எங்கள் டீம் இப்போது ஒரு ப்ராஜெக்ட் ஐ
வெற்றிகரமாக முடித்து கொடுத்ததால்,
எங்கள் கம்பெனி எங்களுக்கு ஒரு வீக் எண்டு
பார்ட்டி குடும்பத்துடன்
செலவழிக்க வகை செய்தார்கள்.
அன்று நான் எனது கணவருடன் சென்று
இருந்தேன். அங்கே எனது டீம் மெம்பெர்ஸ் (மாறன், சுரேஷ், நந்தா, ராஜீவ்) எல்லோரும் தங்கள் மனைவி மற்றும்
குழந்தைகளுடன் வந்து இருந்தார்கள். பிரபாகர் சார் கூட தனது மனைவி உடன் வந்து
இருந்தார்.
நான் தான் சற்று தாமதமாக உள்ளே
நுழைந்ததும், அங்கே இருந்த அனைவரும் எழுந்து நின்று எனக்கு வணக்கம் செய்தனர்.
தங்கள் கணவர் எழுந்து நிற்பதை பார்த்து, அவர்களின் மனைவிகளும், குழந்தைகளும்
எழுந்து நின்றனர். பிரபாகர் சார் கூட எழுந்து நேரே என் அருகே நடந்து வந்து என்னை வாம்மா நித்யா என்று அன்போடு வர
வேற்றார்.
பிரபாகர் சார் அவர் அமர்ந்து இருக்கும்
மேடையில், அவருக்கு
சரி சமமாக எனக்கும் ஒரு இடம் போட்டு இருந்தார். என்னை அதை நோக்கி அழைத்து
செல்லும்போது, வழியில் உள்ள அணைத்து டீம் மெம்பெர்ஸ் உம் நான் அவர்கள் அருகில்
செல்லும் வரை நின்று கொண்டே, அவர்கள் அருகில் வரும்போது, என்னிடம் வணக்கம் மேடம் என்று சொல்லி வணக்கம்
வைத்தனர் (கை கூப்பியவாறு). நானும் பதில் வணக்கம் வைத்து உட்காருங்கள் என்றேன்.
அதன் பின்பே அவர்கள் அமர்ந்தனர்.
இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த
அவர்கள் குடும்பத்தினர் சற்றே ஆச்சர்ய பட்டார்கள். அவர்களுக்கு தெரியும், அவர்கள்
கணவன்மார்கள் இப்போதெல்லாம் ஒரு புதிய மேடம் இடம் வேலை செய்கிறார்கள் என்று. ஆனால்
அவர்கள் நினைத்து பார்க்க வில்லை,
அந்த மேடம் என்று அவர்கள் கணவர் அழைக்கும் பெண், இப்படி ஒரு
சின்ன பொண்ணு என்று.
நான் சென்று மேடையில் கால்மேல கால்
போட்டு உட்கார்ந்ததும், அவர்கள் தங்கள் கணவர்களிடம், என்னங்க இவர்களா, நீங்க சொல்லும் மேடம், பார்க்க ரொம்ப
சின்ன பொண்ண இருக்காங்களே என்று. அப்போது அவர்கள் கணவர்கள் சொல்லி
இருக்கிறார்கள். போடி, மேடம் அவங்க பார்க்கத்தான் சின்ன பொண்ணு, வேலையில் பயங்கர
கில்லாடி.
இந்த காலத்துல எல்லா இடத்துலயும் வேலைல
இருந்து ஆளை எடுத்து கிட்டு இருக்காங்க, இப்ப நான் வேலைல இருக்கேண்ணா அதுக்கு அவங்க
தான் காரணம் என்று சொல்ல, அவர்களும் என்னை மதிப்புடன் பார்க்கிறார்கள்.
பின்பு சில ஆரம்ப பேச்சுகள்
முடிந்தவுடன், நான் கீழே இறங்கி, ஒவ்வொருவர் இடமாக சென்று அவர்கள் குடும்பத்தினருடன் என்னை
அறிமுகப்படுத்தி கொள்ள ஆரம்பித்தேன்.
அப்போதுதான் எனது ஆண் டீம் மெம்பெர்ஸ்
என்னிடம் காண்பித்த மாற்றம் அவர்கள் வீட்டிலும் நல்ல மாற்றத்தை கொண்டு வந்து
உள்ளது என நான் அறிந்தேன்.
என்னிடம் பணிவுடன் நடக்க ஆரம்பித்தவுடன், நான் அவ்வப்போது
அவர்கள் வீட்டை பற்றி விசாரிப்பேன். அப்போது அவர்களுக்கு குடும்ப அமைதியின்
முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் பேசுவேன்.
அதன் பிறகு நான் வரும் வரை
வீட்டிலும் ரொம்ப அதிகாரமாக நடந்து கொண்டு இருந்தவர்கள், கம்பெனியில்
எப்படி என்னிடம் பணிவோடு நடக்க ஆரம்பித்து விட்டனரோ, அதே போல வீட்டிலும் தங்கள் மனைவி மற்றும்
குழந்தைகளுடன் நல்ல விதமாக நேரம் செலவழிக்க ஆரம்பித்து உள்ளனர் என்று அறிகிறேன்.
அவர்களின் அந்த மாற்றத்துக்கு காரணம் நான்தான் என்று அறிந்ததும், அவர்கள்
மனைவிகளும், குழந்தைகளும் என்னிடம் ரொம்ப பாசமாக பேசினர்.
அப்போது அவர்கள், என்னங்க, போங்க மேடம்
க்கு தட்டுல ஸ்னாக்ஸ் எடுத்து கிட்டு வாங்க என்று சொல்ல, ஒவ்வொரு டேபிள்
யிலும் நான் செல்லும்போது அங்கே இருக்கும் எனது டீம் மெம்பெர்ஸ், அவர்கள் மனைவி, குழந்தைகள்
முன்பே,
எனக்கு பணிவிடை செய்வதை பார்க்கும் போது எனக்கே சற்று சங்கோசமாக இருந்தது. ஆனாலும்
அதை அனுபவித்து கொண்டு இருந்தேன். அங்கிருந்த யாரும் அதை தவறாக எடுத்து கொள்ள
வில்லை. நானும் அவர்கள் அனைவரின் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டேன் அன்று
முதல்.
என் கல்யாணத்தின் போது அவர்கள் நடந்து
கொண்டதையும், இப்போது அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் பார்த்து, என் கணவரே
அதிசயித்து போய் விட்டார். அன்று இரவு
அவர் என்னிடம், என்ன மேடம் வீட்ல மட்டும்தான் நீங்க என்னை அதிகாரம் பண்றீங்கன்னு
நினைச்சேன். இப்ப பார்த்தால் அலுவலகத்தில் எல்லோரையும் அதிகாரம் செய்து, அதட்டி, மிரட்டி வேலை
வாங்கி கிட்டு இருக்க போல என்று சொல்லி, களைத்து போய் இருந்த எனக்கு உடம்பு முழுக்க சிறப்பாக
மசாஜ் செய்து விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக