திங்கள், 15 ஜூலை, 2024

மாலதியின் மருமகன், EP24


அரைகுறையாக புடவை கட்டியிருந்தான். ஆஷா அவனை பார்த்து சிரித்தாள். அவனும் வெட்கத்துடன் தலை குனிந்தான்.

ஆஷா: இப்படியா புடவை கட்டறது? நான் அழகா கட்டிவிடறேன்.

அவன் கட்டியிருந்த புடவையை அவள் அவிழ்த்ததும் தன்னை அறியாமலேயே கூச்சப்பட்டு மார்பை கைகளால் மறைத்து கொண்டான்.

ஆஷா: இதுதான் புடவை கட்டிய பெண்களுக்கே உரிய நாணம். மார்பகங்கள் இல்லாமல் ஜாக்கெட் போடும் போதே உனக்கு இவ்வளவு வெட்கம் வருது.. பொம்பளங்க மார்பை ஆம்பளங்க உத்து பார்த்தா எவ்வளவு சங்கடமா இருக்கும்? இதெல்லாம் ஆம்பளங்களுக்கு புரியனும்.

ரவிக்கையை அவிழ்த்து விட்டு அவனுக்கு செயற்கையாக மார்பகங்கள் தோற்றம் தருவதற்காக கைக்குட்டை மற்றும் சிறு துணிகளால் நிரப்பபட்ட பிராவை அவன் மார்பில் அணிவித்தாள். அடுத்து, ரவிக்கையை கட்டி விட்டாள். அவன் இடுப்பில் டைட்டாக பாவாடையை கட்டி விட்டாள். அடுத்ததாக அவனுக்கு புடவை கட்டி விட்டாள்.

அவனை விட வயது குறைந்த பெண், அவன் பேண்ட் டீ-சர்டை வலுக்கட்டாயமாக அவிழ்த்து, அவள் அணிந்து கொண்டாள். இப்போது அவள் கையாலேயே இவன் புடவை கட்டிக்கொள்கிறான். இதை நினைக்கும் போது விவேக்கிற்கு கிக்காக இருந்தது. இருவரும் கண்ணாடி முன் நின்றனர்.

புடவையில் அவனை பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நல்ல அம்சமான பெண்ணை போல காட்சியளித்தான். அவனுக்கு கொஞ்சம் நாணமாக இருந்தது.

விவேக் மற்றும் ஆஷா: (ஆஷாவின் புடவையில் விவேக்)

ஆஷா: இந்த புடவை என்னைவிட உனக்கு தான் Perfect ஆக இருக்கு.

விவேக்: நீங்க கூட என்னோட ஜீன்ஸ் டி-சர்ட் ல ரொம்ப அழகா இருக்கேங்க.

ஆஷா: நீ தயக்கம் இல்லாமல் உன் Friend கூட மேடை ஏறு. யாரும் உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க.

---------------------------------

கல்யாண மாப்பிள்ளையே புடவை கட்டியிருக்கும் போது நாமும் கட்டி கொண்டால் தான் என்ன? நமக்கு துணைக்கு ஒருத்தன் இருக்கும் போது நாமும் தைரியமாக புடவை கட்டி வெளியே வரலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டான் விவேக்.

இருவரும் ஜோடியாக வெளியே வந்தனர். இதுதான் நடக்கும் என்று நன்று அறிந்திருந்தாள் ஷ்ரேயா. ஆனால் ஆஷா அவனை மிரட்டி பயப்படுத்தி புடவை அணிய வைத்திருப்பாள் என்று நினைத்த ஷ்ரேயாவிற்கு, விவேக்கின் முகத்தை பார்க்க ஆச்சரியமாகதான் இருந்தது. அவன் முகத்தில் பயம் இல்லாமல் சிரிப்பும், வெட்கமும்தான் தெரிந்தது. ஆஷாவின் முகத்திலும் என்றும் இல்லாத பிரகாசம் தெரிந்தது. ஆக மொத்தம் அவனை மிரட்டி பயப்படுத்தாமல் எதையோ காட்டியே அடக்கி விட்டாள் என்று புரிந்து கொண்டாள் ஷ்ரேயா.

மணப்பெண் ஸ்ரேயா பாரம்பரியமும் மாடர்ன் அம்சம் இரண்டும் கலந்த உடையில்

ஷ்ரேயா: உனக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு விவேக்.

ஒரு பெண்ணிடம் பாராட்டை கேட்க நாணத்தில் முகம் சிவந்தது. அவனால் நன்றி என்று கூட சொல்ல முடியவில்லை. மாலதியும் அவனை பார்த்து பாராட்டினார்.

மாலதி: உன் சிக்ஸ் பேக் உடம்புக்கு சேலை பொருத்தமா இருக்கு. புடவையிலும் கம்பீரமா இருக்க.

யாரும் கிண்டல் செய்து சிரிக்காமல் பாராட்டியது அவனுக்கு ஊக்கத்தை கொடுத்தது. மாலதி, காயத்திரி, ஷ்ரேயா, ஆஷா நான்கு பேரும் புடவை கட்டாமல் பாண்ட், சட்டை அல்லது டி-சர்ட் அணித்திருந்தனர். வினோத் மற்றும் விவேக் இருவர் மட்டும்தான் புடவை கட்டியிருந்தனர்.

மணமகன் வினோத்தும், அவன் அம்மா காயத்திரியும்

சில பேர் மட்டுமே திருமணத்திற்கு வந்திருந்தனர். அதில் ஒருவருக்கு கூட விவேகின் முகம் தெரியாது. அதனால் விவேக் சற்று நிம்மதி அடைந்தான். வினோத்திற்கு எந்த பயமோ, கவலையோ மனதில் இல்லை. புடவையில் வெக்கப்பட்டுக் கொண்டு நின்றான். மணபெண் ஸ்ரேயாவின் தாய் மாலதி ஜீன்ஸ் மற்றும் டெனிம் சட்டை அணிந்திருந்தாள். வினோதின் அம்மா காயத்திரிக்கும் அதையே வாங்கியிருந்தார். இரு தாய்மார்களும் ஒரே போல ஜீன்ஸ் மற்றும் டெனிம் ஷர்ட்டில் ஸ்டைலாக இருந்தனர்.

காயத்திரியும், மாலதியும்

அனைவரது ஆசிகளுடனும் ஸ்ரேயா, வினோத்தின் கழுத்தில் தாலி கட்டி அவனை அவள் மனைவியாக ஏற்று கொள்கிறாள். காயத்திரியின் கண்ணில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வினோத், ஷ்ரேயாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான். பின்பு மணமக்கள் ஒரு சேர, காயத்திரி மற்றும் மாலதி காலில் விழுந்தனர்.

விவேக் ஆஷாவை பார்த்தபடியே நின்றான். இவள் கையால் என் கழுத்திலும் தாலி ஏற வேண்டும் என்று நினைத்தான். ஆஷாவும் அவனை பார்த்தாள். அவளும் விவேக்கின் கழுத்தில் தாலி கட்டி அவனை மனைவியாக்கி கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.

மாலதி: பையனை விட்டு பிரிந்து போயிடுவோம்னு நினைக்காதே காயத்திரி. நான் முன்பே சொன்னது போல இனிமேல் நீயும் எங்க கூடதான் தங்க போற. நீ அடம்பிடிக்காம இதுக்கு ஒத்துக்கிட்டே ஆகணும்.

காயத்திரிக்கு ஆனந்தம், கவலை, குழப்பம் என்று எல்லாம் சேர்ந்த மனநிலை இருந்தது.

காயத்திரி: நானும் உன் கூட தங்கறேன் மாலதி.

மாலதிக்கு சந்தோஷமாக இருந்தது. காயத்திரி என்ற ஒரு புது தோழி கிடைத்து விட்டாள் அவளுக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக