நித்யாவின் அலுவலகத்தில், P02
வேலை செய்யும் திறன் பிரபாகர் சாருக்கு மிகவும் பிடித்து போனதால் அவர் என்னை தனக்கு அடுத்த நிலையில் வைத்து எனக்கென பல பொறுப்புகளை வழங்கினார். அதில் முக்கியமானது, அவருக்கு வரும் எந்த ரிப்போர்ட் களையும் நான் முதலில் படித்து பார்த்து சரி செய்து கொடுக்க வேண்டும் என்பது. அதை அவர் அங்கே வேலை செய்யும் மற்றவர்களிடம் சொல்லி விட்டார். அன்று முதல் எனது டீம் மெம்பெர்ஸ் எல்லோரும் தங்களின் ரிபோர்ட்ஸ் எல்லாவற்றையும் எனக்கு அனுப்ப தொடங்கினர். நான் பார்த்தவரை அது எல்லாமே ரொம்பவே சுமாராக இருந்தது - பல தவறுகள் உள்ளதாக இருந்தது. இப்போதுதான் புரிந்தது எங்கள் டீம் இதுவரை எந்த புதிய ப்ராஜெக்ட் ஏன் எடுக்க வில்லை என்று.
பாவம் பிரபாகர் சார் முடிந்தவரை
மற்றவர்களின் தவறுகளை அவரே திருத்தி கொண்டு சமாளித்து வருகிறார், ஆனால் அவர்களை
திருத்தி வேலை வாங்க முடியாதவராக உள்ளார் என்று தெரிந்தது. நான் இதை என் கணவரிடம்
சொன்னபோது, அவர் என்னை சற்று கடுமையாக நடந்து கொள்ள சொன்னார்.
என் கணவர் என்னிடம் எந்த அளவுக்கு
அடங்கி நடந்து கொள்கிறாரோ, அதே நேரம் அவர் வேலை செய்யும் இடத்தில், அவர் தனது வேலை
காரர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என்று அறிந்து இருந்தேன். சில சமயம்
அவரிடம் வேலை பார்க்கும் நபர்களை வெளி இடங்களில் சந்திக்கும் போது, அவர்கள் என்
கணவரிடம் மிகவும் பணிவுடன் நடப்பதை பார்த்து ஆச்சர்ய பட்டுள்ளேன் - என்னிடம்
பணிந்து நடக்கும் என் கணவர், மற்றவர்களிடம் எப்படி கடுமையாக நடந்து கொள்கிறார் என்று.
அதனால் நானும் அப்போது முதல் எனது
புதிய அதிகாரத்தை பயன் படுத்த ஆரம்பித்தேன். எனக்கு வரும் ரிபோர்ட்ஸ் களை திருப்பி
அனுப்ப ஆரம்பித்தேன் - அதில் இருக்கு தவறுகளை ஹயிலைட் செய்து அவற்றை சரி செய்து
திருப்பி அனுப்பும் படி. நான் அப்படி திருப்பி அனுப்பியது அங்கே இருந்த
மற்றவர்களுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. என்னிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட
ஆரம்பித்தனர். நீ எப்படி எங்கள் ரிபோர்ட்ஸ் ய் திருப்பி அனுப்பலாம் - உனது வேலை
அதை மேலிடத்துக்கு அனுப்புவது மட்டுமே என்று.
பிரபாகர் சாருக்கு ஏற்கனவே அவர்களின்
வண்டவாளம் தெரியும் என்பதால், நான் அவரை போல தயங்கி தயங்கி தானே சரி செய்து கஷ்ட படாமல் தைரியமாக
திருப்பி அனுப்பி சரி செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்வதை பார்த்து அவர் என்னை
தனியே அழைத்து பாராட்டினார். அத்துடன் நான் கேட்டு கொண்ட படி, என் டீம்
மெம்பெர்ஸ் அவரிடம் சென்று என்னை பற்றி புகார் செய்தால், எனக்கு தெரியாது, நித்யா விடம்
நான் வேலை கொடுத்து உள்ளேன். எனக்கு சரியான ரிபோர்ட்ஸ் வர வேண்டும் என்று. அவள் அதில்
ஏதும் குறை கண்டு பிடிக்கிறாள் என்றால் நீங்கள் அவளிடம் சென்று அதை பற்றி பேசி
தீர்த்து கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்பி விட்டார்.
எனவே வேறு வழி இன்றி, இப்போது அவர்கள்
என்னிடம் வந்து என்னடி தப்பு கண்டு பிடித்தாய் என்று கத்தி கோப படும்போது, நான் கூல் ஆக
ஏற்கனவே அதை கோடிட்டு ஹயிலைட் செய்து காண்பித்துள்ளேன் என்று சொல்லிவிடுவேன்.
அவர்களும் அதை பார்க்கும் போது, தங்கள் தவறை உணர்ந்து முடிந்தவரை இப்போதெல்லாம் அதை சரி செய்ய
முயற்சிக்கிறார்கள். என்னால் தான் காரியம் ஆக வேண்டும் என்று தெரிந்து கொண்டதால், இப்போதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நித்யா திருத்தி
அனுப்பி இருக்கிரோம், இதற்கு மேல் முடியாது,
கொஞ்சம் பார்த்து செய் என்று கெஞ்சும் அளவுக்கு
இறங்கி வர ஆரம்பித்தார்கள் முதல் முறையாக.
அப்படிதான் ஒரு முறை மாறன் சார் சரியாக
ஐந்து மணிக்கு கிளம்பும்போது எனக்கு ஒரு ப்ரெசென்ட்டேஷன் அனுப்பி இருந்தார். அது
அடுத்த நாள் பிரபாகர் சார் தனது மேனேஜர் இடம் சமர்ப்பிக்க வேண்டிய முக்கியமான ஒரு
ப்ராஜெக்ட் அப்டேட் ஆகும். பார்த்தால் ஒரே தப்பு தப்பாக இருந்தது. அப்படியே திருப்பி
அனுப்பி விட்டேன் - சரி செய்து கொண்டு வரும்படி இல்லை என்றால், மாறன் சார்தான்
அதனை மேனேஜர் முன்னால் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டேன் கண்டிப்பாக.
மாறன் சாருக்கு தெரியும் அந்த மேனேஜர்
மேடம் எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்று. அவர் மட்டும் அதனை ப்ரெசென்ட் செய்தால்
அந்த மேடம் அவரை கிழித்து தொங்க விட்டு விடுவார்கள் என்று பயந்து விட்டார்.
என்னிடம் போனில் அவர் வீட்டில் இருந்தே கெஞ்ச ஆரம்பித்து விட்டார். நித்யா தயவு
செய்து ஏதாவது செய்து என் மானத்தை காப்பாத்தும்மா என்று கெஞ்சினார்.
அன்று என் கணவரிடம் சொல்லி விட்டு, இரவு முழுவதும்
விழித்து இருந்து அதை கஷ்ட பட்டு சரி செய்தேன் - மாறனையும் தூங்க விட வில்லை, கேள்வி மேல
கேள்வி கேட்டு கேட்டு, அதை சரி செய்து கொடுத்தேன்.
வீட்டில் மாறனின் மனைவி கூட என்ன இந்த
ராத்திரி நேரத்துல வேலை செஞ்சு கிட்டு இருக்கீங்க முதல் முறையா என்று கேட்டது
எனக்கு காதில் விழுந்தது.
மறுநாள் மாறன் அதனை மேனேஜர் மேடம்
முன்பு சப்மிட் செய்த போது அவர்கள் மாறனை பாராட்டினார்கள். நானும் மெல்ல அவர்
காதில் மட்டும் கேட்கும்படி, என்ன மாறா, இப்ப சந்தோசமா என்று கேட்க, மாறன் கண்களாலேயே எனக்கு நன்றி சொன்னார். அன்று
மேனேஜர் மேடம் மாறனை பாராட்டி அவருக்கு சம்பளத்தில் ஒரு ஊக்க தொகை கொடுக்க உத்தரவு
இட்டார்கள். மாறன் மிகவும் சந்தோசம் அடைந்தான்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து
எல்லோரும் கிளம்பும்போது, அவன் என் அறைக்கு வந்து கொஞ்ச நேரம் பேசணும் என்று சொன்னான். தனியே
நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருந்ததால், சிரித்து கொண்டே என்ன மாறா, இன்னிக்கு ரொம்ப
சந்தோசம் போல, மேனேஜர் மேடம் உன்னை பாராட்டி ஊதிய உயர்வு கூட கொடுத்து இருக்காங்க, ஜமாய் என்றேன். அவன்
அப்போது நானே எதிர் பாராத விதமாக டக்குனு என் காலில் விழுந்து விட்டான்.
மேடம் எல்லாம் உங்க தயவு தான், நான் உங்களை
வந்த புதுசுல என்ன வெல்லாம் சொல்லி கேலி செய்து இருக்கேன். ஆனா நீங்க அதை
எல்லாம் மனசுல வைச்சுக்காம, எனக்கு ரொம்ப உதவி பண்ணி இருக்கீங்க. இப்ப எனக்கு வீட்டுல ரொம்ப
கஷ்டம், மனைவிக்கு
உடம்பு அடிக்கடி சரியில்லாம மருத்துவ செலவு, குழந்தைங்க படிப்பு செலவு எல்லாம் ரொம்ப அதிகம், இந்த நேரத்துல
இந்த உயர்வு ரொம்ப உதவியா இருக்கும்.
இது கிடைக்க நீங்க தான் காரணம்.
"இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நான நன்னயம் செய்து விடல்" என்கிற குறளுக்கு எடுத்து
காட்டாய் நீங்க இருக்கீங்க. வந்த புதுசுல உங்களை தினமும் என் காலுல விழுந்து
ஆசீர்வாதம் வாங்கணும்னு சொன்னேன். மன்னிச்சுக்கோங்க மேடம், இனிமே நான்
காலமெல்லாம் உங்க காலுல விழுந்து கிடக்குற ஒரு நன்றியுள்ள நாயா இருப்பேன்
அப்படினு தழுதழுத்த குரலில் சொல்லிகிட்டே, என் காலுல விழுந்து மன்னிப்பு கேட்டு
கிட்டே, காலை பிடிச்சு கிட்டு இருக்கான்.
என்ன மாறா, இவ்வளவு
உணர்ச்சி வச பட்டுட்ட, எழுந்திரு என்று சொல்லி அவனை நானே அவன் தோளை தொட்டு எழுப்பி உட்கார
வைத்தேன் அங்கே இருந்த நாற்காலியில். இல்ல மேடம் உங்க முன்னால உட்கார எனக்கு தகுதி
இல்லை, நிக்குறேன்
என்று எழுந்து சொல்லி நிற்கிறான் கையை கூப்பியவாறே. சீ என்ன இது சின்ன பிள்ளை
யாட்டம், உன்
வயசு என்ன, என் வயசு என்ன. நீ எதுக்கு என் காலுல எல்லாம் விழுற. இனிமே இப்படி
எல்லாம் பண்ணாதே. நீ ஒழுங்கா வேலை பார்த்து நல்ல படியா நடந்து கிட்டா
எல்லோருக்கும் சந்தோசம்தான் என்று சொல்லி அவனை ஆசுவாச படுத்தி அனுப்பி வைத்தேன்.
அன்று முதல் மாறன் என்னை மரியாதையுடன்
மேடம் என்று அழைக்க ஆரம்பித்தார். நான் வரும்போது எழுந்து நின்று வணக்கம்
சொல்வார்.
இப்படித்தான் அங்கே இருந்த மற்ற
அனைவரையும் மெல்ல மெல்ல இந்த ஆறு மாதத்தில் என் வழிக்கு கொண்டு வந்து விட்டேன். இப்போதெல்லாம்
என் டீம் இல் உள்ள அனைவரும் என்னை மேடம் என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்து
விட்டார்கள்.
யாரும் என் பெயர் சொல்லியோ, டீ போட்டோ
கூப்பிடுவதில்லை. நான் வந்தாலே எழுந்து நின்று மேடம் என்று அழைத்து எனக்கு முதல்
வணக்கம் வைப்பார்கள். நான் கை அசைத்து உட்கார சொல்லும் வரை நின்று கொண்டு
இருப்பார்கள்.
நான் இப்போது அவர்களை பெயர் சொல்லி
கூப்பிட ஆரம்பித்து விட்டேன். சிரித்து கொண்டே அவர்களுக்கு ஏதும் தப்பாக தோணாதவாறு, என்ன மாறா, என்ன
இன்னிக்கும் ஐந்து மணிக்கு தான் அனுப்புவியா உன் ப்ரெசென்ட்டேஷன் ஐ என்று கேட்டால், இல்லை மேடம்
முதல் நாளே அனுப்பி விடுகிறேன். தயவு செய்து நீங்க கொஞ்சம் பார்த்து சரி செய்து
கொடுங்க என்று கெஞ்சுவார். நானும் சரி சரி, கவலை படாத, நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி
அனுப்புவேன். அதில் இருக்கும் குறைகளை காண்பித்து அவனையே வைத்து சரி செய்ய வைப்பேன்.
அதற்கென சில சமயம், அவனை என்
அறைக்கே வர வழைத்து, என் கம்ப்யூட்டரில் அவனின் ப்ரெசென்ட்டேஷன் ஐ சரி செய்வேன், அவனை
பக்கத்தில் நிற்க வைத்து கொண்டே. அப்போது நான் எனது சுழல் நாற்காலியில் கால் மேல
கால் போட்டு அமர்ந்து இருக்க, அவனோ என் அருகில் பின்புறமாக நின்று கொண்டே எனது மானிட்டரை, அதில் நான் சரி
செய்வதை பார்த்து கொண்டு இருப்பான். என்ன மாறா இப்படி பண்ணி வைச்சு இருக்க என்று
சலித்து கொள்வேன். அவனோ, சாரிங்க மேடம் எனக்கு அவ்வளவுதான் வரும், என்ன
செய்யட்டும், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க மேடம் என்று கெஞ்சுவான்.
சரி, தலை வலிக்குது, ஒரு காப்பி சொல்லு என்றால், அவனே போய்
எனக்கென ஒரு காப்பி எடுத்து கொண்டு வருவான். நான் குடித்து விட்டு வைக்கும் என்
எச்சில் காப்பி கோப்பையை அவனே கழுவி வைப்பான்.
சொல்ல போனால் நான் அந்த கம்பெனியில் இருக்கும்
பல IT என்ஜினீயர் களில்
ஒருத்தி என்று வேலை செய்தாலும், இப்போதெல்லாம் உண்மையில் என்னவோ நான்தான் பிரபாகர் சாருக்கு அடுத்த
படியாக அந்த டீம்-இன் செகண்ட் டீம் லீடர் என்ற வகையில் எல்லோரும் எனக்கு மரியாதை
கொடுக்கிறார்கள்.
நானும் என் கணவர் சொல்லி கொடுத்த படியே, என்னதான்
அவர்களை என் அறைக்குள் மரியாதை இன்றி பெயர்
சொல்லி கூப்பிட்டாலும், வெளியில் மற்றவர்கள் முன்பு, என்ன Mr. மாறன் என்றோ அல்லது மாறன்
சார் என்றே அழைப்பேன். மற்றவர்களுக்கும் இதே நிலை தான். எல்லோருக்கும் இது நன்கு
தெரிந்து இருப்பதால், அவர்கள் என்னிடம் எப்போதும் மரியாதையுடன் நடந்து கொள்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக