திருமணம் பற்றி பேசி முடித்தனர். திருமணத்தை விமர்சையாக நடத்துவதில் நான்கு பேருக்குமே விருப்பம் இல்லை. யாரையும் அழைக்காமல், மாலதி, காயத்திரி, ஷ்ரேயா, அவள் தோழி ஆஷா, வினோத், அவன் தோழன் விவேக் ஆகிய ஆறு பேர் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக முடிவு செய்யப்பட்டது. கோவாவில் உள்ள தீவு ஒன்றின் ரிசார்ட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஆஷாவிடம் யார் மாப்பிள்ளை என்று கூறாமல் சர்ப்பிரைசாக வைத்திருந்தாள் ஷ்ரேயா.
ஆஷா:
உங்களுக்கு கல்யாணம்னு என்னால நம்பவே முடியலை அக்கா! நீங்க எப்போ பேசினாலும்
பெண்கள் கல்யாணம் செய்து அடிமை வாழ்க்கை வாழறது வேஸ்ட்னு சொல்லுவேங்க. இப்போ நீங்களே
ஒருத்தரை கல்யாணம் செஞ்சு ஆணுக்கு அடிமையா வாழ போறேங்க. உங்களதான் நான் பைக் ரேஸ்
ல மட்டும் இல்லாமல் வாழ்கையிலும் ரோல் மாடலா வெச்சிருந்தேன். இப்போ நீங்களே இப்படி
பண்ணீட்டேங்க போங்க.
ஷ்ரேயாவும்,
மாலதியும் சிரித்தனர்.
ஆஷா:
நீங்களே சொல்லுங்க ஆண்டி. பைக் ரேஸிங் ல ஒரு பொண்ணு இந்த அளவுக்கு முன்னேறி வர்றது
எவ்வளவு சிரமம்! இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சா கூட பரவாயில்லை.
அட்லீஸ்ட் நேஷனல் லெவல்ல நம்பர் 1 ஆக முடியும்.
மாலதி:
அதனால என்ன. கல்யாணம் செஞ்சுட்டு பைக் ரேஸ் Continue செஞ்சுட்டா போச்சு.
ஆஷா:
கல்யாணம் செஞ்சா வீட்டு வேலையை புருஷனா பண்ணுவான்? எல்லாம் ஷ்ரேயா
அக்காதான பண்ணனும்? அக்கா மாதிரி சூப்பர் பிகரை கல்யாணம் முடிஞ்சு அடுத்த 10 மாசத்துல
Pregnant ஆக்கிடுவான்.
ஷ்ரேயா:
என்ன ஆஷா பண்ணறது. குடும்பம் குழந்தைனு வந்துட்டா பைக் ஓட்டறத மறந்துட
வேண்டியதுதான்.
ஆஷா கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து படிக்கும் பெண். ஷ்ரேயாவை
பார்த்து, அவளையே ரோல் மாடலாக எடுத்து, அவளை போலவே வாழத் தொடங்கி
விட்டாள். இப்போது ஷ்ரேயா சராசரி பெண்ணை போல திருமணம் செய்து வாழப் போகிறாள் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
ஷ்ரேயா: என் கூட வா ஆஷா. நாம கல்யாணத்துக்கு புடவை எடுத்துட்டு
வந்துடலாம்.
ஆஷா: சரி
அக்கா. நான் வரேன். நீங்க முதல் முறையா பொம்பள டிரஸ் போடறத உங்க கல்யாணத்துல தான்
பார்க்க போறேன்.
இருவரும்
புடவை எடுக்க சென்றனர்.
ஆஷா:
அக்கா! இந்த கலர் புடவை உங்களுக்கு சுத்தமா மேட்ச் ஆகலை.
ஷ்ரேயா:
என்னம்மா பண்ணறது. இந்த கலர் தான் மாப்பிள்ளைக்கு பிடிச்சிருக்கு. அவருக்கு
பொருத்தமா தானே வாங்கனும்.
ஆஷா:
மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரிதான் எடுக்கனும்னா அவரயே கட்டிக்க சொல்லுங்க.
ஆஷாவிற்கு
கோபமாக வந்தது. ஷ்ரேயா சிரிப்பை அடக்கிக் கொண்டாள். இருவரும் வீட்டிற்கு கிளம்பி
வந்தனர்.
ஷ்ரேயா:
நீ இன்னுமா கோபமா இருக்க ஆஷா? உனக்கு பிடிக்கலன்னா நான் அந்த புடவையை கட்ட மாட்டேன். நான் வேற
ஏதாவது வாங்கிக்கிறேன். போதுமா?
ஆஷாவின்
முகம் இப்போதுதான் மலர்ந்தது.
திருமண
நாள் நெருங்க ஆரம்பித்தது. திருமணத்திற்கு முந்தைய நாள்
இரவு தான் ஆஷா வந்தடைந்தாள். அவளுக்கு ஒதுக்கிய அறையில் தங்கினாள். காலையில்
எழுந்து முதல் வேலையாக மணப்பெண்னை பார்க்க சென்றாள்.
ஆஷா:
என்ன பொண்ணும் அம்மாவும் இன்னும் ரெடியாகம இருக்கேங்க? இன்னும் ரெண்டு
பேரும் நைட் பேண்ட், டீ-சர்ட்டில் இருந்தா எப்படி? மாப்பிள்ளை வீட்டுகாரங்க பார்த்தால் என்ன
நினைப்பாங்க..
ஆஷா ஒரு
பட்டு புடவை கட்டி ரெடியாக இருந்தாள்.
ஷ்ரேயா:
ரெடியாக பத்தே நிமிடம் போதும். நாம மாப்பிள்ளை ரெடியாச்சானு பார்த்துட்டு வரலாம்.
ஆஷா ஆவலுடன்
ஷ்ரேயாவை பின்தொடர்ந்தாள். ஷ்ரேயா ஒரு அறையின் கதவை தட்டினாள். வினோத் குளித்து
முடித்து துண்டை கட்டிக் கொண்டு வந்து கதவை திறந்தான்.
ஆஷா:
இவனா? இவன் தான பைக்ரேஸ்ல நம்ம கிட்ட தோத்துட்டு என் கிட்ட செமத்தையா உதை
வாங்கினான்? இவன் இங்க என்ன பண்ணறான்?
ஆஷா
மணமகன் அறையில் வினோத்தை பார்த்த அதிர்ச்சியில் அவனை சிறிதும் மதிக்காமல் பேசினாள்.
ஷ்ரேயா: இன்னுமா ரெடியாகல?
வினோத்:
அஞ்சு நிமிடம். ரெடி ஆயுடறேன்.
அவன்
உள்ளே சென்று தயாரானான்.
ஷ்ரேயா:
நாம 5 நிமிஷம் கழிச்சு வரலாம்.
ஆஷா:
இவருதான் மாப்பிள்ளையா அக்கா? உங்களுக்கே தெரியுமே. ஒரு தடவை நம்ம Hostel க்கு வந்த பைக் எடுத்துட்டு போக முயற்சி செய்யும் போது. பொண்ணுங்க
நாங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து அடி அடின்னு அடிச்சுட்டோம். முக்கியமா காலுக்கு
நடுவுல மாறி மாறி காலால உதைச்சதுல முழுசா நசுங்கி இருக்கும். ஒரு வேளை நசுங்கி
போனதால பழிவாங்கறதுக்கு உங்கள கல்யாணம் பண்ணறாங்களோ?
ஷ்ரேயா: நீ அவனுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கனும்னு
அவசியம் இல்லை. உன்கிட்ட அதுக்கப்புறம் நடந்ததை எதுவும் சொல்லல.
ஆஷாவிடம்
ஆப்பரேஷன் போன்ற நிகழ்வுகளை சொல்லாமல், காதலித்தது போன்ற நிகழ்வுகளை கூறினாள்.
திரும்பவும் வினோத் அறை முன் சென்று கதவை தட்டினார்கள்.
வினோத்:
இரண்டே நிமிஷம்....
---------------------------------------------------------
அவர்கள்
காத்திருந்த சமயத்தில் விவேக் ஊரிலிருந்து முன் இரவு அங்கு வந்து காலையில் தயாராகி
அங்கு வந்து சேர்ந்தான். ஸ்டைலாக ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட் அணிந்திருந்தான்.
அவனுக்கு ஷ்ரேயா மற்றும் ஆஷாவை கண்டு அதிர்ச்சியாக இருந்தது.
இருவரும் யார் என்று அடையாளம் கண்டு கொண்டான்.
"இவன் வினோத்தோட நண்பன் தானே? அன்னைக்கு பயந்து ஓடிட்டானே?", என்று ஷ்ரேயாவின் காதில் கிசுகிசுத்தாள்.
ஷ்ரேயா: Welcome விவேக்! வினோத் ரெடி
ஆயுட்டு இருக்கான். 5
minutes ல வந்துடுவான். By the way இது என் Friend,
ஆஷா. ஆஷா,
இது
விவேக். வினோத் Friend.
ஆஷா
புடவையில் மிகவும் அழகாக இருந்தாள். அவள் தான் மணப் பெண்ணோ
என்ற யோசனையுடன் அவளை பார்த்தான்.
விவேக்: நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்ணறேங்க?
ஆஷா:
இவங்க மணப்பெண், நான் அவங்க தோழி.
விவேக்கிற்கு
அதிர்ச்சியாக இருந்தது. தன் நண்பன் இந்த அடங்கா பிடாரி களிடமா மாட்டிக் கொண்டான் என்று ஆச்சரியமாக பார்க்கும்போது கதவை
திறந்து கொண்டு வினோத் வெளியே வந்தான். முதலில் விவேக், வந்தது ஒரு பெண்
என்றே நினைத்தான். அவ்வளவு அழகாக புடவை கட்டி அலங்காரம் செய்து, பார்க்க
ஒரு பெண் போலவே இருந்தான். குரலை கேட்டு தான் தன் நண்பன் புடவை கட்டியிருக்கிறான்
என்று தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக