பொட்டை
க்ராஸி (கீர்த்தி) யின் முதல் அனுபவம், P03:
உரையாடல்
தொடர்கிறது
Curtesy: Pottai Crossy (கீர்த்தி), Facebook
கீர்த்தி: மறுநாள் நான்
ராஜி சொன்ன மாறி நேரத்துக்கு ஸ்கூலுக்கு போனேன். ராத்திரிலாம் சரியா தூக்கம்
இல்லாம.
ஆனா அங்க சுபா எனக்கு முன்னாடியே வந்து
காத்துகிட்டு இருந்தா.
டேய் உன்ன கரெக்ட் டைம்க்கு வர சொன்னா 5 நிமிஷம் லேட்டா
வரியானு கை ரெண்டையும் இடுப்புல வச்சுட்டு கண்ணுல கோபத்தோட ஒரு லுக்கு
விட்டா.
ஐயோ இவ வேற நேரம் பாத்து பழி வாங்குறாலேனு
விழி பிதுங்கி நின்னேன்.
சுதா: ராஜி
இருக்கும் தைரியத்தில் இத்தனை நாள் பிள்ளை பூச்சியாய் இருந்த சுபாவும் இப்போது
அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டாள், என்ன சரிதானே?
கீர்த்தி: என்ன முழிச்சு
கிட்டு நிக்குற.
போ போய் வேலையை பாருன்னு ராஜியை
மாதிரியே சுபா சவுண்ட் விட.
நான் ஒரு நிமிஷம் ஆடியே போய்ட்டேன்.
அடுத்த சத்தம் வரதுக்குள்ள ஓடி போய்
ஸ்கூல் கேம்பஸ சுத்தம் பண்ண ஆரம்பிச்சேன்.
இடையில சுபா வேற அங்க குப்பை இருக்கு
பாரு. இங்க ஒழுங்கா பெருக்கு. கண் தெரியலியா உனக்கு. ராஜி கிட்ட
சொல்லனுமானு சொல்லி மிரட்டியே வேலை வாங்கிட்டு இருந்தா.
சுதா: சுபா
உன்னை அப்படி வேலை வாங்குவதை அப்போது வந்த ராஜி பார்த்து சிரித்து இருப்பாளே?
கீர்த்தி: இந்த சமயத்துல
ஒவ்வொருத்தரா பள்ளிக்கு வர ஆரம்பிச்சாங்க.
இது நாள் வரை ஸ்கூல்ல புலி மாறி
சுத்திட்டு இருந்த நான் இன்னைக்கு எலி மாறி பதுங்கி வேலை செய்யுறத அதிசயமா
பாத்துட்டு போனாங்க. அதுலயும் சில பொண்ணுங்க ( என்னோட வகுப்பு & என்னோட
ஜுனியர்ஸ்) நக்கலா பாத்து சிரிச்சுட்டு வேற போனாங்க
சுதா: ஆண்
சிங்கம் இப்ப அசிங்கப்பட்டு நிக்குது, என்ன பண்றது.
கீர்த்தி: அதே நேரம்
ராஜியும் வர ஆரம்பிச்சா..
என்ன சுபா வேலை எல்லாம் சரியா நடக்குதானு
கேட்டுட்டே என்னை பாத்து,
Mmmm சூப்பர் இன்னும் கொஞ்ச நேரம் தான் சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு
வாடா னு ஒரு வேலைக்காரனுக்கு ஆர்டர் போடுற மாறி சொல்லிட்டு அங்க இருந்து
கிளம்பிட்டா.
சுதா: என்ன பண்றது. ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது, எதிரில் நின்று சுபா
வேறு அதட்டி வேலை வாங்கி கொண்டு இருக்கிறாள்.
கீர்த்தி: ஒரு வழியா
பெருக்கி முடிச்சு இடுப்பு வலிக்க கிளாஸ் ரூம்க்கு போனா..
அதுக்குள்ள பிரேயர்க்கு பெல்
அடிக்குது.
பிரேயர்லாம் நல்லா தான் போய்கிட்டு
இருந்துச்சு.
பிரேயர் முடியுர டைம்ல தலைமை ஆசிரியை
பேச ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நாள் ரொம்பவே வித்தியாசமானது. பல நாளா யாருக்கும் வராத
அக்கறையும், தைரியமும் இன்னைக்கு ஒருத்தர்க்கு வந்துருக்குனு பேச ஆரம்பிச்சாங்க.
எல்லாரும் யாரா இருக்கும்னு
யோசிச்சுட்டு இருந்தோம்
சுதா: ஸ்கூல்
காம்பசை சுத்தம் செய்ததை பற்றி சொல்ல போகிறாரோ, உனக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு ராஜிக்கும், சுபாவுக்கும் கிடைக்க போகிறது என்று தோணுகிறது.
கீர்த்தி: அப்போ தான்
அவங்க ராஜியை முன்னாடி வா னு கூப்பிட்டாங்க.
கிளாஸ் ரூமை மட்டுமில்ல ஸ்கூலையும்
நீட்டா வச்சுக்குறது நல்ல ஸ்டூடண்ட்கு அழகு. அப்படி ஒரு நல்ல ஸ்டூடண்ட் தான் ராஜி.
இன்னைக்கு காலையில இங்க நடந்ததை
எல்லாரும் பாத்துருப்பீங்க. நானும் பார்த்தேன். என்னனு
விசாரிச்சேன். அப்போதான் ராஜியோட தலைமை பண்பை புரிஞ்சுகிட்டேன்.
இப்படி பட்ட ஒருத்தர்தான் நம்ம
பள்ளிக்கு வேணும். நீங்க எல்லாரும் ராஜியை முன் மாதிரியா
எடுத்துகிட்டு இதுபோல் நல்ல விஷயங்களை பண்ணும்னு சொல்லி பாராட்டுறாங்க.
காது கிழியுற அளவுக்கு எல்லாரும் கை
தட்டறாங்க.
இது போதாதுனு அவங்க...
ராஜியோட அக்கறைக்கும் தைரியத்து க்கும்
பாராட்டி இந்த பரிசை குடுக்குறேன்னு ஒரு பேனாவை குடுத்தாங்க.
கூடவே ராஜியை கிளாஸ்க்கு மட்டும் இல்லை, நம்ம
ஸ்கூலுக்கும் லீடரா வைக்குறேன். அதுவும் நிரந்தர லீடரானு சொல்லி எனக்கு ட்விஸ்ட்
குடுக்குறாங்க...
சுதா: இது
என்ன புதுசா இருக்கே, நிரந்தர லீடர்
அப்படின்னா என்ன அர்த்தம்னு புரியலையே.
கீர்த்தி: அதாவது இதுவரை
முதல் மார்க் வாங்குனவங்க தான் லீடரா இருந்தாங்க. இனி ராஜி முதல்
மார்க் வாங்கலனாலும் லீடர் தான்.
சுதா: அப்ப
நீ இனிமே என்ன பண்ணாலும் ஒரு பருப்பும் வேகாது. இந்த வருடம் கடைசி வரை நீ அவ கிட்ட
அடங்கி போய்தான் ஆகணும். பேசாம பகைத்து கொள்ளாமல், சொன்ன வேலைய செஞ்சுகிட்டு அடங்கி போறதுதான் நல்லது.
கீர்த்தி: இதுக்கு
அப்புறம் தலைமையாசிரியர் ராஜியை கூப்பிட்டு சில வார்த்தைகள் பேச சொன்னார்.
ராஜி யும் எல்லார் முன்னாடி கூச்சமே
இல்லாம கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சா.
எல்லாருக்கும் வணக்கம். நான் ஏதோ பெரிய
சாதனை செஞ்சுட்டேன்னு எல்லாரும் என்னை
பாராட்டுறீங்க. அப்படி நான் எதுவுமே பண்ணல. உண்மையிலே இந்த பாராட்டு எல்லாம்
கீரீத்திக்கு தான் போகனும். ஏன்னா அவன்தான் அவ்ளோ சுத்தமா ஸ்கூல் கேம்பஸை சுத்தம்
பண்ணினுக்கான். நீங்க எல்லாரும் என்னை முன் மாதிரியா எடுக்குறத விட அவன முன் மாதிரியா
எடுத்துகிட்டாதான் நம்ம ஸ்கூல் எல்லாத்துலயும் நம்பர் ஒன்னா இருக்கும்.
அவ பேசுனத எல்லாரும் ரசிச்சு
கேட்டாலும் ஏனோ எனக்கு அவ பேச்சு காதில் விழாமல் இருந்துது. ஸ்கூலே எனக்கு
எதிரா மாறுன மாறி ஒரு உணர்வு.
பிரேயர் முடிஞ்சு எல்லாரும்
வகுப்புக்கு போனப்போ ராஜி என்கிட்ட ம்ம் கலக்கிட்டடா. ஸ்கூலே பாராட்டுற அளவுக்கு
சுத்தம் பண்ணிட்டியே Keep it up னு சொன்னா.
அப்படியே கிளாஸ்ல இனி வாரம் ஒருத்தர்
இப்படி நம்ம ஸ்கூல் கேம்பஸ் சுத்தம் பண்ணனும்னு ஆர்டர் போட்டா.
சுதா: புகழ்ந்து
பேசுவது போல பேசி உன்னை கவுத்துட்டாளா. அப்படின்னு சொல்லி உன்னை
மாதிரியே எல்லா ஆம்பிளை பசங்களும் பொண்ணுங்க மாதிரி வேலை பாக்கணும்னு சொல்லாம
சொல்லிட்டா.
கீர்த்தி: அதுக்குள்ள ஸ்கூல் இன்டர்வெல் வர அதுவரை என்னை
பாத்து பயந்த ஜூனியர் பொண்ணுங்க எல்லாம் என் முன்னாடியே தைரியமா ராஜி கிட்ட வந்து
பேசுதுங்க.
அக்கா, கலக்கிட்டீங்க
போங்க. எப்படிதான் இதை பண்ணுணீங்களோ. ரொம்ப தைரியம் தான் உங்களுக்கு.
எங்களுக்கும் சொல்லி குடுங்கனு ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுதுங்க.
அதுக்கு அப்புறம்
ஸ்கூல்ல ராஜி ஹீரோ வாகவும், நான் ஜீரோ ஆகவும் எல்லார்
முன்னாடியும் தெரிஞ்சேன்.
என் நண்பர்களே
நிறைய பேர் ராஜிக்கு பயந்து அவள் சொல்வதை தட்டாமல் செய்ய ஆரம்பித்தனர்
சுதா: ஸ்கூலில்
இனிமேல் பசங்க பாடு திண்டாட்டம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக