தான் என் மன்னி (அண்ணாவின் மனைவி
- அண்ணி) வழியில் தெரிஞ்சவங்க மூலமா ஒரு வரன் வந்தது, ஜாதக பொருத்தம் சரியாய்
இருக்கிறது என்று. அப்படி பொருந்தி வந்த பெண்ணோட குடும்பம் ரொம்ப மரியாதையான ஐயர்
குடும்பம். பொண்ணுக்கு படிப்பு முடிஞ்சு, வேலை கிடைச்சதும், சீக்கிரம்
கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு செய்து, நல்ல பையன் கிடைச்சா போதும் என்று அவளுக்கு
மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள்.
படிப்பு, வசதி இதெல்லாம் விட நல்ல பழக்க வழக்கம், குடும்ப
பாரம்பரியம் இதெல்லாம் தான் முக்கியம் என்று கருதி உள்ளார்கள். அப்படி என்னை
பற்றி விசாரித்ததில், நல்ல பொறுப்பான குடும்பத்துல வளர்ந்த பையன், எந்த கெட்ட பழக்கமும் கிடையாது என்று
எல்லோரும் நல்ல அபிப்ராயம் சொல்லவே,
பிடித்து போய், இந்த காலத்துல இப்படி ஒரு நல்ல பையனா என்று, அவங்க பொண்ணுக்கு
என்னை பார்க்க முடிவு செய்தார்கள்.
அப்படி எனக்கு பார்த்த பெண்ணோ, நல்ல ஒரு
பிரபலமான பிரைவேட் கல்லூரில, இன்ஜினியரிங் படிச்சுட்டு பன்னாட்டு IT கம்பெனில
வேலை பாக்குராங்க. வயசு 26 தான்.
அவ சொல்லி இருக்கா, பொண்ணு
பார்க்கிற சடங்குகளுக்கு முன்பே நான் பையன பார்த்து பேசணும்னு. அப்புறம் எனக்கு
ஓகே னு தோணினால் அப்புறம் அவன் முறையா பொண்ணு பார்க்க வரட்டும் குடும்பத்தோட
என்று. அவ்வாறே அவங்க முதல்ல என்னை ஒரு காப்பி ஷாப் க்கு வர சொல்லி இருந்தாங்க.
நான் அவங்க கொடுத்த இடத்துக்கு கொஞ்ச
நேரத்துக்கு முன்னாலேயே போய் வெயிட் பண்ணி கிட்டு இருந்தேன். நானும் ஐயர்
பசங்களுக்கே உண்டான லட்சணத்துடன்,
பார்க்க கட்டான காளை போன்ற உடல் வாகுடன் ஒரு
சினிமா ஹீரோ போல இருப்பேன்.
அன்று மதியமே அரை நாள் விடுப்பு
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு வேட்டி சட்டை அணிந்து கொண்டு, ஏதோ மாப்பிள்ளை
பெண் பார்க்க கிளம்பி செல்வது போலவே, அவள் சொன்ன இடத்துக்கு ஒரு ஆட்டோ பிடித்து
சென்றேன்.
அன்னிக்கு அவ ஆபீஸ் பார்மல் ட்ரேஸ்ல ஹை ஹீல்ஸ் டக் டக் என சப்தம் போட கம்பீரமா நடந்து வந்தா. அவளை அப்படி ஒரு ஆஃபீசர் கோலத்துல பார்த்ததும் தன்னால ஒரு மதிப்பு ஏற்பட எழுந்து நின்று கை கூப்பி வணக்கம் செய்தேன். வந்தவ தன்னோட இடத்துல உட்கார போகும்போது அவளோட நாற்காலியை நகர்த்தி உட்கார வைத்தேன்.
அப்புறம் அவ கால் மேல கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, என்னை பார்த்து, நீயும் உட்காரு என்று சொன்னதும், என் மேனேஜர் முன்னால எப்படி கொஞ்சம் பயத்துல நாற்காலி ஓரமா உட்காருவேனோ, அதே போல ஏதோ அவ கிட்ட வேலை பாக்குற ஊழியன் போல பவ்யமா உட்கார்ந்தேன்.
அப்புறம் அவ தான் என்கிட்டே ரொம்ப
கேள்வி கேட்டா, ஏதோ என்னை இன்டெர்வியூ பண்ணுவது போல, நானும் ரொம்பவே மரியாதையா கேட்ட
கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி கிட்டு இருந்தேன். கடைசியா என்னடா உனக்கு என்னை
பிடித்து இருக்கா என்று கேட்டாள்.
பார்த்த முதல் பார்வையிலேயே அவ
அழகுல மயங்கி போய்ட்டேன், எனக்கு இப்படி ஒரு அழகு தேவதையா, பொண்டாட்டியா வர போறா என்று. அதனால் உடனே அங்கேயே
ஓகே சொல்லி விட்டேன்.
உங்களை கல்யாணம் பண்ணி கொள்ள எனக்கு
கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன். அதை கேட்டு அவள் சிரித்து
விட்டாள். அவள் சிரித்த வுடன், நான் மெல்ல, ஏங்க உங்களுக்கு என்னை பிடித்து இருக்கா என்றேன்.
அதற்கு அவள் நான் என் அப்பா அம்மாவிடம்
பேசி விட்டு, அப்புறம் தேவை பட்டால் உன் வீட்டுக்கு சொல்லி அனுப்புவோம், அப்ப நீ உன்
குடும்பத்தோட என்னை முறையா பொண்ணு பார்க்க வரலாம், இப்போதைக்கு நான் இவ்வளவுதான் சொல்ல முடியும், சரி
கிளம்புறேன்டா என்றாள். நான் உடனே எழுந்து திரும்ப கை கூப்பி வணங்கி, நன்றிங்க உங்க
நேரத்தை செலவழித்து நீங்க வந்து என்னோட பேசினத்துக்கு என்றேன்.
கிளம்பியவள் திரும்பி நின்று, நீ எப்படி
திரும்பி செல்ல போகிறாய் என்று கேட்க, நானோ பக்கத்தில்தான் பேருந்து நிலையம் உள்ளது, பஸ் பிடித்து
செல்வேன் என்று கூறினேன். உடனே அவள், வா உன்னை பேருந்து நிலையத்தில் ட்ராப்
செய்கிறேன் என்று சொன்னாள். வெளியில் வந்து பார்த்தால், அவள் பைக் ஒன்றை
ஒட்டி வந்து, வாடா வந்து ஏறிக்கோ என்றாள்.
என்னங்க உங்களுக்கு பைக் எல்லாம் ஓட்ட
தெரியுமா என்று நான் கேட்க, அப்புறம் என்ன ஓட்ட தெரியாமலா இப்ப உன் முன்னால பைக் ல நிக்குறேன்
என்று சற்று கிண்டலாக கேட்க, அது இல்லீங்க என்று சற்று அசடு வழிந்தேன்.
வேட்டி கட்டியதன் காரணமாக அவளின்
பின்னால், ஒரு
பொம்பிளை போல காலை ஒரே பக்கமாக போட்டு, நல்ல இடைவெளி விட்டு ஓரமாக உட்கார, அவள் சற்று
சிரித்தவாறே என்னை சற்று தொலைவில் இருந்த மெயின் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டாள் -
இங்கிருந்து கிளம்புவதால் கூட்டம் கம்மியாக இருக்கும் உட்கார்ந்து போகலாம், என்று நான்
பஸ்ஸில் உட்கார்ந்து கிளம்பும் வரை, ஏதோ சின்ன பையனை கவனித்து கொள்ளும் தாயை போல இருந்து பார்த்து
விட்டு,
கடைசியில் சிரித்து கொண்டே பை டா என்று சொல்லி கிளம்பினாள். நானும் கை கூப்பி நன்றிங்க, நீங்களும்
பத்திரமாக போயிட்டு வீடு சேர்ந்ததும் போன் பண்ணுங்க என்று சொல்லி வீடு வந்து
சேர்ந்தேன்.
நான் அன்று நடந்ததை சொன்னவுடன், எனது வீட்டிலோ
கொஞ்சம் பயந்தார்கள், என்னடா பொண்ணு ரொம்ப படிச்சு இருக்கா, சம்பளமும் ஏறக்குறைய இப்ப நீ வாங்குறதுக்கு
சமமா வேற இருக்கே என்றெல்லாம். நான் சொன்னேன், இதெல்லாம் முன்பே தெரிஞ்சது தானே, அவங்களே
வேண்டாம்னு நம்மளை பொண்ணு பார்க்க கூப்பிட மாட்டாங்க, முதல்ல அவங்க
என்ன சொல்றாங்க னு பார்ப்போம் என்று.
நான் அவளிடம் நடந்து கொண்ட விதத்தை, அவள் தனது
அம்மா அப்பாவிடம் சொல்ல, அவங்க அம்மா அவளிடம் சொல்லி இருக்கிறார்கள், இந்த காலத்துல
இப்படி ஒரு பணிவான, மரியாதையுடன் நடந்து கொள்ளும் பையன் கிடைப்பது அரிது. அவன் உன்னை தன்
கண்மணி போல கண்ணில் வைத்து தாங்குவான், வேண்டாம்னு சொல்லாதே என்றெல்லாம் அறிவுரை
வழங்கி உள்ளார்கள்.
அதை கேட்டு அவளும் தன்னுடன் IT கம்பெனில வேலை
பார்க்கும் ஆண்களோடு என்னை ஒப்பிட்டு, எனது குணம் பிடித்து போய், ஓகே, சரி என்னை
பொண்ணு பார்க்க அவனை குடும்பத்தோட வர சொல்லுங்க என்று கூறி விட்டாள்.
அப்புறம் அவளே எனக்கு போன் போட்டு, என்னடா
வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்தாச்சா என்று கேட்க, நானும் வந்து சேர்ந்துட்டேங்க, ரொம்ப நன்றி, அப்புறம் நீங்க
என்று கேட்டேன். அதற்கு அவளும் நானும் வந்து சேர்ந்தாச்சு. அது மட்டுமில்லை, என்னை முறையா
பெண் பார்க்க, உன் வீட்டாரை விட்டு எங்க வீட்டுல பேசிட்டு, ஒரு நல்ல நாள்
பார்த்து வாடா என்று சொல்ல, நான் என் காதில் கேட்பதை நம்ப முடியாமல் அப்படியே உறைந்து போய்
நிற்கிறேன். என்னிடம் இருந்து பதில் வராததால், அவள் திரும்ப என்னடா லைன் தான் இருக்கியா
என்று கேட்க, அப்புறம் உணர்வு வந்து, சரிங்க ரொம்ப சந்தோசம், வீட்ல
சொல்லிட்டு அப்புறம் வரோம் என்று சொல்லி போனை வைத்தேன்.
Semmaya irukke... en ithukku commetns illa
பதிலளிநீக்குI used to post link in my Facebook and used to get comments there.
பதிலளிநீக்கு