இனி வரும் கதை எனது மனைவி நித்யா
கூறுவது போல எழுதி உள்ளேன் - அவள் தனது பார்வையில் அவளது கதையை கூறுகிறாள்.
படித்து மகிழுங்கள்.
நான் நித்யா, வீட்டுல ஒரே
செல்ல பொண்ணு. அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க,
எனக்கு ரொம்ப பிடிக்கும். குறும்பும், சுட்டி தனமும்
கொண்டு வாழ்ந்து வந்த நான் படிச்சு முடிச்சதெல்லாம் பெண்கள் மட்டும் பள்ளி மற்றும்
கல்லூரியில். இன்ஜினியரிங் பண்ணும்போதும் கூட எங்க வகுப்புல பொண்ணுங்க மட்டும்தான்.
ஆண்கள் வகுப்பு தனியே இருக்கும்,
அதிகம் ஒண்ணா பழக வாய்ப்பு இல்லை, ரொம்ப
கண்டிப்பான கல்லூரி.
படிப்பு முடித்ததும் ஒரு பெரிய கம்பெனி
ல வேலை கிடைத்தது. அங்கே வேலைக்கு சேர்ந்த இடத்துல அதிக
பட்சம் ஆம்பிளைங்க. எனக்கு என்று ஒதுக்கிய பயிற்சியாளர், பிரபாகர் - வயது
36 - ரொம்ப நல்ல மனிதர்தான். ஆனா அங்கே
எனது அணியில் இருக்கும் மத்த ஆம்பிளைங்க அவ்வளவு சரியில்லை. மாறன் (52), சுரேஷ் (32), நந்தா (36) & ராஜீவ் (28) -
இவங்கதான் என் அணி / TEAM. எனக்கு அப்போது வயது 23.
வேலைக்கு சேர்ந்த புதுசுல நான்
சுடிதார் தான் போடுவேன். அப்ப அங்கே வேலை பாக்குற ஆம்பிளைங்க பாக்குற பார்வையே
சரியா இருக்காது. வயசான மாறன் உட்பட எல்லோரும் உத்து உத்து பார்ப்பாங்க, ஏதோ இதுவரை
பொண்ணுங்களையே பார்க்காத மாதிரி.
அப்புறம் என் பாஸ் பிரபாகர் சொன்ன
மாதிரி,
நானும் ஆம்பிளைங்க மாதிரி ஜீன்ஸ் பாண்ட், தளர்வான ஜென்ட்ஸ் ஷர்ட் போட ஆரம்பிச்சேன். அப்ப
கூட மாறன் கிண்டல் பண்ணுவார் - என்ன நித்யா நீ எப்ப ஆம்பிளை ஆன என்று.
வயசான அவருக்கு மரியாதை கொடுக்கலைன்னா
ரொம்ப கோப படுவாரு. நீயெல்லாம் என் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணும்னு சொல்வாரு.
எனக்கு இப்படி மரியாதைய கேட்டு வாங்குறது பிடிக்காது, அது தன்னால
அவங்க நடந்துகிறத பார்த்து வரணும் என்பது என் அபிப்பிராயம். என்னை பொறுத்த வரை
அந்த அலுவலகத்தில் என் பாஸ் பிரபாகர் சார் மட்டுமே என் மரியாதைக்கு உரியவராக
இருந்தார்.
எங்கள் அலுவலகத்தில் மொத்தம் மூன்று
குழுக்கள் இருந்தன. எங்கள் குழு தலைவர் பிரபாகர் சார். எங்கள் குழு ஏதும் புது
ப்ராஜெக்ட் எல்லாம் எடுத்து நடத்துவது இல்லை. ஏற்கனவே நடந்து கொண்டு ப்ராஜெக்ட்
களை தொடர்ந்து பார்த்து கொள்வது தான் எங்கள் வேலை. எனவே அதிகம் மன அழுத்தம் இல்லாத
வேலை. நான் பயிற்சி க்காக வேலையில் சேர்ந்ததால், அங்கு உள்ள எல்லோரிடமும் சென்று சில வாரங்கள் /
மாதங்கள் கூட இருந்து அவர்கள் வேலையை கத்து கொண்டேன். எனது சுறுசுறுப்பு, திறமை என் பாஸ்
பிரபாகர் சாருக்கு ரொம்பவே பிடித்து போய் விட்டது.
ஆனால் சேர்ந்த சில மாதத்தில் தெரிந்து
விட்டது, பிரபாகர்
ஒரு அப்பாவி, ரொம்ப நல்லவர், எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வார், ஆனால் நன்கு
கட்டு படுத்தி வேலை வாங்க தெரியாது என்று. நான் பார்த்தவரை எல்லோரும் அவரை பாஸ்
என்று மதிக்காமல், எடுத்தெறிந்து பேசுவதை பல தடவை கேட்டு இருக்கிறேன். அவர்தான் கொஞ்சம்
பார்த்து பண்ணி கொடுப்பா என்று கெஞ்சும் குரலில் சொல்லி கொண்டு இருப்பார். மத்த
மெம்பெர்ஸ் செய்ரோம் என்று சொல்லி கடைசி வரை இழுத்தடிப்பார்கள். பல தடவை அவர்கள்
கடைசி நேரத்தில் கொடுக்கும் தரவுகள் சரியாக இருக்காது. அவரே அதை சரி செய்து
மேலிடத்துக்கு அனுப்புவார் - இல்லை எனில் அவரின் மானம்தானே போகும் என்று உணர்ந்து
கொண்டு. நான் அதில் அவருக்கு பல தடவை உதவி செய்து கொடுத்து இருக்கிறேன்.
பிரபாகர் எப்போதும் என்னை வாம்மா, போம்மா என்று மா
போட்டு அழைப்பார். என்னை மட்டுமல்ல,
அங்கே வேலைபார்க்கும் மற்ற ஆண்களையும் என்னப்பா, வாப்பா என்று பா
போட்டு பேசுவார். வேடிக்கையாக இருக்கும்.
ஆனால் மற்றவர்களோ என்னை அப்படி ஏதும்
மரியாதையை இன்றி, ஏய் நித்யா, என்னடி பண்ணி வைச்சு இருக்க என்றெல்லாம் சொல்லுவார்கள். எனக்கு
கோபமாய் வரும், வைச்சுக்கிறேண்டா உங்களை எல்லாம், எனக்கு ஒரு நேரம் வரும் அப்ப பார்த்துக்கிறேன்
என்று மனதுக்குள் கருவி கொள்வேன்.
அந்த நேரம்தான் எனக்கு கல்யாணத்துக்கு
வரம் பார்க்க ஆரம்பித்தார்கள். பல பேரை பார்த்தும், அவர்களிடம் வழக்கமான ஆண் திமிரை நான்
உணர்ந்ததால் வேண்டாம் என்று மறுத்து வந்தேன். அப்போதுதான் சுதாகரை முதல் முதலாய்
பார்த்ததும், கொஞ்சம் நல்ல அபிப்ராயம் வந்தது.
சுதாகரை கல்யாணம் செய்து கொண்ட முதல்
இரவன்றே,
அவன் என்னிடம் அடங்கி நடக்க ஆரம்பிக்க, அது என்னவோ எனக்கு ரொம்ப பிடித்து போயிற்று.
அது நாள் வரை எந்த ஆதிக்க மனோபாவம் இல்லாமல் இருந்த நான், அதன் பிறகு என்
கணவரிடம் அதிகாரமாக நடக்க ஆரம்பித்தேன் - என் அலுவலகத்தில் எனக்கு ஆண்களிடம்
இருந்த கோபத்துக்கு என் கணவர் மூலமாக ஒரு வடிகால் கிடைத்ததது போல உணர்ந்தேன்.
ஆனால் பின்பு யோசித்த போது, கணவரின்
உண்மையான அன்பு புரிபட ஆரம்பித்தது. அதனால் மெல்ல மெல்ல அவரிடம் அதிகம் அன்பு
செலுத்த ஆரம்பித்து விட்டேன். அவருக்கு எனக்கு அடங்கி நடக்க பிடித்து இருந்ததாலேயே, அவர்
விருப்பத்துக்காக அவரை அடக்கி நடத்துவது போல நடத்தினேன். ஆனால் வெளியில் அவரை எந்த
விதத்திலும் விட்டு கொடுக்காமல் முழு மரியாதை கொடுத்தேன், அவரது மரியாதை அதிகரிக்கும்
வகையில் நடந்து கொண்டேன். அது அவருக்கும் புரிந்து, இன்னமும் எனக்கு இல்லை,
என் அன்புக்கு, அடங்கி நடக்கிறார் வீட்டில்.
அவரிடம் இதை பற்றி ஒரு தடவை
வெளிப்படையாக பேசும் போது அவர் சொன்னார், ஆண்களுக்கு தன்னை அடக்கி ஆளும் பெண்களை
கொஞ்சமும் பிடிக்காதுதான், ஆனால் அதே சமயம் ஒரு பெண் தன்னிடம் உண்மையான அன்பு
காட்டுவது தெரிந்தால், அவளுக்கு அடங்கி போய்வதில் அவர்களுக்கு
எந்த தயக்கமும் இருப்பதில்லை என்று.
அந்த கருத்து எனக்கு சரியாக பட்டது.
எனது அலுவலகத்தில் எனக்கு இருக்கும் பிரச்சினைக்கும் அதை முயற்சி செய்து பார்க்க
ஆலோசனை வழங்கினார் என் கணவர். நல்ல யோசனை ஆக தோன்றியதால். அதை எனது அலுவலகத்திலும்
செயல் படுத்த முயற்சி செய்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக