இப்படி சில வருடங்கள் உருண்டு போய் விட்டது. ராகவி உலக அளவில் பெரிய கூடை பந்து விளையாட்டு வீராங்கனை ஆகி விடுகிறாள்.
ராகவி கல்லூரியில் சேர்ந்த முதல்
வருடத்தில் அவள் அந்த கல்லூரியின் சார்பாக விளையாட முடியாமல் போனது அல்லவா, அதற்கு காரணம்
அவளை போல அந்த கல்லூரியில் விளையாட எந்த பெண்களும் இல்லாத நிலை என்பதுதான். ஆனால்
பின்னாளில் தான் ராகவிக்கு தெரிய வந்தது அதற்கு மூல காரணம் அந்த கல்லூரி
பிரின்சிபால் மற்றும் விளையாட்டு பயிற்சி ஆசிரியர் – நந்தா என்று. அவர்களுக்கு பெண்கள் விளையாட்டில் எந்த
ஈடுபாடும் கிடையாது, அவர்களை பொறுத்தவரை,
பெண்கள் எல்லாம், படித்து விட்டு பிறகு கல்யாணம் பண்ணி குடும்பம்
நடத்த போகிறவர்கள். அந்த ஊரில் எந்த பெற்றோரும் பெண்களை விளையாட்டுக்கு
என்றெல்லாம் அனுப்ப மாட்டார்கள் என்று அவர்களாகவே நினைத்து கொண்டே, அப்படி ஒரு
தோற்றத்தை கல்லூரியில் உண்டாக்கி வைத்து உள்ளனர்.
அவள் அந்த வருடமே மாவட்ட அளவில்
சென்றதற்கு அந்த கல்லூரி பயிற்சி ஆசிரியர் நந்தா தான் காரணம் என்று நினைத்து இருந்தாள்.
அப்புறம் தான் ராகவிக்கு தெரிந்தது அதற்கு காரணம் அந்த கல்லூரி ஆண்கள்
கூடைப்பந்தாட்ட அணி தலைவன், அவளது நண்பன், அவனது அப்பாவின் செல்வாக்கை உபயோகப்படுத்தி அவளுக்கு அந்த வாய்ப்பு
அக் கல்லூரி விளையாட்டு ஆசிரியர் நந்தா மூலம் வேறு வழியின்றி தர பட்டது என்று. அவள்
மாவட்ட, மாநில
அளவில் புகழ் பெற துடங்கியதும், அந்த பயிற்சி விளையாட்டு ஆசிரியர் நந்தா, கல்லூரி
பிரின்சிபால் ஆகிய இருவரும் அதற்கான அங்கீகாரத்தை தாங்கள் அடைய முயற்சி செய்தனர்.
அதை எல்லாம் கேள்வி பட்ட ராகவி ரொம்பவே கோபம் கொண்டாள், அவர்களுக்கு
நல்ல பாடம் புகட்ட நினைத்தாள்.
ஒருமுறை அப்படி ஒரு போட்டிக்கு கல்லூரி
ஆண்கள் குழுவுடன் ராகவி சென்ற போது அங்கே வந்து இருந்த விளையாட்டு ஆசிரியர் நந்தா மற்றும்
பிரின்சிபால் ஆகிய இருவரையும், அவள் அங்கே இருந்த பத்திரிகை ஆட்கள் முன்பே கேள்வி கணைகளால்
துளைத்து எடுத்து விட்டாள். அவர்கள் இருவரும் ஏன் அந்த கல்லூரி சார்பில் ஒரு
பெண்கள் குழுவை கூட எந்த விளையாட்டுக்கும் தையார் செய்ய வில்லை என்று.
அன்று இரவு அவர்கள் அனைவரும் கல்லூரி
பேருந்தில் திரும்பும் போது, முதலில் பிரின்சிபால் அவள் அருகே வந்து அவளை சமாதான படுத்த ரொம்பவே
முயற்சி செய்தார். ஆனால் ராகவி அங்கும் தனது நண்பர்கள், ஆண் கூடை
பந்தாட்ட வீரர்கள் முன்பு அவரை கேள்வி கணைகளால் துளைக்க ஆரம்பித்து விட்டாள்.
விட்டால் ரொம்பவே அவமானமாகி போய்டும் என்று உணர்ந்து கொண்ட முதல்வர், அவள் அதிகம் இடம் கொடுக்காததால், அடுத்த நாள் கல்லூரியில் தனது அறைக்கு வர
சொல்லி விட்டு சென்று விட்டார்.
அடுத்த நாள் ராகவி பிரின்சிபால்
அறைக்கு சென்றவள், அங்கேயும் அவரை கடுமையாக விமரிசிக்க தொடங்கினாள். உங்கள் மேல்
எவ்வளவு மரியாதை வைத்து இருந்தேன்,
நீங்கள் எல்லாம் இப்படி நடந்து கொள்வீர்கள்
என்று எதிர் பார்க்கவே இல்லை. பெண்கள் என்றால் அவ்வளவு இளக்காரம் உங்களுக்கு.
உங்களை போன்ற ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களை எல்லாம், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கூட
மன்னிக்க மாட்டேன் என்று கோபமாக கத்தி விட்டாள்.
முதலில் அவளை மிரட்டும் தொனியில், என்ன ரொம்ப
பேசுகிறாய், நான் நினைத்தால் உன்னை இந்த கல்லூரியை விட்டு இப்பவே TC கொடுத்து வெளியே
அனுப்பிவிட முடியும் என்கிறார். அதை கேட்ட ராகவி, என்னை சேர்த்து கொள்ள ஏற்கனவே பல கல்லூரிகள்
தையராக உள்ளன. இழப்பு உனக்குத்தான் என்றாள் எகத்தாளமாக. அதை கேட்ட
பிரின்சிபால் ஆடி போய் விட்டார்.
அவளின் சொல்லில் உள்ள உண்மையை புரிந்து கொண்ட அந்த பிரின்சிபால், ராகவி சற்றும் எதிர் பார்க்காத வண்ணம், திடீர் என ராகவியின் காலில் விழுந்து விட்டார். அம்மா தாயே, நான் உன்னை விட ரெண்டு பங்கு வயசுல பெரியவன், கல்லூரி பிரின்சிபால், எனது மானத்தை வெளியே வாங்கி விடாதே. நீ இப்போது சொன்னது போல உன் காலில் விழுந்து கெஞ்சி கேட்டு கொள்கிறேன், பெரிய மனது பண்ணி என்னை இந்த ஒரு முறை மன்னித்து விடு. இனிமேல் இந்த கல்லூரியில் பெண்களுக்கு படிப்பு மட்டும் இன்றி எல்லா வித விளையாட்டு உட்பட மத்த திறன் போட்டி களில் எந்த அளவுக்கு அவர்களை ஊக்குவிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவர்களை பயிற்சி கொடுக்க வகை செய்கிறேன் என்று ராகவி காலை பிடித்து கொண்டு கெஞ்சுகிறார்.
அவர் அந்த அளவுக்கு இறங்கி வருவார் என்று எதிர் பார்க்காத ராகவியே அவரின் அந்த நிலையை பார்த்து சற்று விளையாட எண்ணினாள். சற்று நேரம் அவரை அப்படியே காலில் விழுந்து கிடக்க வைத்தவள், எதிரில் இருந்த அவரின் சுழல் நாற்காலியில், கால் மேல கால் போட்டு அமர்ந்து கொண்டு, அந்த நாள் வரை மரியாதையுடன் அழைத்து வந்தவள், இப்போது சொல்கிறாள், உனக்கு நான் கொடுத்து வந்த மரியாதையை நீயே கெடுத்து கொண்டாய். இப்ப உன்னை பார்த்தால் கொஞ்சம் பாவமாக தான் இருக்கிறது. நீ உன் தவற்றை உணர்ந்து விட்டதால், இப்போதைக்கு மன்னித்து விடுகிறேன். மீண்டும் நீ பழைய படி ஏதேனும் தகிடு தத்தம் செய்தால், அப்புறம் நான் பொல்லாதவளாகி விடுவேன், உன்னை சந்தி சிரிக்க வைத்து விடுவேன், யாபகம் வைத்து கொள் என்று எச்சரித்து, சரி போதும் எழுந்திரு, எவ்வளவு நேரம் தான் சின்ன பெண் என் காலை பிடித்து கொண்டு விழுந்து கிடப்பாய் என்று சற்று ஏளனத்துடன் சிரித்தவாறே சொல்லி, அப்படியே அவரை பிடித்து மெல்ல எழுப்பினாள். அப்போதும் முழுவதும் எழ விடாமல், சற்று நேரம் அவள் முன்பு மண்டி போட்டவாறு நிற்க வைத்தாள்.
அவள் இன்னும் அந்த நாற்காலியில் உட்கார்ந்து இருக்க, அவர் கை கட்டியவாறே அவள் முன்பு நின்று கொண்டு இருந்தார். ராகவி இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு கட்டளை விடுகிறாள். அவர் பூம் பூம் மாடு போல தலை ஆட்டி கொண்டே, அப்படியே நீங்க சொல்ற மாதிரியே செய்து விடுகிறேன் என்று சொல்லி கொண்டு அவள் சொல்வதை எல்லாம் குறிப்பு எடுத்து கொண்டு இருக்கிறார்.அந்த நேரம் பார்த்து அந்த விளையாட்டு
ஆசிரியர் நந்தா உள்ளே வருகிறான். அவன் வந்தது, ப்ரின்சிபாலிடம் ராகவியை பற்றி புகார் கூற, அவள் திமிர்
அதிகமாகி கொண்டு வருகிறது, அவளை கூப்பிட்டு ரெண்டு அதட்டு போடுங்கள் என்று சொல்ல. உள்ளே வந்து
பார்த்தவன் அங்கே இருந்த நிலைய பார்த்து திகைத்து போய் சிலையாகி நின்று விடுகிறான்.
அவன் வந்ததை பார்த்த ராகவி புரிந்து
கொண்டாள் அவன் எதற்கு வந்து உள்ளான் என்று. ராகவி ப்ரின்சிபாலிடம் சொல்கிறாள், முதலில் இந்த நந்தாவை வெளியேற்ற வேண்டும்,
இவன்தான் எல்லா வற்றுக்கும் காரணம், உன்னை கூட தவறாக
வழி நடத்தி இருக்கிறான் என்றாள்.
அதை கேட்ட அந்த நந்தாவுக்கு கீழே பூமீ
பிளந்து விட்டது போன்ற உணர்வு. நான் இந்த பெண்ணை பற்றி வத்தி வைக்க வந்தால், இவள் என்னடா
வென்றால் என் வேலைக்கே உலை வைத்து விடுவாள் போல இருக்கிறதே என்று பயம் வந்து
விட்டது அவனுக்கு. அவ்வளவுதான், அவனும் நேரே சென்று,
பிரின்சிபால் முன்னிலையில் ராகவி காலில் வந்து
விழுகிறான். அம்மா நீ என் பொண்ணு போல இருக்கிற, இந்த வயதான பயிற்சி ஆசானை மன்னித்து விடம்மா, உனக்கு
புண்ணியமாக போகட்டும், இனிமேல் நீங்க என்ன சொல்றீங்களோ அது மாதிரி நடந்துக்குறேன் என்றவாறு
ராகவி காலை பிடித்து கெஞ்சுகிறான் வெட்கமே இல்லாமல்.
அதை பார்த்த ப்ரின்சிபாலுக்கு வேர்த்து
விடுகிறது. நல்ல வேலை ராகவி இவன் முன்னால என்னை காலில் விழ வைக்கலை, நான்
தப்பிச்சேன்டா சாமி என்று மனதுக்குள்ளே சந்தோச படுகிறார். ராகவி நந்தாவை சற்று
நேரம் அப்படியே காலில் விழுந்து கிடைக்க செய்து விட்டு, பின்பு மண்டி
போட வைக்கிறாள். அப்புறம் அவனிடம் பிரின்சிபால் இடம் தான் சொன்ன வற்றை எல்லாம் சரி
பார்ப்பது போல, திருப்பி சொல்ல சொல்கிறாள் அவன் என்ன குறிப்பெடுத்து கொண்டான் என்று.
அப்படி பிரின்சிபால் சொல்வதை எல்லாம், அந்த நந்தாவை மண்டி போட்டவாறே குறிப்பு
எடுத்துக்க ஆணை இடுகிறாள். அவனும் அப்படியே குறிப்பெடுக்க, ஒரு அரை மணி
நேரம் அங்கே அந்த நாடகம் அரங்கேறியது.
ராகவி கால் மேல கால் போட்டு
உட்கார்ந்து இருக்க, பிரின்சிபால் அவள் எதிரில் கை கட்டி நின்று கொண்டு பேச, பயிற்சி
ஆசிரியர் நந்தா மண்டி போட்டவாறே அதை குறிப்பெடுக்க என்று. பிறகு கடைசியில் ராகவி
கிளம்ப எழுந்துக்க, பிரின்சிபால் கை எடுத்து அவளை கும்பிடுகிறார், அந்த வாத்தியார் நந்தா, மண்டி போட்டவாறே, திரும்ப ஒரு
முறை ராகவி காலில் விழுந்து வணங்கி விடை கொடுக்கிறான், அவள் வாசலை
அடையும் வரை எழுந்துக்க பயந்து கொண்டு முட்டி போட்ட படியே.
அப்புறம் அவள் அந்த கல்லூரியில்
படிக்கும் வரை அந்த இருவரும் வாலை சுருட்டி கொண்டு இருந்தனர். அந்த வருடம் முதல்
அந்த கல்லூரியில் பெண்களுக்கு என பல வித விளையாட்டு மற்றும் திறன்
அறியும் போட்டிகள் நடத்த பட்டன ராகவியிம் யோசனைப்படி. அவர்கள் இருவரும் அதன் பின்பு
ஒழுங்காக நடந்து கொண்டதால், ராகவியும் அவர்களை மன்னித்து விட்டாள். ஆனாலும் அவர்கள் இருவரும்
ராகவியை நேரில் பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு முன்னால், அவர்கள் மரியாதை
முதல் வணக்கம் வைப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
அது பார்க்கும் மத்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
சற்று விதியாசமாக படும், ஆனாலும் யாரும் எதுவும் கேட்பதில்லை, பேசுவதில்லை. ராகவிக்கு தேசிய அளவில் கிடைத்து
வரும் புகழை பார்த்து, அதனால் அந்த கல்லூரிக்கு கிடைக்கும் பெயரை பார்த்து, எல்லோரும் அதை
அவளுடைய திறமைக்கு கிடைத்த பரிசாக எண்ணி கொள்கின்றனர், இப்போதெல்லாம்
அவளை பார்த்து, அந்த கல்லூரியில் எல்லோருமே முதல் வணக்கம் செலுத்துவதை வழக்கமாக்கி
கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக