செவ்வாய், 11 ஏப்ரல், 2023

முகமறியா நண்பர் கருத்துகள் பகுதியில் எழுதி வரும் கதை – P10


அமெரிக்காவில் நடக்கும் பகுதி 01

ஒரு மாதம் இந்தியாவில் தங்கினர். சிவகாமி, தன் மருமகனுக்கு நன்கு சமைக்க வீட்டு வேலைகளை செய்ய கற்று தந்தாள். அவர்கள் மூவரும் அமெரிக்கா சென்றனர். பல புடவைகளை எடுத்து சென்ற சிவகாமி, அத்தனை புடவைகளையும் அவன் மருமகனுக்கே அன்பளிப்பாக தந்தாள்.

சிவகாமிக்கு ஜீன்ஸ் டீசர்ட் போடுவது பழகிவிட்டது. திரும்பவும் புடவை கட்டிக்கொள்ள அவளுக்கு ஆர்வம் இல்லை. வினோத் காலையில் சமைத்து விட்டு அலுவலகம் சென்றிருந்தான்.

சிவகாமி அன்று மாலை வினோத்தின் அம்மாவிற்கு வீடியோ கால் செய்தாள்.

சிவகாமி: என்ன சம்மந்தியம்மா... எப்படி இருக்கேங்க.

கலையரசி: நல்லாயிருக்கேன்... ஆமாம்... என்ன டிரஸ் போட்டிருக்க? புடவை மாதிரி தெரியல?

சிவகாமி: நான் பொண்ணு, மாப்பிள்ள கூட அமெரிக்கா வந்துட்டேன் சம்மந்தி அம்மா, உங்க பையன் எனக்கு ஜீன்ஸ் டீசர்ட் வாங்கி கொடுத்தான். அதை தான் போட்டிருக்கேன். இப்போ எல்லாம் புடவை கட்டறதே இல்ல. போட்டோ அனுப்பிருக்கேன் பாருங்க.

தன் மருமகளையே சுடிதார் கூட போட விட்டதில்லை கலையரசி. ஆனால் இப்போது மருமகளின் அம்மாவே ஜீன்ஸ் அணிந்திருக்கிறாள். தன் மகன் எப்படி மாமியாரை அடக்காமல் அவளுக்கு மாடர்ன் ஆன துணிகளை வாங்கி கொடுக்கிறான் என்று வியந்தாள்.

சிவகாமி அனுப்பிய போட்டோவில் லதாவும், அவள் அம்மா சிவகாமியும் ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து ஒய்யாரமாக இருந்தனார். இதை கொஞ்சமும் கலையரசியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கலையரசி: என்ன தைரியம் டி உங்க ரெண்டுபேருக்கும்... கைல கிடைச்சா உன் மகள் கை கால ஒடச்சுடுவேன்.

சிவகாமி: நீ அமெரிக்கா வந்தா தான் எங்கள பிடிக்க முடியும்.

கலையரசி: நீ என்னடி இந்த வயசுல பேண்ட்ட போட்டுக்கிட்டு மினுக்கி கிட்டு இருக்க?

சிவகாமி: ஏன்? உன்னால போடமுடியலனு பொறாமையா?

கலையரசி: இருடி... என் பையன் கிட்ட பேசி உன்ன என்ன பண்ணறேன்னு பாரு.

சிவகாமி: நீ முதல்ல உன் பையன் எப்படி எங்ககிட்ட மரியாதையா நடந்துக்கு வான்னு கேளு. தினமும் உன் பையன் போட்ட காபியை தான் நான் குடிச்சுட்டு மத்த வேலையை பார்பேன். உன் பையன் தான் தினமும் சமைக்கறான். சும்மா சொல்லகூடாது. ரொம்ப அருமையா சமைக்கறான்.

இதை கேட்டதும் கலையரசிக்கு அதிர்ச்சியாக இருந்தது. நீ நம்பமாட்டேனு எனக்கு தெரியும். உனக்கு லைவ் ல காட்டறேன்.

போன் கேமிராவை ஆன் செய்து விட்டு கொஞ்சம் தொலைவில் வைத்தாள். தன் மகன் அலுவலக பணிகள் முடித்து வீடு திரும்பினான். சிவகாமி கால் மேல் கால் போட்டு சோபாவில் அமர்திருந்தாள்.

கலையரசி என்ன நடக்க போகிறது என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மகன் நேராக வந்து அவன் மாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.

வினோத்: காபி போட்டு கொண்டு வரட்டுமா அத்த?

சிவகாமி: முதலில் துணி மாத்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு அப்புறம் காபி போட்டுகொடு போதும். இன்னைக்கு வெள்ளிகிழமை...

வினோத்: ஆமாங்க அத்த. நான் பாத்துகிறேன்.

வினோத் உள்ளே சென்றதும் சிவகாமி கலையரசியிடம் பேசினாள்.

சிவகாமி: உன் பையன் ரொம்ப பொறுப்பா நடத்துக்கிறான்.

கலையரசி: ஏன் டி. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா மாப்பிள்ளைய கால்ல விழ வைப்ப?

சிவகாமி சிரித்தாள்.

சிவகாமி: நீ என் மகள எத்தனை தடவை உன் கால்ல விழ வெச்சிருப்ப?

கலையரசி: அதுவும் இதுவும் ஒன்னா டி? உன் மகள் ஒரு பொட்டச்சி.. யாரு கால்ல வேணும்னாலும் விழலாம். என் மகன் அப்படியா டி. அவன் ஆம்பள. அவன எப்படி உன் காலல விழ வைக்கலாம்?

சிவகாமி: எனக்கு யாரையும் கால்ல விழ வைக்கனும் னு ஆசை இல்ல. அவனா வந்து விழுகறான்.

கலையரசி: அவனே விழுந்தாலும் உனக்கு எங்க போச்சு அறிவு. நியாவது வேண்டாம்னு சொல்லி நகர்ந்திருக்கனும். ஆம்பள மாதிரி பேண்ட் சட்டைய போட்டுட்டு உட்கார்ந்திருக்க? பொட்டச்சியா புடவை கட்டிட்டு இருந்தா அவனுக்கே உன் கால்ல விழனும்னு எண்ணம் வராது.

சிவகாமி: பொட்டச்சியா புடவை கட்டிகலாம்னு பார்த்தா உன் பையனே எல்லா புடவையையும் வெச்சுகிட்டான். என்ன பண்ணறது சொல்லு.

கலையரசி: அவன் எதுக்குடி உன் புடவையை வெச்சுக்கனும்? என்ன கிண்டலா?

சிவகாமி: உன் பையனுக்குதான் புடவை கட்டிகனும்னு ஆசை. மாப்பிள்ளை கேட்கும் போது கொடுக்காம மறுக்க முடியுமா..

கலையரசி: அவன் எப்படி டி புடவை கட்டுவான்? அவன் ஆம்பள டி.

சிவகாமி: நான் இல்லைனு சொல்லலயே! நம்பலேன்னா நீயே உன் கண்ணால பாரு.

கலையரசியின் கண்களை அவளாளேயே நம்ப முடியவில்லை. ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து அலுவலகத்திலிருந்து வந்த அவள் மகன் அறைக்குள் சென்று திரும்பும் போது காட்டன் புடவை கட்டிக்கொண்டு கையில் துடப்ப கட்டையுடன் வந்து வீட்டை பெருக்க ஆரம்பித்துவிட்டான். கூட்டி முடித்ததும் அறைக்குள் சென்றான்.

சிவகாமி: பாத்தயா? நான் சொல்லும் போது நீ நம்பலயே...இப்போ நம்பரயா?

கலையரசிக்கு அதிர்ச்சியில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

கலையரசி: என்ன நடக்குது அங்க! அவன நீ தான் ஏதோ மந்திரம் போட்டு மாத்திருக்க.

சிவகாமி சிரித்தாள்.

சிவகாமி: இதுல மந்திரம் போடத்துக்கு என்ன இருக்கு? அவனே தான் வற்புருத்தலும் இல்லாம செய்யறான்.

வினோத் குளித்து விட்டு ஒரு சிகப்பு பட்டுபுடவை கட்டிக் கொண்டு சிவகாமிக்கு காபி டம்ளரை கொடுத்துவிட்டு சென்றான்.

சிவகாமி: என் மாப்பிள்ளை போடற காபி தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் குடிச்சதுலயே உன் பையன் போட்டுகொடுக்கற காப்பிதான் பெஸ்ட்.

கலையரசி, தன் மகன் போட்டுகொடுத்த காப்பியை அவன் மாமியார் கால் மேல் கால் போடு உட்கார்த்து குடிப்பதை ஆத்திரமாக பார்த்தாள்.

சிவகாமி: நானும் தான் ஒரு பொண்ண பெத்து என்ன பிரயோஜனம்... ஒரு நாள் கூட ஒழுங்கா சாமி கும்பிட்டு விளக்கேத்தினதில்லை. ஆனால் உன் மகனை பார். எவ்வளவு பொறுப்பா வெள்ளிகிழமை விளக்கு ஏத்தறான்....

தன் மகன் விளக்கேகற்றும் காட்சியை கண்டதும் கலையரசிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

கலையரசி: எங்க உன் பொண்ணு லதா? அவ என்ன பண்ணிட்டிருக்கா?

சிவகாமி: அவளுக்கு நூறு ஆயுசு. இப்போதான் அவள் ஆபீஸ்ல இருந்து வராள். பைக் சத்தம் கேட்குது. நீயே பாரு உன் மருமகள.

சிவகாமி போன் கேமிராவை வாசலை நோக்கி காட்ட, அங்கு ஒரு பெரிய பைக் பெரும் சத்ததுடன் வந்து நின்றது. பைக்கை ஓட்டிய நபர் தலை கவசத்தை கழற்றியதும் கூந்தல் விடுபட்டது. அந்த பெரிய பைக்கை ஓட்டி வந்தது ஒரு பெண் என்று உணர்ந்தாள்.

கலையரசி: உன் மகளா அது....?!! அவளா பைக் ஓட்டறது?!!

சிவகாமி: ஆமாம் சம்மந்தியம்மா. என் மகள்தான். பைக் மாப்பிள்ளை வாங்கி கொடுத்த பைக்தான்.

லதா இப்போது ஐந்து மாத கர்ப்பிணி. லதா ஒரு கருப்பு டீசர்ட், நீல நிற ஜீன்ஸ் மற்றும் நீளமான பூட்ஸ் அணிந்திருந்ததை கலையரசி கவனித்தான். அவள் பைக்கை விட்டு இறங்கியதும் சிவகாமி உதவிக்கு சென்றாள்.

சிவகாமி: நான பைக்கை பார்க் பண்ணறேன் லதா... நீ எதுக்கு சிரமபடற.. நான் உன் அத்தை கூட பேசிட்டு இருந்தேன் அதுனாலதான் சட்டுனு வர முடியல. நீ பேசிட்டு இரு. நான் பைக்கை நிறுத்திட்டு வரேன்.

லதா: சரிமா... இன்னும் லைன்ல இருக்காங்களா?

சிவகாமி: ஆமாம்மா. போன டேபிள் மேல வெச்சிருக்கேன். ரொம்ப நேரமா வீடியோ கால் ஓடிட்டு இருக்கு.

லதா: வீடியோ கால்லா? அய்யய்யோ!! அப்போ அவங்க என்னை இந்த கோலத்துல பார்த்துட்டாங்களா?

சிவகாமி: உன்ன மட்டும் இல்ல. என்னையும், அப்புறம் உன் புருஷனையும் தான் பார்த்தாங்க. நீ தயங்காம உன் மனசுக்கு தோணறத மட்டும் தைரியமா பேசு.

போன் வீடியோ கால் மூலமாக சிறிது தூரத்தில் நின்ற பைக்கிள் சிவகாமி ஏறி உட்கார்ந்து சிவகாமி ஓட்டி செல்வதை பார்த்து கலையரசி வாயடைத்து போனாள்.

லதா, அடி வயற்றில் கை வைத்துக் கொண்டு மெல்ல நடத்து வந்து போனை எடுத்தாள்.

லதா: பேசி ரொம்ப நாள் ஆச்சு ... நல்ல இருக்கேங்களா அத்த? நான் இப்போ அஞ்சு மாசம் கர்ப்பமா இருப்பேன். வினோத் சொல்லியிருப்பான்னு நினைகிறேன்.

லதா வாய் தவறி கணவனை மாமியாரிடமே பெயர் சொல்லி அழைத்துவிட்டாள்.

கலையரசி: எவ்வளவு திமிர் இருந்தா புருஷனயே பெயர சொல்லி கூப்பிடுவ? உனக்கு எங்க இருந்து டி இவ்வளவு திமிர் வந்தது? என்ன டிரஸ் டி போட்டிருக்க? உன் ஆத்தாகாரியும் நீயும் என்ன அடக்க ஒடுக்கமா புடவை கட்டாம என்ன டி பேண்ட் சட்டைய போட்டு கிட்டு அடக்கம் இல்லாம சுத்தி கட்டு இருக்கேங்க ?

லதாவுக்கு என்ன இருந்தாலும் மாமியார் என்றால் கொஞ்சம் பயம்தான். அவளது மாமியாருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. திருமணத்திற்கு பிறகு சுடிதார் கூட போடவிட்டதில்லை. ஸ்கூட்டி ஒட்டகூட அவளுக்கு உரிமை இல்லை. மாடர்ன். உடையில் வீடியோ கால் செய்து வசமாக மாட்டிக் கொண்டாள். அவன் கழுத்தில் தாலி இல்லாததை அவள் மாமியார் பார்த்துவிட்டார்.

கலையரசி: எங்கடி உன் கழுத்துல தாலிய காணோம்? கழட்டி வெச்சுட்டையா? கையில் வளையலை காணோம். கால்ல மெட்டியாவது போட்டிருக்கையா? நீ போட்டிருக்கு மாட்ட.. உன் புருஷன் என்ன செத்தா போய்ட்டான்? இப்படி மொட்டையா சுத்திட்டு இருக்க? கழுத்துல தாலி இல்லாம நீ கர்பிணியா வெளிய நடமாடிட்டு இருக்க? எங்கடி போய்ட்டு வர? எவன் கூட சுத்திட்டு வர? இதுல நீ பைக் வேற ஓட்டறையா?

மாமியார் அடுக்கடுக்காய் வசை பாட, லதாவிற்கு கண்ணீர் வந்து விடும் போலிருந்தது. சிரமப்பட்டு அழாமல் சமாளித்தாள்.

லதாவின் அடக்கி வைத்த அழுகை இப்போது கோபமாக மாறியது. அவள் மாமியார் அவளை கொடுமை படுத்தியது, கன்னத்தில் அறைந்தது என்று பல பழைய சம்பவங்கள் அவள் நினைவுக்கு வந்தது. நிதானமாக இருந்து மாமியாருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். பல ஆயிரம் கி.மி க்கு அப்பால் இருக்கும் அவள் படிக்காத மாமியாரால் அவளை எதுவும் செய்ய முடியாது, பிறகு ஏன் பயப்பட வேண்டும் என்று லதாவுக்கு புரிந்தது.

லதா: அய்யோ அத்த நான் ஆபிஸ்க்கு தான் போய்ட்டு வரேன். எனக்கு கீழ 10 ஆம்பளங்க வேலை செய்யறாங்க. ஆபீஸ்ல வயசுல பெரிய ஆம்பளங்களா இருந்தாலும் பேர் சொல்லிதான் கூப்பிடனும். உங்க பையனுக்கு பாரம் குறையும்னுதான் நான் வேலைக்கே போக ஆரம்பிச்சேன். இப்போ உங்க பையன விட எனக்கு சம்பளம் அதிகமா வருது. இங்க ரெண்டு பேரு சம்பாதிச்சாதான் கட்டுபடி ஆகும். மிச்சம் வெச்சு உங்களுக்கும் மாசா மாசம் காசு அனுப்ப முடியும். உங்க பையனுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி வேலை போயுடுச்சு. நான்தான் கர்ப்பமா இருந்தாலும் வேலைக்கு போய் உங்களுக்கு 2 மாசம் காசு அனுப்பினேன்.

இப்போ உங்க பையனுக்கும் என் ஆபிஸ்லயே வேலை கிடைச்சுடுச்சு. எனக்கு கீழ வேலை பண்ண வேண்டிய சூழ்நிலை. புருஷன் பொண்டாட்டி உறவெல்லாம் வீட்டுக்குள்ளதான்னு சொல்லிடாங்க. புருஷனயே பேர் சொல்லி கூப்பிடற நிலைமை ஆயுடுச்சு. ஒரு தடவை இல்லை. தினமும் வினோத் வினோத்னு கட்டின புருஷன நூறு தடவை பேர் சொல்லி கூப்பிடற சூழ்நிலை.

புருஷன்னு பாகுபாடு காட்டாம, மத்த ஆம்பளங்கள நடத்தற மாதிரி தான் ஆபீஸ்ல புருஷனையும் நடத்தனும். திட்டற சூழ்நிலை வரும் போது ஆம்பளனு பார்க்காம திட்டனும், பொம்பளங்களுக்கு புடவை கட்டிட்டு ஆபீஸ் போக அனுமதி இல்லை. இந்த மாதிரி பேண்ட் சட்டை போட்டுட்டுதான் போகனும். நகை போடக்கூடாது. தாலிய கூட கழட்டி வெச்சுட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக