சனி, 4 மார்ச், 2023

ஆண்கள் (பொட்டச்சி) கலை குழு - 01


என் பெயர் சுதாகர், வயது 22. நான் படிக்கும் இரு பாலர் கலை கல்லூரியில் இருக்கும் கிரிக்கெட் அணிக்கு நான்தான் கேப்டன். நான் கல்லூரி மூன்றாம் வருடம் படிக்கும் மாணவன். எனது அணியில் மத்த வீரர்கள் இரண்டாம் மற்றும் முதல் வருடம் படிப்பவர்கள், நான்தான் சீனியர். எங்கள் அணியில் மொத்தம் 14  பேர் உண்டு. அணிக்கு கோச்சாக நந்தா சார், வயது நாப்பது இருக்கும்.

எங்கள் கல்லூரியில் இந்த வருடம் சேர்ந்த வசந்தா என்ற பெண் மாநில அளவில் கிரிக்கெட் விளையாடும் பெண். அது எங்களுக்கு தெரியாது. அவள் கல்லூரியில் சேர்ந்தவுடன் ஒரு பெண்கள் கிரிக்கெட் அணியை உருவாக்கினாள் - அதில் அதிக பட்சம் அவளுடன் சேர்ந்து படித்த, கிரிக்கெட் விளையாடி வரும் பெண்கள்தான் - எல்லோரும் முதல் வருடம்.

எங்கள் கல்லூரியில் ஒரே ஒரு கிரிக்கெட் மைதானம் தான். அதில் நாங்கள் எப்போதும் மாலையில் விளையாடி வருவோம். அப்போது ஒரு நாள் அந்த வசந்தாவும், அவளது தோழிகளும் வந்து நாங்களும் கிரிக்கெட் விளையாட வேண்டும். எங்களுக்கு வாரத்தில் மூன்று நாள் மைதானம் கொடுங்கள், நீங்கள் மூன்று நாட்கள் விளையாடுங்கள் என்று சொன்னாள்.

எனக்கு கோபம் வந்தது, கேலியாக அவளிடம் பெண்கள் எல்லாம் எதுக்கு கிரிக்கெட் விளையாட வேண்டும், போய் பொம்பிளையா லட்சணமா நடனம் பாட்டு என்று இந்த கல்லூரியில் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் நடக்கும் அதில் பங்கு கொள்ளுங்கள் என்றேன். அதை கேட்ட என் அணி வீரர்கள் எல்லோரும் அவர்களை பார்த்து கேலியாக சிரித்து விட்டனர்.

அப்படி நாங்கள் சிரித்ததை பார்த்து வசந்தாவுக்கு கோபம் வந்து விட்டது, எங்களிடம் சற்றே கண்டிப்பான குரலில், என்னங்கடா ரொம்ப திமிரா பேசுறீங்க, நீங்கல்லாம் அப்படி சரியான ஆம்பிளைங்கன்னா, வாங்கடா வந்து எங்க கூட ஒரு கிரிக்கெட் போட்டி விளையாடுங்க, யாரு ஜெய்க்குறாங்களோ, அவங்க அதுக்கு அப்புறம் இந்த மைதானத்துல விளையாடட்டும், தோத்தவங்க போய் கலை நிகழ்ச்சில கலந்துக்கலாம் என்றாள்.

அதை கேட்ட நானோ, எண்ணங்கடி, எங்களை போய் பொட்டச்சிங்களோட விளையாட சொல்றீங்க, எங்களோட எல்லாம் விளையாட உங்களுக்கு என்ன திறமை உண்டு, விட்டா இருபது இல்ல, பத்து ஓவர் கூட விளையாட மாட்டீங்க, எதுக்கு இந்த வீராப்பு, போங்கடி என்று விரட்டினேன்.

அதை கேட்ட வசந்தா, சும்மா வாய் சொல் வீரர்களா இருக்காதீங்க, விளையாண்டு எங்களை அப்படி ஜெயித்து கட்டுங்கடா பார்ப்போம் என்று சவால் விட்டாள். இதுக்கு மேல எங்களால் அவர்களை விரட்ட முடியாது என்பதால், வேறு வழி இன்றி அந்த சவாலுக்கு ஒத்து கொண்டோம்.

உண்மையாக சொல்ல போனால் நாங்கள் எல்லாம் சும்மா டைம் பாஸுக்கு கிரிக்கெட் விளையாடுபவர்கள்தான். ஒன்றும் பெரிய சிறப்பு பயிற்சி எல்லாம் எடுத்து கொண்டவர்கள் இல்லை. எங்கள் பயிற்சி ஆசிரியர் நந்தா சார் ஒரு காலத்தில் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடி உள்ளார், ஆனால் கல்லூரி விளையாட்டு ஆசிரியர் ஆன பிறகு, அதிகம் சிரத்தை எடுத்து எல்லாம் எங்களுக்கு சொல்லி கொடுப்பதில்லை. போய் விளையாடுங்க என்று சொல்லி விட்டு அவர் தன் பாட்டுக்கு சென்று விடுவார்.

நாங்கள் இன்று இப்படி ஒரு பெண்கள் அணியுடன் விளையாட போகிறோம் என்று அறிந்த போதும், அவர் அதிகம் அதில் ஆர்வம் கட்ட வில்லை. அவருக்கு வசந்தாவை பற்றி தெரியும் - அவள் மாநில அளவுக்கான கிரிக்கெட் வீராங்கனை என்று. ஆனால் மற்ற பெண்கள் அந்த அளவுக்கு பிரபலம் இல்லாததால் அவர் ஒட்டு மொத்த பெண்கள் அணி பற்றி பெரிய எதிர் பார்ப்பு இல்லாமல், சாதாரணமாக எடுத்து கொண்டு விட்டார். யார் ஜெயித்தாலும் அவர்தானே பயிற்சி ஆசிரியர் என்று தொடர போகிறோம் என்று ஒரு எண்ணம் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக