ராகவி சின்ன வயதில் இருந்தே வசந்தாவால்
ஒரு ஆம்பிளை பையனை போல வழக்க பட்டவள். கராத்தே, ஜிம் எல்லாம் சென்று உடம்பை வளர்த்து ஒரு நன்கு
பலசாலியான பெண்ணாக இருக்கிறாள். அதனால் அவளின் உயரமும் அதிகம். ராகவியும், அவள் அண்ணன்
ராஜீவும் சேர்ந்து நடந்தால், என்னமோ ராகவி, ராஜீவுக்கு அக்கா போல இருப்பாள்.
ராகவி பிறந்த உடனேயே, வசந்தா ராஜீவை
ஒரு பெண் பிள்ளை போல நடத்துவதை நிறுத்தி கொண்டதால், ராகவிக்கு, அவளது அண்ணா ராஜீவின் பெண்கள் உடை உடுத்துவது, மல்லிகா
அக்காவுக்கு முற்றிலுமாக அடங்கி நடப்பது எல்லாம் அதிகம் தெரியாது.
ஏதோ ராஜீவ் அண்ணா, மல்லிகா
அக்காவுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து நடந்து கொள்கிறான், என்ற அளவுக்கு
மட்டுமே கொஞ்சம் போல தெரியும். அதுவும் சின்ன வயதில் இருந்தே அவர்கள் இருவரும்
நண்பர்கள் என்பதால், அப்படி இருக்கிறார்கள் என்று நினைத்து கொள்வாள்.
ஆனால் ராஜீவ் பாரத நாட்டியம் கத்து
கொண்டு இருப்பதையும், அதில் அவன் ராதை - மல்லிகா கிருஷ்ணர் வேடம் போட்டது, மற்றும் ராஜீவ்
உயரத்தில் ரொம்பவே குள்ளமாக இருப்பது, எப்போதும் சற்று பயந்த சுபாவத்துடன் இருப்பதை
எல்லாம் பார்த்து, அவளுக்கு ராஜீவ் மேல் ஒரு அண்ணன் என்ற மரியாதை வர வில்லை. அதனால்
அவள் எப்போதும் ராஜீவை, டேய் அண்ணா, இங்க வாடா, எடுத்து தாடா என்றெல்லாம் அதிகம் மரியாதை கொடுக்காமல் டா போட்டு தான்
கூப்பிடுவாள். அண்ணா என்று சொல்லிக்கொண்டே, அப்புறம் டா போட்டு கூப்பிடுவது சற்று
வேடிக்கையாக இருக்கும். ராகவி அப்படி ராஜீவை கூப்பிடுவதை பார்த்து, வசந்தா, லதா, மல்லிகா
எல்லோரும் தங்களுக்குள் சிரித்து கொள்வார்கள்.
ஆனால் எத்தனை நாட்களுக்குத்தான்
ரகசியம் மறைக்க முடியும், ராகவிக்கு வயது பதினாறு வரும்போது ஒரு
நாள் அவள் மல்லிகா வீட்டில், ராஜீவ் மல்லிகாவின் உடைகளை அணிந்து கொண்டு மல்லிகாவுக்கு அடிமை வேலை
செய்து கொண்டு இருப்பதை பார்த்து விட்டாள். ராஜீவ் வீட்டுக்குள் நுழைத்தவுடன் அதை
பற்றி ராகவி கேட்க, அன்று இரவு வசந்தா வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்தது.
வசந்தா தான் சாமர்த்தியமாக அதை
சமாளித்தாள். ராகவியை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு, மெல்ல மெல்ல
அவளுக்கு ராஜீவை பற்றிய உண்மைகளை சொல்லி புரிய வைத்தாள். என்ன இருந்தாலும் ராஜீவ், உன் அண்ணன்
அல்லவா, அவன்
அப்படி நடந்து கொள்வது அவனுக்கு பிடித்து இருக்கிறது, நாம் யார் அதை
குற்றம் சொல்ல, அது ஒரு வகையான கிளர்ச்சி, உனக்கு எப்படி ஆண்களை போல உடை உடுத்த, விளையாட
பிடித்து இருக்கிறதோ, அதே போல அவனுக்கு பெண்களை போல உடை உடுத்த, பரத நாட்டியமாட
எல்லாம் பிடித்து இருக்கிறது. நீ செய்வது தப்பு இல்லை என்றால், அவன் செய்வதும்
தப்பு இல்லை தான் என்றெல்லாம் சொல்லி புரிய வைத்தாள்.
முதலில் ராகவி, ராஜீவை ஒரு
திருநங்கை என்று நினைந்து விட்டாள். அதை கேட்ட வசந்தா சிரித்து விட்டு சொன்னாள், திருநங்கைகள்
என்றால் கேவலம் இல்லை, அதுவும் ஒரு இயற்கை. ஆனால் பயப்படாதே, அதற்காக ராஜீவ் ஒன்றும் திருநங்கை எல்லாம் கிடையாது, அவன் ஒரு சரியான
ஆண்பிள்ளைதான், இதெல்லாம் ஒரு வகையான கிளர்ச்சி மட்டும் தான். அதுவும் அவன் பிறந்த
போது, எனக்கு
பெண் குழந்தை பிறக்க வில்லையே என்ற ஆதங்கத்தில், நாங்கள் தான் அவனுக்கு சில வருடங்கள் பெண்
உடைகளை போட்டு மகிழ்ந்தோம். எப்படி உனக்கும், மல்லிகாவுக்கு ஆண் உடைகள் போட்டு அழகு
பார்க்கிறோமோ அது போல. அதனால் அவன் மேல் எந்த தப்பும் இல்லை என்றெல்லாம் சொல்லி
சமாதான படுத்தினாள்.
அப்போது ராஜீவ் ஒரு பொம்பிளை பிள்ளை போல
அழுது கொண்டு இருந்தான்.
அதை பார்த்த ராகவிக்கு, தனது அண்ணன்
ராஜீவ் மேல ஒரு அனுதாபம் வந்தது. அவனை இப்போது அவள் நன்கு புரிந்து கொண்டாள். எனவே
ராகவி ராஜீவுக்கு அருகில் சென்று,
அவன் கண்களை துடைத்து, ஒரு புரிதலுடன், சிரித்த
முகத்துடன் சொல்கிறாள், டேய் அண்ணா கவலை படாதே, இனிமே நாம் உன்னை அழ வைக்க மாட்டேன். உனக்கு
எல்லா வகையிலும் உதவியாக இருப்பேன் என்று சொல்லி கட்டி பிடித்து ஆறுதல்
சொல்கிறாள்.
அப்போது ராகவிக்கு விஷயம் தெரிந்து
விட்டது, அதனால்
அவள் வீட்டில் சென்று ஒரு பிரளயம் செய்ய போகிறாள் என்று பயந்து கொண்டே, அதை சரி படுத்த
வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கே வந்த லதா ஆண்ட்டியும், மல்லிகாவும்
அந்த காட்சியை பார்த்து நிம்மதி அடைகிறார்கள்.
இப்போது ராகவிக்கு ராஜீவை பற்றிய
உண்மைகள் தெரிய வந்து விட்டதால்,
அவள் சொல்கிறாள், டேய் அண்ணா, இனிமே உனக்கு பெண்கள் உடை அணிய வேண்டும்
என்றால், லதா
ஆண்ட்டி வீட்டுக்கு போக வேண்டியது இல்லை, நீதான் என் உயரத்தில் இருக்கிறாய், என் உடைகள்
உனக்கு நன்கு பொருந்தும். எப்போது வேண்டுமென்றாலும் என் உடைகளை போட்டு கொள்ளலாம்
என்று சொல்லி சிரிக்கிறாள். ராஜீவுக்கு வந்த வெட்கத்தை பார்க்கணுமே, அது ஒரு கண்
கொள்ள கட்சியாக இருக்கிறது. எல்லோரும் சிரிக்கிறார்கள்.
அன்று முதல், ராகவி தனது
அம்மா வசந்தாவுடன் சேர்ந்து கொண்டு,
ராஜீவை நன்கு கேலி செய்து விளையாடுவாள். டேய்
அண்ணா என்று அழைப்பது மாறி இப்போதெல்லாம் ராகவி, ராஜீவை டேய் என் செல்ல குட்டி பொட்டை அண்ணா என்று
சொல்ல ஆரம்பித்து விட்டாள்.
ராகவி எப்போதும் தன்னை பிஸி ஆக வைத்து
கொள்பவள். அவள் படிப்புடன், கராத்தே கிளாஸ், ஜிம் பயிற்சி மற்றும் விளையாட்டிலும் ஆர்வம் செலுத்தி வந்தாள். கூடை
பந்து நன்கு விளையாடுவாள். அதனால் அவள் அதிகம் வீட்டில் இருப்பது இல்லை. இருக்கும்
நேரத்திலும் சற்று களைப்புடன் தூங்க சென்று விடுவாள். அதனால் தான் இத்தனை நாட்களாக
அவள் தனது அண்ணா ராஜிவ் என்ன செய்கிறான் என்று கூட அதிகம் அறிந்து கொள்ள
முயற்சிக்க வில்லை. இப்போது அறிந்து கொண்ட பிறகும் கூட, விடுமுறை
நாட்களில் எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டும் தன் செல்ல குட்டி பொட்டை
அண்ணாவுடன் அப்படி கொஞ்சி விளையாடுவாள். அவனும் அதுக்கு என காத்து கிடப்பான்.
ராஜீவுக்கு தனது தங்கை அப்படி கிண்டல் செய்து கொஞ்சுவது ரொம்ப பிடிக்கும். ராகவி
தன் அண்ணாவை கிண்டல் செய்வதை பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள். வசந்த
அம்மா, லதா
ஆண்ட்டி, மல்லிகா
என்று எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள் அந்த கொஞ்சல் விளையாட்டில். அன்று முழுவதும்
ஒரே குத்தும் கும்மாளமுமாய் இருக்கும் வீட்டில்.
அந்த நேரங்களில் ராகவி, ராஜீவுக்கு
ராகவி தலை பின்னி, பூ வைத்து, தனது உடைகளை கொடுத்து போட்டு கொள்ள வைப்பாள். அழகாக கண்களுக்கு மை
இட்டு, நெற்றியில்
பொட்டு வைத்து, காதில் தோடு, கைகளுக்கு வளையல், காலில் கொலுசு எல்லாம் போட்டு அழகு பார்ப்பாள். தனது வாக்ஸிங் கிரீம்
எல்லாம் கொடுத்து அவனுக்கு உடம்பில் உள்ள முடியெல்லாம் எடுக்க பயிற்சி கொடுத்து
விட்டாள். டேய் என் செல்ல குட்டி பொட்டை அண்ணா, நீ இப்பதாண்டா ரொம்ப அழகா இருக்கே என்று சொல்லி
கேலி செய்வாள்.
அவன் வெட்க படுவதை பார்த்து இன்னும்
கேலி செய்வாள். அட என் செல்ல குட்டி பொட்டை அண்ணாவுக்கு வெட்கத்தை பாருடா என்று.
ராஜீவ் பதிலுக்கு போடி என்று சொன்னால், அவன் தலையில் ஒரு கொட்டு வைத்து, டேய் என்னடா
என்னை போடி என்றெல்லாம் சொல்கிறாய்,
ஒழுங்கா மரியாதையா கூப்பிடணும்டா என் செல்ல
குட்டி பொட்டை அண்ணா என்று சிரித்தவாறே அதட்டுவாள். ராஜீவும், சரிங்க நம்ம
வீட்டு குட்டி இளவரசி அவர்களே என்று சொல்லி சிரிப்பான். ஆமாம் நான் இந்த வீட்டு
குட்டி இளவரசி, நீதான் பெரிய இளவரசி என்று சொல்லி ராகவி சிரிப்பாள்.
வசந்தா கண்டிப்பாக சொல்லி விட்டாள், ராகவி, இந்த விஷயம்
நம்ம வீட்டுக்குள்ள மட்டும்தான் இருக்கணும், என்ன இருந்தாலும் ராஜீவ் உன் அண்ணன், அவன் மானம்
வெளியில் போகாமல் பார்த்து கொள்வது உன் பொறுப்பு என்று சொல்லி விட்டாள். ராகவியும், கவலை படாதே
அம்மா, நான்
பார்த்து கொள்கிறேன் என்று ஒரு பெரிய மனுஷி போல சொன்னதை கேட்டு, ராஜீவுக்கு
கொஞ்சம் தைரியம் வந்தது.
அதே போல பண்டிகை நாட்களில், மற்றும்
ராஜீவின் பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில், ராஜீவ் வீட்டில் உள்ள அனைவரது காலில் விழுந்து
ஆசீர்வாதம் வாங்கும் போது, ராகவியும் வந்து அவர்களுடன் சேர்ந்து நின்று கொள்வாள். டேய் என்
செல்ல குட்டி பொட்டை அண்ணா, என் காலில் விழுந்து வணங்குடா என்று அதட்டி காலில் விழ வைப்பாள்.
மல்லிகா, ராகவி இருவரும் சேர்ந்து நின்று கொண்டு ராஜீவை
தங்கள் காலில் விழ வைத்து பார்த்து மகிழ்வார்கள். ராஜீவும் எந்த வித தயக்கமும்
இன்றி, பிறந்த
நாள் புது பொம்பிளை ட்ரெஸ்ஸ போட்டு கிட்டு தனது தங்கை ராகவி மற்றும் தோழி
மல்லிகாவின் கால்களில் விழுந்து கும்பிடுவான் வெட்க பட்டு கொண்டு முகம் சிவக்க.
இன்னிக்கு மாதிரியே என்னிக்கும் நீ
இப்படி எங்க காலில விழுந்து கிடக்கனும்டா என்று சொல்லி வாழ்த்துவார்கள். அது என்
பாக்கியம் என்று சொல்லி அந்த வாழ்த்துகளை அவன் ஏற்று கொள்வான், இருவரின் காலை
தொட்டு வணங்கி கொண்டே.
அது அவ்வளவு எளிது கிடையாதுடா, நீ எங்களை
எப்பவும் திருப்தி பண்ணனும்டா, அப்பதான் நாங்க உனக்கு எங்க டிரஸ் போட்டுக்க கொடுப்போம் என்று
சொல்லி அவனை சற்று பயமுறுத்துவார்கள். அவன் அதை கேட்டு பயப்படுவதை பார்த்து
சிரிப்பார்கள்.
இப்போதெல்லாம் வெளியில் செல்லும்போது, ராஜீவ், ராகவி மற்றும்
மல்லிகாவுக்கு இடையில் நடப்பான். அவர்கள் இரண்டு பேரும் அவனை பாதுகாப்பாய் அழைத்து
சொல்கிறார்களாம். அப்போது ராஜீவ் அவர்களிடம் சொல்லுவான், கொஞ்சம் சின்ன
ஹீல்ஸ் போட்டுக்கோங்க, ஏற்கனவே நீங்க என்னை விட உயரம், இதுல இவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டுக்கிட்டா, நான் ரொம்ப
சின்ன பையன் போல தெரியுறேன் என்று.
அதை கேட்டு அவர்கள், வேண்டுமானால்
நீயும் எங்களை போல பேசாம பொம்பிளை டிரஸ் போட்டு கிட்டு, ஹீல்ஸ்
போட்டுக்கடா என்று கேலி செய்வார்கள். என்னடா எப்படா அந்த மாதிரி பொம்பிளை டிரஸ்
போட்டு கிட்டு வெளியில சுத்த போறோம்னு கனவு காண்கிறாயா என்று கிண்டல் செய்வார்கள்.
வேணும்னா எங்கேயாவது நம்மளை யாருக்கும்
தெரியாத ஒரு புது ஊருக்கு செல்வோம்,
அங்கே இது மாதிரி உன்னை பொம்பிளை ட்ரேஸ்ல
வெளியே கூட்டி கிட்டு போறோம் ஒரு தடவை உன் ஆசை தீர என்று சொல்லி அவனை அதை பற்றி
கனவு காண வைத்து விடுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக