வெள்ளி, 21 ஜூன், 2024

சிறு வயது அவமானங்கள், EP02

பொட்டை க்ராஸி (கீர்த்தி) யின் முதல் அனுபவம், P02:

Curtesy: Pottai Crossy (கீர்த்தி), Facebook

கீர்த்தி: அதற்கு பிறகு ராஜி என்னை சுத்தமா மதிக்குறதே இல்லை. சொல்ல போனா அவகூட சேர்ந்து கிளாஸ் பொண்ணுங்களும் என்னை மதிக்குற தில்லை. ராஜி லீடரா இருக்கதால என்னை அவ அடிமை மாறி பயன்படுத்தி கிட்டா.

டீச்சர் எழுதி முடிச்சதும் என்னை போர்டு அழிக்க சொல்றது, பக்கத்து கிளாஸ்ல போய் சாக்பீஸ் வாங்கிட்டு வர சொல்றது, நோட்டு புத்தகங்களை தூக்கிட்டு வர சொல்றதுன்னு என்னை வேலைக்காரன் மாறியே பயன்படுத்தி கிட்டா.

சுதா: ஆகா இத்தனை நாள் நீ மற்றவர்களை வேலை வாங்கிய இடத்தில இப்போது அவர்கள் மத்தியில் உன்னை வேலை வாங்குகிறாள். அதை பார்த்து மத்த பெண்களும் வேணும்டா உனக்கு என்று சொல்லாமல் சிரிப்பார்களே.

சுதா: அப்படி வேலை வாங்கும்போது ராஜி உன்ன எப்படி கூப்பிடுவாள். டேய் னா

கீர்த்தி: ஆமா, ஆமா. வாடா, போடா னு கூட, எல்லாரும் ஒரு மாதிரி அசிங்கமா பாப்பாங்க.

கீர்த்தி: எல்லாரும் அவளுக்கு சப்போர்ட்டா இருந்ததால, என்னால அவள எதிர்க்க கூட முடியல. அவ சொல்றதெல்லாம் கேட்டு தலையாட்ட ஆரம்பிச்சேன். ஆனாலும் அவள் தோக்கடிக்கணும் எண்ணம் மட்டும் Mind ல ஓடிட்டே இருந்துச்சு.

அதுக்கு ஒரே வழி நான் முதல் மார்க் வாங்குறதுதான். அதே எண்ணத்தோடு நல்லா படிச்சு காலாண்டுத் தேர்வை எழுதுனேன்.

ஆனா மார்க் குடுக்கும் போது மறுபடியும் ராஜி தான் முதல் மார்க் வாங்கிருந்தா.

அதுவும் எல்லா சப்ஜெக்ட்லயும் என்னை விட அதிகம். இந்த முறை நான் அவளை விட 15 மார்க் குறைந்ததும் இல்லாமல் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டேன். (முதலில் ராஜி, அடுத்து அவள் தோழி) இனி ராஜியை ஜெயிக்கவே முடியாதுனு என் மனதிலே எண்ணம் வர ஆரம்பிச்சுது.

சுதா: ஒரு பெண் முதல் இடம் வர ஆரம்பித்ததும், அவளை முன் மாதிரியாக கொண்டு அவளின் தோழியும் நல்ல மார்க் எடுக்க ஆரம்பித்து விட்டாள் அவளின் உதவியோடு - என்ன சரிதானே?

கீர்த்தி: இப்படி இருக்கும்போது இனி கிளாஸ்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெஞ்ச்ல உள்ளவங்க தான் கிளாஸை பெருக்கி சுத்தமா வச்சுருக்கணும்னு ராஜி புதுசா ரூல்ஸ் கொண்டு வரா.

(நான் லீடரா இருக்கும்போது பெரும்பாலும் கிளாஸ் பொண்ணுங்க தான் சுத்தம் பண்ணுவாங்க, இல்லைனா ஸ்கூல் ஆயாம்மா பண்ணுவாங்க. ஆனா ராஜி இனி பசங்களும் பண்ணனும்னு கண்டிப்பா சொன்னத கேட்டு எல்லாருக்கும் அல்லு விட்ருச்சு.)

அன்னைக்கு வெள்ளிக்கிழமை எங்க பெஞ்ச் தான் கிளாஸை சுத்தம் பண்ணிட்டு போகணும். யாரு நம்மள பாத்துட்டா இருக்காங்கனு சொல்லிட்டு நான் ஸ்கூல் முடியவும் வீட்டுக்கு சிட்டா பறந்துட்டேன். அடுத்த நாள் சனி ஞாயிறு விடுமுறை. திங்கள் கிழமை காலையில ஒண்ணுமே தெரியாத மாறி ஸ்கூலுக்கு வந்தேன்.

சுதா: ராஜி எப்படி கண்டு பிடிச்சா நீ சுத்தம் செய்யாம சென்றதை? அதுக்கு என்ன தண்டனை கிடைத்தது?

கீர்த்தி: நான் ஸ்கூலுக்கு வரும்போது மொத்த கிளாசும் எதோ பதட்டத்தோட இருக்க, நான் மட்டும் சர்வ சாதாரணமா இருந்தேன்.

அப்பாடா நாம் போனது யாருக்கும் தெரியல. தப்பிச்சுட்டோம்னு துள்ளி குதிச்சுட்டு இருந்தேன்.

என்னங்கடா பொண்ணுங்க மாறி எல்லாரும் கிளாச பெருக்கி சுத்தம் பண்ணுணிங்களானு கேட்டு கிண்டல் பண்ணி சிரிச்சுட்டு இருந்தேன். அவனுங்க எதுவும் பேசாம ரொம்ப அமைதியா இருந்தாங்க.

அன்னைக்கு சாயங்காலம் ஸ்கூல் முடியுற டைமும் நெருங்கிச்சு.

அப்பாடா நம்மள யாரு என்ன பண்ண முடியும்னு வீட்டுக்கு கிளம்ப ரெடியா இருந்தேன்.

பேக் மாட்டிட்டு பெல் அடிக்கவும் வீட்டுக்கு கிளம்புன என்னைய, யாரோ பின்னாடி இருந்து வேகமா பிடிச்சு இழுக்க, நிக்க முடியாம நிலை தடுமாறி கீழே விழுந்துட்டேன்.

விழுந்த என் முன்னாடி ராஜி கையில் விளக்குமாறோட வந்து நின்னு, என்ன சார் அதுக்குள்ள அவ்ளோ அவசரமா எங்க கிளம்பிட்டிங்க. இங்க உங்களுக்குனு நிறைய வேலை இருக்குதேனு என் மூஞ்சிக்கு முன்னாடி கையில இருந்த துடைப்பத்தை வீசி கண்ணுல கோபமா ஒரு பார்வையோட நின்னுட்டு இருந்தா.

சுதா: ஆகா மாட்டி கிட்டாயா, இப்ப அவ முன்னால நீ துடைப்பத்தை வைச்சு கூட்டணும், அப்படி நீ பெருக்குறதை அவ மேற்பார்வை வேற பாக்க போறா. கூட வேற யாரையும் சேர்த்து கிட்டாளா.

கீர்த்தி: என்ன இது. என்ன வீட்டுக்கு போக விடுன்னு எந்திரிச்சேன். இவ்வளோ சீக்கிரம் வீட்டுக்கு போய் வீடு பெருக்கி கோலமா போட போற. அத இங்கேயே பண்ணலாமேனு சொல்லி அவ சிரிக்க, அவ கூட சேர்ந்து மொத்த கிளாசும் சிரிச்சுது.

எல்லாரையும் போக சொல்லிட்டு, என் பெஞ்சுல உள்ள பசங்க, அப்புறம் அவளோட நெருங்கிய தோழிகளை மட்டும் பக்கத்துல வச்சுருந்தா.

சுதா: உன் பென்ச் பசங்களே உன்னை மாட்டி விட்டுட்டாங்களா?

கீர்த்தி: உன்னை அன்னைக்கு கிளாஸ் ரூம பெருக்க சொன்னா, மத்த பசங்கலாம் சொல் பேச்சு கேட்டு பெருக்கிருக்காங்க. சார் மட்டும் அவசரமா வீட்டுக்கு ஓடிட்டிஙாகளானு கேட்டா.

இல்லையே நானும் கூட இருந்து பெருக்குனேன்னு சொல்ல,

ஹேய் என்கிட்டயே பொய் சொல்றியா. அன்னைக்கு நான் இவனுங்க பெருக்குறப்போ வந்து செக் பண்ணேன். நீ என் கிட்டயே ஏமாத்துறியா. சொல்லிட்டே என் இடது காதை பிடிச்சு திருக ஆரம்பிச்சா.

எனக்கு வலி தாங்க முடியல. ஐயோ காத விடு வலிக்குது, பிளீஸ் பிளீஸ்னு கெஞ்ச ஆரம்பிச்சேன்.

உனக்கு என்ன மனசுல மகாராஜானு நினைப்பா. எல்லாரும் வேலை செய்யும்போது நீ மட்டும் செய்யாம இருப்பியா.

இன்னும் டைட்டாக காதை பிடிச்சு திருகுனா.

நான் ஐயோ அப்படிலாம் இல்ல, எனக்கு இதெல்லாம் பண்ண தெரியாது பிளீஸ் வலிக்குது, காதை விடுனு அழாத குறையா கெஞ்சுனேன். (இன்னும் கொஞ்ச நேரம் போச்சுன்னா கண்டிப்பா அழுதுருப்பேன்)

கீர்த்தி: ஓ இதுக்கு தனியா ஸ்கூல்ல போய் வேற கத்துக்கணுமா.

ஒரு தடவை பண்ணுனா அப்படியே பழகிரும். போ போய் பெருக்குனு காதுல இருந்து கையை எடுத்தா.

காது அப்படியே சிவந்துருச்சு.

சரி எதாவது பண்ணிட்டு சீக்கிரம் இங்க இருந்து போவோம்னு குனிஞ்சு விளக்குமாறு எடுக்குறேன்.

அது பக்கத்துல அவளும் நிக்குறா.

அவ கால்ல விழுந்த மாறி அவ பிரண்ட்ஸ் லாம் கிண்டல் பண்ணி சிரிச்சாங்க. எனக்கு ஒரே அசிங்கமா போச்சு.

அப்போ ராஜி, டீச்சரோட சேர்ல கம்பீரமா உக்காந்துட்டு, ம்ம் இன்னும் என்ன யோசனை. ஒரு குப்பை இல்லாம சீக்கிரம் பெருக்கணும்னு ஆர்டர் போட்டா.

சுதா: ஆமா பெருக்குறது, பெரிய கம்ப சூத்திரம், உனக்கு பண்ண தெரியாதா, இப்ப கத்துக்கோ என்று உன்னை பெருக்க வைத்து விட்டாளா.

பொய் சொல்லி வசமா மாட்டி கிட்ட. காது திருகினது மட்டுமா அப்புறம் என்ன செஞ்சா? மத்த எல்லோரையும் விட்டு விட்டு உன்னை மட்டும் எல்லோர் முன்னால பெருக்க வைத்தாளா?

கீர்த்தி: வேற வழி இல்லாம நானும் பெருக்க ஆரம்பிச்சேன்.

அவள் தோழிகள் நல்லா பெருக்கு, நல்லா குனிஞ்சு பெருக்குனு என்னைய கிண்டல் பண்ண, ராஜியோ ம்ம் அங்க பாரு குப்பை இருக்கு, இங்க வந்து பெருக்கு சொல்லி என் வேலையை மேற்பார்வையிட்டும், எனக்கு கட்டளையிட்டும் சேர்ல உக்காந்திருந்தா.

சுதா: இதுல பெரிய அவமானம் என்னன்னா, நீ இப்படி அடங்கி பெருக்குறதை உன் பென்ச் நண்பர்கள் வேற பாத்து கிட்டே இருக்காங்க, அவங்க முன்னால உன் மானம் போயிருக்குமே.

கீர்த்தி: இன்னுமா அது போகாம இருக்கும்.

ஒரு வழியா நானும் கஷ்டபட்டு குனிஞ்சு நிமிர்ந்து இடுப்பு வலிக்க பெருக்கி முடிச்சதும் ராஜி போ போய் குப்பைய கொட்டிட்டு வா னு சொல்ல நானும் மறுப்பு சொல்லாம கீ குடுத்த பொம்மை மாறி போய் கொட்டிட்டு வந்தேன்.

சுதா: நீ குப்பை கொட்டியதை வேற யாரல்லாம் பார்த்தாங்க?

கீர்த்தி: திரும்ப கிளாசுக்குள்ள வரவும் ராஜி என் பிரெண்ட்சை பாத்து டேய் நீங்களும் தான் அன்னைக்கு பெருக்குனிங்க. ஆனா எவ்ளோ குப்பை இருந்துச்சு. ஆனா உங்க பிரெண்ட் தனி ஆளா ஒரு குப்பை இல்லாம எவ்ளோ நீட் டா பெருக்கி இருக்கான் பாருங்கனு சொல்லி பாராட்டவும் எல்லாரும் கை தட்ட ஆரம்பிச்சாங்க.

ஒரு பக்கம் கண்ணுல அவமானத்துல கண்ணீர் பொங்கி இருந்தாலும், இன்னொரு பக்கம் கண்ணுல ரொம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்ச பாராட்டுல ஆனந்த கண்ணீர் பொங்கி இருந்துச்சு. என்னையே அறியாம ஒரு பெருமை + சந்தோஷம் எனக்குள்ள வர ஆரம்பிச்சுது.

சுதா: ஆமாம் ஒரு தடவை பெண்ணால் பாராட்ட பட்டால், அதற்கு பிறகு அந்த பாராட்டுக்கு ஏங்கி அவள் சொல்லும் எதையும் செய்ய தையராகி விடுவதே இந்த ஆண்களின் குணம்.

கீர்த்தி: ராஜி: ம் பெருக்க தெரியாதுன்னு சொல்லி இவ்வளோ சூப்பரா பெருக்க எங்க கத்துகிட்ட.

ஹா ஹா வெரிகுட். இப்படி தான் செய்யுற வேலைய நீட் டா பண்ணனும்னு என் தோள்ல வேற தட்டி கொடுத்து பாராட்டுனா.

அப்போ ராஜி பிரெண்ட் ஒருத்தி (சுபா) ம்ம் பிறகென்ன தினமும் இவனையே கிளாஸ்ல பெருக்க சொல்லிரலாமேனு சொல்ல.

எனக்கு பயம் வந்துருச்சு.

ராஜியும் இதுவும் நல்ல ஐடியா தான். சொல் பேச்சு கேக்காமல் போனதுக்கு பனிஷ்மென்ட் குடுத்த மாறியும் ஆச்சு. இன்னும் நல்லா பெருக்க கத்துகிட்ட மாறியும் ஆச்சுன்னு சொல்லிட்டு என்னைய திரும்பி பாக்க எனக்கு தூக்கி வாரி போட்ருச்சு.

சுதா: இல்லை, இல்லை, தினமும் எல்லாம் என்னால பெருக்க முடியாது, வேணும்னா வேற வேலை ஏதும் குடுங்கண்ணு வெட்கத்தை விட்டு ராஜி கிட்ட கெஞ்ச வேண்டியதுதானே.

கீர்த்தி: பிளீஸ் பிளீஸ் இனி இப்படி பண்ண மாட்டேன் தினமும் பெருக்க சொல்லாதனு சொல்றப்போ இவ்வளோ நேரம் அடக்கி வச்சுருந்த கண்ணீர் பீச்சிகிட்டு வந்துருச்சு.

என் கண்ணீர பாத்து மனசு இரங்குன ராஜி. சரி சரி இனிமேல் ஒழுங்கா சொல்றத கேக்கணும்.

ஆனா நீ பண்ண தப்புக்கு தண்டனை இருக்கு. அப்போதான் இனி யாரும் அந்த தப்பை பண்ண யோசிப்பாங்கனு சொல்லி என் பிரண்ட்சை பாக்க அவங்க தலை குனிஞ்சுட்டாங்க.

சுதா: ஒரு பொண்ணு முன்னால பொட்ட பிள்ளை மாதிரி கண்ணுல தண்ணி வர அழுது கிட்டு கெஞ்சி கிட்டு. இருந்து இருக்க, சூப்பர்தான்.

கீர்த்தி: ராஜி என்ன பணிஷ்மென்ட் சீக்கிரம் சொல்லுனு அவ பிரெண்ட்ஸ் ரொம்ப ஆர்வமா கேக்க, ராஜியோ இந்த ஒரு வாரத்துக்கு நம்ம கிளாஸ் ரூமை இவன்தான் பெருக்கணும்.

அது மட்டுமில்லாம நாளைக்கு காலையில சீக்கிரம் வந்து பிரேயர் ஆரம்பிக்குறதுக்குள்ள நம்ம ஸ்கூல் கேம்பசும் நீ தான் குப்பை இல்லாம பெருக்கி கிளீன் பண்ணனும்..

ராஜி சொல்ல எல்லாரும் ஹேய் சூப்பர் இதான் சூப்பர் தண்டனைனு கத்துனாங்க.

சுதா: இப்படித்தான் கெஞ்சனும் கொஞ்சம் பார்த்து செய்ங்க என்று. எதை இத்தனை நாள் செய்ய வெட்க பட்டாயோ அதை நானே செய்றேன்னு சொல்ல வைச்சுட்டா அந்த ராஜி.

கீர்த்தி: ஆனா எனக்கு தான் தூக்கி வாரி போட்டுட்டு. வேற எதாவது கேக்கலாம்னு நினைச்சாலும் வாயை திறக்க பயமா இருந்துச்சு.

இதை மட்டும் நீ சரியா பண்ணலை அப்புறம் வேற ராஜியை பாப்பனு மிரட்டுற தொனியில ராஜி சொல்ல, நான் பண்ணிடுறேனு வேகமா தலையை ஆட்டுனேன்.

சரி சுபா நாளைக்கு நீ தான் இவனை வாட்ச் பண்ணனும் ஏதாவது தப்பு பண்ணா என்கிட்ட சொல்லு சரியா னு சொல்லிட்டு சரி நீ இப்போ கண்ண தொடச்சிட்டு கிளம்புனு சொன்னா.

ஆனா நாளைக்கு கேம்பஸை பெருக்கணும், அதுவும் சுபா வோட மேற்பார்வையில பெருக்கனும்னு நினைக்கும்போது எனக்கு இன்னும் கண்ணீரும், பயமும் வந்துச்சு. அப்படியே வீட்டுக்கு போனேன்..

சுதா: ஸ்கூல் கேம்பஸ் பெருக்குறது கொஞ்சம் அதிகமா இல்லை. தினமும் கிளாசை பெருக்கணும்னு சொன்னது ஓகே.

கீர்த்தி: இப்போ ஓவரா தான் தெரியும். ஆனா ஏன் அப்படி பண்ண சொன்னா னு அடுத்த பார்ட்ல புரியும் உங்களுக்கு.

சுதாஇத்தனை நாள் அடங்கி இருந்த அந்த தோழி (சுபா) இனிமே புது சப்போர்ட் கிடைத்த உடன், அவளுடன் சேர்ந்து கொண்டு உன்னை அதிகாரம் செய்ய போகிறாள் விரைவில் என்று தோணுகிறது.

--- ராஜியின் ஆட்டம் தோழிகளுடன் சேர்ந்து தொடரும் ----

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக