பிரபாகரின்
இளம் வயது நிகழ்வு
01
நித்யா சொன்னதை கேட்டு பிரபாகர்
ஞாபகப்படுத்தி கூறிய நிகழ்வு - அவன் சொல்வதாக:
பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு
நடக்கும் விதமாக, எனக்கும் முதல் முதலாக பெண்கள் உடை போடும் வாய்ப்பு எனது அம்மா மூலமே
நடந்தது. மகள் பிறக்காத அம்மாக்கள் வழக்கமாக செய்யும் வேடிக்கை தான் தங்கள்
மகனுக்கு பொண்ணுங்க டிரஸ் போட்டு அழகு பார்ப்பது. நான் ஒரே மகனான காரணத்தால், என் அம்மாவும்
எனது ஐந்து வயது வரை பொண்ணுங்க ட்ரெஸ் போட்டு அழகு பார்த்தார்கள். காதில் தோடு கூட
போட்டு விடுவார்கள். அதனால் தான் இன்னும் என் காது ஓட்டை அடையாமல் அப்படியே
உள்ளது. பிறகு ஒன்றாம் வகுப்பு செல்ல தொடங்கியதும்தான் அந்த பழக்கம் நின்றது.
வழக்கமாக பலருக்கு அப்படி பெண் உடை
அணியும் வாய்ப்பு அத்துடன் நின்று விடும். அவர்களும் அதற்கு பிறகு ஆண்பிள்ளையாக
வாழ ஆரம்பித்து விடுவார்கள். மீண்டும் ஏதோ ஒரு நேரத்தில் சற்று விபரம் புரியும்
வயதில் பெண்களுடைய அணிய வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்களுக்கு அந்த ஆசை மீண்டும் துளிர் விட
ஆரம்பிக்கும். எனக்கும் அப்படிதான் ஒரு நிகழ்வு நடந்தது.
அப்போது எனக்கு பதினாறு வயது. பத்தாவது
படித்து முடித்து விட்டு பிளஸ் ஒன் சேர்ந்து விட்டேன். அந்த வருடம் நவராத்திரி
வந்தது. அம்மாவின் கூட படித்த தோழி ஒருவர் பக்கத்துக்கு ஊரில் இருந்தார். அவர்கள்
எனது அம்மாவை தனது வீட்டுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்கள் இருந்தது ஒரு அடுக்கு
மாடி குடியிருப்பு, Gated
Community. அந்த வருடம் அவர்கள் காலனியில்
நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
அதில் ஒன்று பெண் குழந்தைகளுக்கான கண்ணன், ராதை நாடகம். அதில்
கண்ணனாக ஒரு பெண் தான் நடிப்பதாக இருந்தது. கண்ணனாக நடிக்க இருந்த பெண்ணுக்கு மாத
தீட்டு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது. கலை நிகழ்ச்சி
நடத்தும் மாமியும் (எனது அம்மாவின் தோழி) நாடகத்தில் நடிக்க இருந்த பெண்களும் என்ன
செய்வது இந்த கடைசி நேரத்தில் என்று கவலையுடன் கூடி பேசி
கொண்டு இருந்தனர். அந்த நடக்க குழு வயது,
உயரத்துக்கு ஏற்ற மாதிரி வேறு பெண்கள் யாரும்
இல்லை அங்கே. அப்போது அங்கே இருந்த என் அம்மா என் பையனுக்கு வேண்டுமானால் பெண் உடை
உடுத்தி விட்டு கண்ணனாக நடிக்க வைத்து கொள்ளுங்கள் என்கிறார்.
நான் இயல்பாகவே சற்று குள்ளம்.
உடம்பில் முடி ஏதும் வளராமல் மொழு மொழு வென்று பொண்ணுங்களை போலவே இருப்பேன் அந்த
வயதிலும். எனவே எனக்கு பெண்கள் வேடம் போடுவதில் ஏதும் பிரச்சினை இருக்காது என்ற
காரணத்தால் அந்த மாமியும் உடனே ஒத்து கொண்டார்கள். என் அம்மாவுக்கும் நன்றி
சொன்னார்கள்.
ஆனால் அந்த மாமி சொன்னார்கள், கண்ணன்
பாத்திரத்தில் அதிகம் வசனம் உண்டு,
நாடகத்தில் முக்கிய பாத்திரம் என்பதால் நீண்ட
நேரம் வரும், புதிதாக ஒருத்தனை நடிக்க வைக்க முடியாது. வேண்டுமானால் ஒன்று
செய்யலாம். ராதையாக நடிக்கும் பெண் ஏற்கனவே பல முறை ஒத்திகை பார்த்து இருக்கிறாள்.
அவளுக்கு கண்ணன் பாத்திரமும் அத்துப்படி. அவள் கண்ணனாக நடிக்கட்டும். அந்த ராதையின்
பாத்திரத்தில் அவளின் தோழியாக இருக்கும் கோபிகை பெண் நடிக்கட்டும். கோபிகை பெண்
வேடம் அதிகம் நேரம் வராது, சில சிறிய வசனங்கள் மட்டுமே. அதில் உன் பையன் நடிக்கட்டும் என்று
சொல்ல, என்
அம்மாவும் சரி என்று சொல்லி விட்டார்கள்.
நான் என்னம்மா என்னை போய் பொம்பிளை
வேடம் போட சொல்கிறீர்களே என்று வருத்தமாய் கேட்டேன். அதற்கு அம்மா இந்த ஊரில்
உன்னை யாருக்கும் தெரியாது, அதுவும் சிறிய ரோல் தான். நீ செய்யும் உதவி என் தோழிக்கு மிகவும்
மகிழ்ச்சியை கொடுக்கும். சும்மா பண்ணுடா என்று சொல்லி என்னை ஒத்து கொள்ள
வைத்தார்கள். நானும் சரி என்று சொல்லி விட்டேன் வேறு வழியின்றி.
நான் நவராத்திரி என்பதால் அன்று நாலு
முழ வேட்டி அணிந்து இருந்தேன். பதினாறு வயது என்றாலும் அரும்பு மீசை கூட இன்னும்
வரவில்லை. தினமும் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்ததில் எனக்கும் சிறிய மார்பு
வளர்ச்சி உண்டு. எனது வேட்டியை கழட்டி, கண்ணனாக நடிக்கும் பெண்ணுக்கு கொடுக்க
சொன்னார்கள்.
பதினாறு வயது ஆண் பையன் நான், என் வேட்டியை
கழட்டி கொடுத்து விட்டு அங்கே இருந்த பெண்கள் முன்பு நின்று கொண்டு இருந்தேன். வேட்டி
அணியும்போது நான் எப்போதும் பாக்சர் ஜட்டியுடன், கூடவே ஒரு சிறிய தொடை வரையிலான ஷார்ட்ஸ்
ஒன்றும் அணிவது வழக்கம். அதனால் நான் அதிகம் யோசிக்காமல் வேட்டியை கழட்டி கொடுத்து
விட்டு, நின்று
கொண்டு இருக்கிறேன்.
அந்த மாமி எனக்கு அலங்காரம் செய்ய
ஏதுவாக மேலே போட்டு இருந்த சட்டை,
பனியனையும் கழட்ட சொன்னார்கள். எனவே அதையும்
கழட்டி விட்டு வெறும் ஷார்ட்ஸுடன் நிற்க வைத்தார்கள். அங்கே நான்
மட்டுந்தான் ஆம்பிளை பையன். எனக்கும் முதல் முதலாக பொண்ணுங்க மாதிரி நடிக்க ஒத்து
கொண்டு, புதிதாக
இதுவரை அறியாத பொண்ணுங்க முன்னால,
அரை நிர்வாணமாக குட்டி ஷார்ட்ஸுடன் நிற்பது, எனக்கு
பொண்ணுங்க மாதிரி வெட்கத்தை கொடுத்தது.
அந்த பெண்கள் என்னை
பார்த்து தங்கள் வாயை மூடி சிரித்து கேலி செய்து பேசி கொண்டு இருந்தனர். அங்கே இருந்த
பெண்களுக்கு எனது ஷார்ட்ஸ்
ஏதோ அவர்கள் தம்பி போடும் ட்ராயர் போன்று
தோன்றி இருக்கிறது. அந்த மாமி அவர்களை அதட்டினார்கள்.
சிறிது நேரத்தில் கண்ணனாக நடிக்க
இருந்த பெண், என் வேட்டியை அணிந்து அவளின் மேக்கப் எல்லாம் முடிந்தவுடன், அவள் அணிந்த
உடையை ராதையாக நடிக்க இருந்த பெண்ணுக்கு கொடுத்தாள். ராதையின் அலங்காரம் முடிந்த
பிறகு, கோபிகையாக
நடிக்க இருந்த பெண்ணுக்கு ராதையின் அலங்காரம் நடந்தது. கடைசியில் கிட்ட தட்ட ஒரு
மணி நேரத்துக்கு பிறகு எனக்கு கோபிகை அணியும் பாவாடை, தாவணி அணிய
கிடைத்தது.
அந்த மாமி எனக்கு அழகான கோபிகை பெண்ணாக
அலங்காரம் செய்து விட்டார்கள் - பட்டு பாவாடை, தாவணி, தோடு, சவுரி முடி, பொட்டு, வாயில் லிப்ஸ்டிக், கையில்
வளையல்கள், கொலுசு, கழுத்தில் நகைகள் என்று பார்க்க அழகான பெண்ணாக மாறி இருந்தேன்.
அன்று என் அம்மா மற்றும் அவர்களின்
தோழி,
அந்த மாமியின் விருப்பத்துக்கு இணங்க பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் உடை
உடுத்தி,
பெண்ணாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் அதை அணிந்து கொண்டு பெண் வேடமிட்டு, அன்று
கோபிகையாக நடித்தேன்.
கோபிகை பெண்ணாக எனது வசனம், ராதையாக
நடிக்கும் பெண்ணை “அக்கா” என்று கூப்பிட்டு,
கண்ணன், உங்கள் மன்னன் வந்து விட்டார், காத்து
இருக்கிறார், விரைவில் செல்லுங்கள் என்று சொல்வதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக