செவ்வாய், 19 ஏப்ரல், 2022

அழகின் அதிகாரங்கள் 3

 


அழகின் அதிகாரங்கள் 3

என் அம்மா, நாங்க படுக்கை அறைக்குள் இருக்கும்போது, உள்ளே வர மாட்டார்கள், சின்ன வயசு பசங்க தனியா இருக்கட்டும் என்று. ஆனா என் மச்சினிச்சி, எந்த தயக்கமும் இல்லாம உள்ளே வந்து விடுவாள். நாங்களும் சாயங்காலம், அந்த நேரங்களில் கதவ தாழ்பாள் போட்டா நல்லா இருக்காது என்று போடுவதில்லை. இன்னிக்கு எங்களை பார்த்து அவ ரொம்ப கேலி பண்ணினா. பாருடா, மாமா, தன் பொண்டாட்டிய, எப்படி தாங்குறாருன்னு. எனக்கு ஒரு சந்தேகம் வருது, இங்கே பொண்டாட்டி யாரு? புருஷன் யாருன்னு. அக்கா, பேசாம நீ வீட்டுக்கு வந்த உடனே, உன் புடைவையை, மாமாவுக்கு கொடுத்து கட்டிக்க சொல்லு, அப்புறம் அவ ஒரு நல்ல பொண்டாட்டியா, தன் புருஷனுக்கு இப்படி சேவை செய்யட்டும் அதுதான் சரியாய் இருக்கும் என்று நினைக்குறேன், இதெல்லாம் பார்க்கும் போது, என்று சொல்லி என்னை கேலி பண்ணினா.

நான் உடனே கொஞ்சம் கோபமாய் முறைத்து பார்க்க, அவள் உடனே, மாமா, ரொம்ப கோப பட வேண்டாம், எனக்கு உங்க வண்டவாலம் எல்லாம் இன்னிக்கு தெரிஞ்சுடுச்சு என்றாள். நாம் உடனே, அப்படி என்ன தெரியும்னு கேட்டேன், உடனே அவ தன்னோட மொபைலில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து காமிக்குறா. அதை பார்த்த உடனே நான் திகைத்துப்போய் விட்டேன். அதில் நான் புடவை கட்டி கொண்டு, அச்சு அசலாய் பொம்பிளை போல இருக்கிறேன். அதை பார்த்ததும் என் மனைவி, என்னடி, ஏதும் புது ஆப்ல இப்படி பண்ணி வைச்சு இருக்கியா என் புருஷன என்றாள். அதுக்கு அவள், இது ஒன்னும் ஆப்ல பண்ணது இல்ல, நிஜ போட்டோ அக்கா என்றாள். உடனே என் பொண்டாட்டி என்னடி சொல்ற, இவன் எப்ப இந்த மாதிரி புடவை கட்டிண்டு பொம்பிளையா இருந்து இருக்கான் என்றாள். அதுக்கு என் மச்சினிச்சி, என்னை பார்த்து கேட்கிறாள், என்ன மாமி ஞாபகம் இருக்கா, இது எப்ப எடுத்ததுன்னு என்று சொல்லி சிரிக்கிறாள். அப்புறம் அவளே என் பொண்டாட்டி கிட்ட சொல்றா.  உன் புருஷன் ஒரு தடவை, தன் தங்கைக்காக, புடவை கட்டி கிட்டு, அவ பள்ளிக்கூடத்துக்கு போய் இருக்காரு, இது அப்ப எடுத்தது என்றாள்.

ஆமாம், ஒரு தடவை, என் தங்கை மார்க் ரொம்ப கம்மியா வாங்கி பாடத்துல fail ஆகி விட்டா. அவ பள்ளி கூடத்துல, அம்மாவை கூட்டிட்டு வா என்று சொல்லி விட்டார்கள். அவளுக்கு அம்மா கிட்ட சொல்ல பயம், ரொம்ப திட்டுவாங்க என்று. நாந்தான் அன்று, அம்மாவோட புடவைய கட்டி கிட்டு போனேன். எனக்கு முகத்தில் மீசை வைச்சுக்க பிடிக்காது, வடக்கத்திய ஹீரோக்கள் போன்று நான் நல்ல நிறம், அதனால புடவை கட்டி கிட்டா அப்படியே ஒரு பொம்பிளை போல இருப்பேன். என் தங்கை, அன்னிக்கு புடவை கட்டி வந்ததை, தன் மொபைல் போன்ல புகைப்படம் எடுத்து இருந்திருக்கிறாள். அதை அவள் என் மச்சினிச்சி இடம் ஷேர் பண்ணி இருக்கா.

அதை பார்த்ததும் எனக்கு என் தங்கை மேல ரொம்ப கோபம் வந்தது. இப்படி மாட்டி விட்டுட்டாளே என்று. எனக்கே இது வரை தெரியாது, இப்படி ஒரு போட்டோ என் தங்கை என்னை எடுத்து இருக்கா என்று. என் மச்சினிச்சி எப்படி இதை அவகிட்ட இருந்து கண்டு பிடிச்சு இருக்கா என்று தெரியாமல் குழம்பி போய் நிக்கிறேன். அப்ப என் மச்சினிச்சி சொல்றா, மாமி ரொம்ப யோசிக்காதீங்க, இது எனக்கு எப்படி கிடைத்தது என்று, நான் அதை அப்புறம் சொல்றேன், அது ஒரு ரகசியம் எனக்கும், லதாவுக்கும் (என் தங்கை). எங்க திட்டம் நிறைவேறிய பின்னால அதை உங்க எல்லோருக்கும் சொல்வேன் என்றாள்.

என் மச்சினிச்சி அந்த போட்டோவை தன் மொபைலில் காட்டியவுடன், நான் அதை பார்க்கும்போதே, என் மனைவி அதை என் கையில் இருந்து வாங்கி பார்த்து, உடனே தன் மொபைலுக்கு பார்வேர்ட் செய்து கொண்டாள். நான் உடனே ஏங்க, அதை டெலீட் செய்து விடுங்க, யாருக்கும் தெரிஞ்சா, ரொம்ப கேவலமா போய்டும் என்றேன். அதற்கு அவள் சும்மா பயப்படாதீங்க. நான் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை, எல்லாம் எனக்கு தெரியும் என்றாள் சிரித்தவாறே.

அப்புறம் என் மச்சினிச்சி, என் மனைவியை தனியா கூப்பிட்டு போய் ஏதோ ரகசியமா பேசுறா, என்னை குறும்பா பார்த்தவாறே. ரெண்டு பெரும் கொஞ்ச நேரம் தனியா குசு குசுன்னு சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க. அப்புறம் என் மச்சினிச்சி என்கிட்டே வந்து சொல்றா, கொஞ்சம் கண்டிப்பான குரல்ல, மாமி, இனிமே நீ, நானும். உன் பொண்டாட்டியும், என்ன பண்ண சொல்றோமோ, அதெல்லாம் ஒழுங்கா பண்ணனும், ஏதும் எதுத்து கேள்வி எல்லாம் கேட்காம, இல்லேன்னா, இந்த போட்டோ உன் கம்பெனி முழுக்க பரவி விடும் பார்த்துக்கோ என்றாள்.

அதை கேட்டதும் என் முதுகு தண்டு சிலிர்த்தது பயத்தில். ஏற்கனவே நான் ரொம்ப பயந்த சுபாவம், பொண்டாட்டிக்கு அடங்கி வாழ்ந்து கொண்டு இருக்கேன், இப்ப என் குடுமி அவங்க ரெண்டு பேர் கைலயும் மாட்டி கிட்டு இருக்கு, அதுலயும் என் மச்சினிச்சி இருக்காளே, ரொம்ப துடுக்கு, குறும்புக்காரி, என்னை என்ன பண்ண போறாளோ தெரியல, தன் அக்காவோட சேர்ந்து கிட்டு. அதனால் நான், என் பயத்தை கொஞ்சம் மறைச்சு கிட்டு, சிரிக்கிற மாதிரி காமிச்சு கிட்டு சொல்றேன், நான் என்னிக்கு உங்கள எல்லாம் எதுத்து பேசி இருக்கேன், இனிமேயும் அப்படியே இருப்பேன் என்றேன். அதை கேட்ட அவங்க ரெண்டு பேரும், சிரிக்கிறாங்க, அப்புறம் என் மனைவி சொல்றா, இது வரை இருந்தது பத்தாது, இனிமே தான் எங்க ஆட்டமே ஆரம்பிக்க போகுது, தயாரா இருடி என்றாள். அதற்குள் என் மச்சினிச்சி, இப்ப அதை விடுங்க, எப்ப எங்க அக்கா புடவைய கட்டிக்க போறீங்க என்றாள். என் மனைவி, போடி ரொம்பத்தான் என் புருஷன கேலி பண்ற, அடி வாங்க போறே எங்கிட்ட, என் புருஷன, முதல்ல நான் கொஞ்சம் கவனித்து கொள்கிறேன்,  அப்புறம் நீ பாத்துக்கலாம் என்று செல்லமாக கைய ஓங்கினாள்.

அதற்கு என் மச்சினிச்சி, போங்கடா, நீங்களும் உங்க விளையாட்டும், நான் போறேன்பா என் வீட்டுக்கு, இல்லைனா, அம்மா ஒரு பிடி பிடிச்சுடுவா என்று சொல்லி கொண்டே கிளம்பி விட்டாள். போகும்போது அக்காவிடம் சொல்கிறாள், அக்கா ஞாபகம் இருக்குல்ல நாம பேசினது என்று சொல்லி கண்ணடிக்கிறாள். அதற்கு என் மனைவி, எல்லாம் எனக்கு தெரியும், நான் பார்த்துகிறேன். இப்ப வீட்டுல அம்மா தேடுவாங்க, நீ கிளம்பு, நாளைக்கு ஞாயிற்று கிழமை, விடுமுறை, நாளைக்கு வா நீ, அப்ப பாத்துக்கலாம் என்றாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக