சனி, 30 நவம்பர், 2024

2100 ல் உலகம் எப்படி இருக்கும்


2100 ல் உலகம் எப்படி இருக்கும்.

Thought Curtesy (கருத்து / எண்ணம்): Pottai Crossy https://www.facebook.com/pottai.crossy
விஞ்ஞானமும் அறிவியலும் முழுதும் வளர்ந்த காலம். அதுக்கு ஏத்த மாறி பெண்களும் எல்லா துறையிலும் வளர்ந்து முன்னேற்றம் மட்டும் அடையவில்லை. முழுமையாய் அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து விட்டனர். எந்த துறையை எடுத்தாலும் பெண்கள் மட்டும் தான்.
ஆண்களிடம் இருந்து அனைத்தையும் பறித்த பெண்கள் ஆண்களுக்கென்று விட்டு வைத்தது புடவையும் வீட்டு அடுப்பங்கரையும்.
ஏன்னா அந்த இரண்டும் பெண்களுக்கு தேவை இல்லை.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஏற்ற உடையாய் பேண்ட் சர்ட்டும் ஜீன்ஸ் டீ சர்ட்டும் மாறிவிட்டது. வெளியே வேலைக்கு செல்வதால் வீட்டில் அடுப்பங்கரை இருந்த இடத்தையே பெண்கள் மறந்து விட்டனர்.
இதை காரணமாய் வைத்து பெண்களோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாத ஆண்கள் பெண்களே இல்லாத துறையில் சென்று வெற்றி பெற நினைத்து கையில் எடுத்த ஆயுதம் தான் வீட்டு அடுப்பங்கரை.
மனைவிக்கு வயிறு நிறைய வாய்க்கு ருசியா சமைத்து போட்டு மனைவியிடம் பாராட்டு வேறு வாங்கிய பிறகு சமையல் வேலை வீட்டு வேலை என் அனைத்திலும் தாங்கள் கில்லாடி என பேர் வாங்கி காலப்போக்கில் அவர்கள் மனதிலே தங்களுக்கு தெரிந்தது சமையல் வேலை தான் என்று அவர்கள் மனமே ஒத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.
மனைவி காலை எழும்பி வேலைக்கு செல்வதால் அவளுக்கு முன்னரே எழும்பி அனைத்து வேலைகளையும் முடித்து மாலை வீடு வரும் வரை தொடர்ந்து சமையல் வேலை வீட்டு வேலை என காலத்துக்கும் அடுப்பங்கரை சுற்றியே தங்கள் நேரத்தையும் காலத்தையும் செலவழிக்க ஆரம்பித்தனர்.
அதற்கு அவர்களுக்கு ஏற்ற உடையாக புடவையும் நைட்டியும் கச்சிதமாய் பொருந்தி போனது.

1 கருத்து:

  1. Gopal Jayyaraj: இன்று ஒரு ஆண் மகன் புடவை கட்டினால் அவனை கேலி செய்றாங்க. அவனும் வெட்கப்படுறான். ஒரு பெண் பாண்ட், ஷர்ட் போட்டா பெருமை படுறாங்க. இன்னும் சில ஆண்டுகள் கழித்தால் நிலைமை தலை கீழாக மாறும்.
    தீபாவளிக்கு பாண்ட், ஷர்ட் போட்ட பெண் புடவை கடைக்கு கணவனை கூட்டி போய் சாரீ எடுத்து கொடுப்பாங்க. மேட்சிங் ப்ளௌஸ், வளையல், குங்குமம், கர்சீப், பர்ஸ் வாங்கி கொடுப்பாங்க. அதை ஆண் வெட்கப்பட்டு வாங்கி கொள்வான். மனைவி முன் செல்ல கணவன் பின் செல்வான்.
    கணவனுக்கு மாமியார் என்ன சொல்வாங்களோ என்ற பயமும் இருக்கும்.
    ஒரு விழாவுக்கு போகணும் என்றால் பெண்கள் பாண்ட் ஜீன்ஸ் போட்டு சீக்கிரம் ரெடி ஆகி விடுவாங்க. ஆனால் ஆண்கள் புடவை கட்டி ப்ளீட்ஸ் சரி பாத்து, தலை சீவி, பூ வைத்து கிளம்ப ரொம்ப நேரம் ஆகும். பெண்கள் காரை ஸ்டார்ட் செய்து வைத்து புடவை கட்டிய ஆண்கள் வருவதற்காக காத்து இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு