வெள்ளி, 9 ஜூன், 2023

ஆவதும் பெண்ணாலே P5


அறை உள்ளே சென்று கணவனுக்கு போன் அடித்தாள்.

அகிலா: டேய்! உன் அப்பா வராருனு முதல்லயே சொல்லவேண்டியதுதானே?

குமார்: எங்க சொல்லறது? நான் ரிங் கொடுத்தேனே சொல்லறதுக்கு. அவரு திடீர்னு வந்து நிப்பாருனு நான் நெனச்சு கூட பார்க்கல.

அகிலா: அது சரி... நீயாவது அவர் உள்ள வரதுக்குள்ள பேண்ட் சட்டை போட்டுகிட்டயா?

குமார்: இல்ல...

அகிலா: கிழிஞ்சது போ! உன்னை யாரு புடவை கட்டியிருக்கும் போது கதவை திறக்க சொன்னது? நீ புடவை கட்டியிருக்கும் போது யாருனு பாத்துட்டு தான கதவை திறக்கனும்?

குமார்: நான் கதவை லாக் பண்ணல. அவரே உள்ள வந்துட்டாரு...

அகிலா: அப்படியே முழுசா தாலி, மெட்டினு எல்லாத்தையும் பாத்துட்டாரா?

குமார்: ஆமாம்...

அகிலா: நாசமா போச்சு! அவர்கிட்ட என்ன சொல்லி தொலச்ச?

குமார்: நான் எதுவும் சொல்லல. அவரும் எதுவும் கேட்கல. நீ வந்ததும் பேசிக்கலாம்னு சொல்லிடாரு.

என்னை அப்படியே என்ன செஞ்சுகிட்டிருந்தேனோ அதை அப்படியே தொடர்ச்சியா செய்ய சொல்லிட்டாரு.

அகிலா: அப்போ நீ இன்னும் புடவைலதான் இருக்கியா? ரூம்க்கு வா இப்போ.

குமாரும் கிட்சனை விட்டு பெட்ரூமுக்கு வந்தான். அவன் உள்ளே நுழைந்ததும் கதவை தாழிட்டு விட்டு அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.

அகிலா: நீ கதவ பூட்டாதது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.

அகிலா தன் கணவனின் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.

அகிலா: அப்படியே மச மசனு முழிச்சுட்டு நிக்காத. உங்க அப்பா முன்னாடி மட்டும் இனி புடவை கட்டாதே. இப்போ தாலி, வளையல், மெட்டி எல்லாத்தையும் கழட்டி கொடு.

அகிலா குடும்ப பாங்கான பெண்ணை போல புடவைக்கு மாறினாள். அவள் கணவன் குமார், புடவையை கழற்றி விட்டு, பேண்ட் சட்டை போட்டுக் கொண்டான்.

அகிலா கிச்சன் சென்று தன் கணவன் செய்து வைத்திருந்த காபியை டம்பளரில் ஊற்றி, அவன் சுட்டு வைத்திருந்த பக்கோடாவை ஒரு தட்டில் போட்டு மாமனாருக்கு பரிமாறினாள்.

அகிலா: இந்தாங்க மாமா. எடுத்துகோங்க.

அவள் குடும்ப பாங்காக இப்போது புடவை கட்டியிருப்பதையும் சில நிமடங்களுக்கு முன்பு ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து பைக் ஓட்டி வந்ததையும் நினைத்து பார்த்து மெலிதாக புன்னகைத்தார்.

காபியும் பக்கோடாவும் மாலை நேரத்துக்கு இதமாக இருந்தது. அவர் இதுவரை இவ்வளவு சுவையான காபி மற்றும் பக்கோடாவை சுவைத்ததில்லை.

மருமகள் அசெளகரியமாக நெளிவதை கண்டார்.

ராஜதுரை: ஏன் நின்னுகிட்டே இருக்க? உட்காரு மா ...

அகிலா: பரவாயில்லை மாமா.

ராஜதுரை: சும்மா சொல்ல கூடாது. உன் புருஷன் ரொம்ப நல்லா சமைக்கறான். இதையாவது அவன் உருப்படியா பண்ணறானே...

அகிலா வெட்கத்துடன் சிரித்துவிட்டு, டாப்பிக்கை மாற்ற வேண்டும் நினைத்தாள்.

அகிலா: ஊர்ல அத்தை, எல்லாரும் நல்லா இருக்காங்களா மாமா?

ராஜதுரை: எல்லோரும் நல்லாருக்காங்க.

இப்போ வந்துடறேன் மாமா என்று சொல்லிவிட்டு நழுவி விட்டாள். மாமனார் டிவி பார்க்கும் போது அகிலா கிட்சனுக்குள் நுழைந்தாள். குமாரும் பின்னால் வந்து எது எது எங்கே இருக்கிறது என்று கூறினான். அகிலா சமையலை ஆரம்பிக்க, குமாரும் அவ்வப்போது மின்னல் வேகத்தில் வந்து பெரும் பாங்கான சமையலை முடித்தான். உணவை பரிமாறியதும், ராஜதுரை அதை சுவைத்தார். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

ராஜதுரை: ரொம்ப நல்லாயிருக்கு. நீயா ம்மா சமைச்ச?

அகிலா: ஆமாம் மாமா.

ராஜதுரை: இதை எப்படிம்மா செய்யறது?

அகிலா வாய்க்கு வந்த பொருள்களை எல்லாம் போட்டதாக சொன்னாள். ராஜதுரைக்கு அவள் அதை முழுமையாக சமைக்கவில்லை என்று புரிந்தது.

ராஜதுரை: அவனும் உதவினானாம்மா?

அகிலா: ஆமாம் மாமா

ராஜதுரை: அவன் சமையல் வேலைய உருப்படியா செய்யறான்னா அவன் கிட்டயே அதை விட்டுட வேண்டியதுதானே?

அகிலாவிற்கு அவர் விளையாட்டாக சொல்கிறாரா இல்லை சீரியஸாக சொல்லகிறாரா என்றே புரியவில்லை. மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து குமார் சமையல் வேலையை ஆரம்பித்தான். அகிலா, மாமனார் வருகிறாரா என்று வேவு பார்த்து கொண்டிருந்தாள். அவர் வந்தால் குமாரை சமையலறையை விட்டு அனுப்பு விட்டு, இவள் சமைப்பது போல நடிப்பது தான் திட்டம். ஒரு வழியாக குமார் சமையலை முடித்தான்.

குமார்: பொங்கல் செஞ்சாச்சு. சட்னிக்கு தேவையானது மிக்சி ஜார்ல இருக்கும், மிக்சி போட்டுட்டு தாழிச்சு போட்டுட்டா போது. மதியம் சோறு மட்டும் வெச்சுட்டா போதும். மத்ததெல்லாம் ரெடி. நான் குளிச்சுட்டு ஆபிஸ் கிளம்பறேன்.

ராஜதுரை எழுந்து விட்டார். அகிலா அவருக்கு காபி பறிமாரினாள். குமார் சீக்கிரமே ஆபிஸ் கிளம்பி விட்டான்.

குமார்: நான் ஆபிஸ் போயிட்டு வரேன் அப்பா.

ராஜதுரை: நீ ஆபிஸ் கிளம்பலயாமா அவன்கூட?

அகிலா: இல்லை மாமா. லீவ் போட்டிருக்கேன்.

ராஜதுரை: எனக்கு நம்ம பழைய டிராக்டருக்கு ஒரு ஸ்பேர் வாங்கனும். இங்க பழைய மார்கெட்ல கிடைக்கும்னு சொன்னாங்க. என்னை போற வழில இறக்கி விட்டுட்டா நான் விசாரிச்சு பஸ் பிடிச்சு போய் வாங்கிட்டு வந்துடுவேன்.

அகிலா: வேண்டாம் மாமா. இந்த நேரத்துல கடை எதுவும் திறந்திருக்காது. நீங்க சாப்பிட்டதும் நானே டாக்ஸி பிடிச்சு தறேன்.

ராஜதுரை: சரிம்மா. நீ பாத்து போயிட்டு வா குமார். பைக்ல யா போற?

குமார்: இல்லப்பா. ஆட்டோல...

சைக்கிள் கூட அவன் மகனுக்கு மிதிக்க வராது என்று ராஜதுரைக்கு தெரியும். இப்போதும் அப்படிதான் இருக்கிறான் என்று புரிந்துகொண்டார்.

ராஜதுரை சாப்பிட உட்கார்ந்தார்.

ராஜதுரை: நீயும் உட்காரும்மா.

அகிலா தயக்கத்தோடு உட்கார்த்தாள்.

ராஜதுரை: உன் புருஷன் நல்லா சமைச்சிருக்கான்.

அகிலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தான் சமைத்தேன் என்று சொன்னாலும் அந்த பொய்யை நம்பும் அளவுக்கு ராஜதுரை முட்டாள் இல்லை.

ராஜதுரை: அவன் எதற்கும் லாயக்கு இல்லைனு நினைச்சேன். எதையும் ஒழுங்கா பண்ண மாட்டான். எப்படியோ சிபாரிசு மூலமா வேலைய வாங்கிட்டான். இவனோட அம்மா இவனுக்கு ஒரு படிக்காத ஒன்னும் தெரியாத பெண்ணா கட்டி வெக்க நினைச்சாங்க. நல்லவேளையா அவன் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டான்.

ராஜதுரை: நீ வேலைக்கு போறது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான். பெண்ணுங்கன்னா அடுப்படிலயே காலத்த கழிச்சுட கூடாது. சாதிக்க முயற்சி பண்ணனும். உன் மாமியாருக்கு ஆனா இதெல்லாம் பிடிக்காது. அவ ஒரு தற்குறி. நானும் அவகிட்ட இதையெல்லாம் சொல்ல போறது இல்ல. நீயும் இதை தெரியாம பாத்துகோ.

அகிலாவுக்கு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஊர் தலைவராக இருந்த ராஜதுரை, அடுத்த ஊர் தலைவராக ஒரு பெண் தான் வர வேண்டும் என்று முடிவெடுத்ததை அகிலா கேள்விபட்டிருக்கிறாள். ராஜதுரை உண்மையில் பெண்களுக்கு மதிப்பு கொடுப்பவர் என்று புரிந்துகொண்டாள்.

ராஜதுரை: நீ புத்திசாலி பெண்ணு. சமையல், பாத்திரம் தேய்கறது, வீட்டை கூட்டி துடைக்கறதுன்னு நேரத்தை வீணடிக்காம, உன் புருஷன் இதை எல்லாம் செய்ய வெக்கறத நான் பாராட்டுறேன்.

அகிலாவிற்கு உள்ளுக்குள் ஒரே ஆனந்தம். அவளுடைய அம்மா அப்பா கூட அவள் செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவள் மாமனார் இவ்வளவு ஆதரவாக இருப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர் தான் உண்மையான ஆண் மகன். ஒரு பெண்ணை மதித்து நடப்பவனே உண்மையான ஆண் மகன்.

இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

அகிலா: நான் டாக்ஸி புக் பண்ணட்டுமா மாமா? நானும் ரெடியாதான் இருக்கேன். உங்க கூட வந்தா செளகரியமா இருக்கும்.

ராஜதுரை: டாக்ஸி எதுக்கும் மா? பைக்லயே போயிடலாமே?

அகிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டில் பைக் இருக்கும் விஷயம் இவருக்கு எப்படி தெரியும் என்று யோசித்தாள்.

ராஜதுரை: ஏன்? உனக்கு டபுள்ஸ் ஓட்ட வராதா? நல்லாதான ஓட்டின நேத்து?

அகிலாவுக்கு இப்போது தான் புரிந்தது. ஓ! நேற்று நான் பைக் ஓட்டுவதை மாமனார் பார்த்து விட்டார் என்று நினைத்து. வெட்கத்துடன் சிரித்து கொண்டே தலையை குனிந்து கொண்டாள்.

ராஜதுரை, ஊரில் ஒரு பழைய ராயல் என்பீல்டு புல்லட் வெத்திருக்கிறார். அவருக்கும் நன்றாகவே வண்டி ஓட்ட தெரியும்.

அகிலா: டபுள்ஸ் எல்லாம் ஓட்டிடுவேன் மாமா. ஆனால் புடவை கட்டிக்கிட்டு பைக் ஓட்டறது தான் கொஞ்சம் சிரமம். நீங்க ஓட்டினா நான் வேணும்னாலும் பின்னாடி உட்கார்த்துக்கிறேன்.

ராஜதுரை: இந்த ஊர் தெரு எனக்கு பழக்கம் இல்லை. உன் பைக் அது. நீ ஓட்டறது தான் சரியாக இருக்கும். நீ போய் துணி மாத்திட்டு வா. நான் வரதுக்கு முன்னாடி இருந்த மாதிரி இப்பவும் இருக்கலாம். புடவை மட்டும்தான் கட்டனும்னு அவசியம் இல்ல.

ராஜதுரை சொன்னதை கேட்டதும் அகிலாவிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அகிலா: ஒரு 5 நிமிஷம் மாமா. நான் டிரஸ் சேஞ்ச் செஞ்சுட்டு வரேன்.

அகிலாவிடம் புடவையை விட்டால் ஜீன்ஸ், டி-சர்ட் மட்டுமே இருந்தது. ஒரு சல்வாரோ, லாங் டாப்போ அவளிடம் இல்லை. ஜீன்ஸ் மற்றும் ஒரு டி-சர்ட்டை அணிந்து கண்ணாடியில் பார்த்தாள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. தைரியத்தை வளர்த்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

ராஜதுரை மேலும் கீழுமாக அவளை பார்த்து சிரித்தார். குடும்பபாங்கான பெண்ணாக திருமணத்தின்போது புடவை கட்டி அடக்க ஒடுக்கமாக இருந்த அகிலா இப்போது ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்து கம்பீரமாக இருந்தாள்.

அகிலா: போகலாமா மாமா?

ராஜதுரை. போகலாம். நான் ரெடி தான்.

அகிலா நடந்து செல்ல அவர் அவளை பின்தொடர்ந்தார். அவள் குண்டியை அழகாக அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் தூக்கி பிடித்திருந்தது. நம் மாமனார் பார்க்க கூடுமே என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் மறைப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஒரு வழியாக அவர் பைக் அருகே இருவரும் வந்து விட்டனர். அவள் வைத்திருந்தது pulsar 180 பைக். 2002ல் சில ஆண்கள் மட்டுமே வைத்திருந்தனர். பைக்கில் அமர்ந்து ஸ்டாண்டை எடுத்து விட்டாள். ஸ்டார்ட் செய்ததும், பைக் உருமியது.

ராஜதுரை, தன் வாழ்நாளில் ஒரு பெண்ணுக்கு பின் அமர்ந்து சைக்கிளில் கூட சென்றதில்லை. ஆனால் இப்போது ஒரு பெண் பைக் ஓட்ட, அவன் அமைதியாக பின்னால் உட்கார்ந்து வரும் நிலை ஏற்பட்டது.

ராஜதுரை அப்போது மருமகள் பின்னால் அமர்ந்து வருகிறேன் என்று தைரியமாக சொல்லிவிட்டாலும் இப்போது சிறிது தயக்கமாக இருந்தது. தயங்கியவாரே நின்ற அவரை அகிலா உற்று நோக்கினாள்.

அகிலா: என்ன மாமா? அப்போ தைரியமா பின்னால் உட்காருவேன்னு சொல்லிட்டு இப்போ தயக்கமா இருக்கா? நான் நல்லா தான் ஓட்டுவேன். பயப்படாதீங்க. இங்க உங்க ஊரு ஆளுங்க யாரும் இல்லை. பின்னால் உட்கார்ந்து வந்தா யாருக்கும் தெரிய போறது இல்லை. நானும் யாருக்கும் சொல்ல போறதில்லை. இன்னும் உங்களுக்கு தைரியம் வரலைன்னா நீங்களே ஓட்டுங்க.

ராஜதுரை: இல்லை இல்லை. நீயே வண்டிய ஓட்டு மா.

வேட்டியை மடித்து கட்டி பைக்கில் அவள் பின்னே அமர்ந்தார்.

ராஜதுரை கொஞ்சம் இடம் விட்டு அமர்ந்தார். இருந்த போதிலும் அவருக்கும் அகிலாவுக்கு ஒரு அடி கூட இடைவெளி இல்லை. பைக்கின் கிரப் ரயில்லை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அகிலா, சீரான வேகத்தில் பைக்கை இயக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கூட்டனாள். ராஜதுரைக்கோ சற்று பயமாக தான் இருந்தது. இருப்பினும் பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். சராசரி ஆண்களைவிடவும் அகிலா நன்றாகவே பைக் ஓட்டினாள்.

சிறிது நேரத்தில் மார்க்கெட் பகுதியை வந்தடைந்தனர். டிராக்டர் பாகத்தை வாங்க அவள் உதவினாள். வாகனங்களை பற்றி ராஜதுரைக்கு தெரியாத விஷயங்கள் கூட அகிலாவிற்கு தெரிந்திருந்தது. எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்று கூட அவள் ராஜதுரைக்கு விளக்கமாக கூறினாள். ஒரு பெண்ணிடமிருந்து வாகனத்தை பற்றிய தொழில்நுட்பங்களை கற்று தெரிந்துகொள்வோம் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை.

ராஜதுரை: உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்? பசங்களுக்கே இவ்வளவு விஷயம் தெரியாது.

அகிலா: ஏன்? பொம்பளங்கன்னா சமைக்கறது, குழந்தைய வழர்கறது மட்டும் தான் தெரியும்னு நினைச்சேங்களா? எங்களுக்கும் எல்லாம் தெரியும்.

ராஜதுரை: உனக்குனு சொல்லு. எல்லா பொம்பளங்களுக்கும் இல்ல.. உன் மாமியாருக்கு சைக்கிள்ல எவ்வளவு வீல் இருக்குனு கூட தெரியாது. சைக்கிள் சீட்ல உட்காரறதுக்கே வெட்கபடுவாள்.

இருவரும் சிரித்தனர்.

ராஜதுரை: உன் புருஷனையும் செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுட்டாள். அவன் கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிக்க கூடாதுனு அவன் சைக்கிளுக்கு ஒரு டிரைவர் தனியே வெச்சிருந்தாள். கடைசில அவன் மனசுல சைக்கிள் ஓட்டறது ஒரு கஷ்டமான காரியம்னு பதிந்துவிட்டது. சைக்கிள் ஓட்டவே அவன் பழகல. இப்பயாவது ஓட்டறானா?

அகிலா: அவனாவது சைக்கிள் ஓட்டறதாவது!

கணவனை, அவன் இவன் என்று மாமனார் முன்பே பேசிவிட்டோமே என்று அவளுக்கு உறைத்தது.

அகிலா: சாரி மாமா! அவரை மரியாதை இல்லாம பேசிட்டேன்.

கணவனை மரியாதையில்லாமல் கூப்பிடுவது அவருக்கு புதிதாக தெரிந்தது.

ராஜதுரை: இதுவும் ஒரு விதத்துல நல்லா தான் மா இருக்கு.

அகிலாவிடம் பேசிக்கொண்டே நடந்தது அவருக்கு பொழுது போனதே தெரியவில்லை. அகிலா ஏற குறைய அவர் உயரம் இருந்தாள். முதல் முறையாக ஒரு பெண்ணிடம் அரசியல், அறிவியல் என எல்லா விஷயங்களையும் பேச முடிந்தது. கிராமத்தில் அவர் சந்தித்த பெண்களிடம் பேசுவதற்கு பெரிதாக எதுவும் இருந்ததில்லை. சோறு செஞ்சாச்சா சாப்டாச்சா என்பதை தவிர பெரிதாக பேச எதுவும் இல்லை. உலக வர்த்தகம், அறிவியல் என்று பேசினால் சிதறி ஓடிவிடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக