புதன், 27 மார்ச், 2024

மாலதியின் மருமகன், EP10


வினோத்தின் பிறந்த நாள் வந்தது. காயத்திரி தன் மகனுக்காக வாங்கிய புது புடவையை கொடுத்து அதை கட்டி வருமாறு கூறினாள். வினோத், அவன் அம்மாவுக்கு வாங்கிய ஜீன்ஸ் மற்றும் டீ-சர்ட்டை கொடுத்தான்.


காயத்திரி: அய்யோ! இதையா என்னை போட சொல்லற? ஆம்பளங்க போடறத நான் எப்படி போட்டுக்கிறது? எனக்கு கூச்சமா இருக்கு.

வினோத்: பொம்பளங்களும் ஆம்பள மாதிரி இப்போ எல்லாம் பேண்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க. ஆம்பள பையன், நான் பொட்டச்சி மாதிரி புடவை கட்டிக்கும் போது உங்களுக்கு பேண்ட் போடறதுல என்ன கூச்சம்?

தன் மகன் வற்புறுத்தியதால் காயத்திரி அவனிடமிருந்து ஜீன்ஸ் டீ சர்ட்டை வாங்கிக் கொண்டு அவள் அறைக்கு சென்றாள். புடவையை கழற்றி விட்டு ஜீன்ஸ் டீ சர்ட்டிற்கு மாறினாள். சராசரி இந்திய தாய்மார்களை போன்று சற்று சதையுடன் கூடிய தேகம்தான் அவளுக்கு. தொப்பை எல்லாம் பெரிதாக இல்லை. பெரிய மார்பகங்கள், இடுப்புக்கு கீழ் அகண்ட தேகம், பெரிய தொடைகள் என இருந்தாலும் ஜீன்ஸ் டீ-சர்ட்டில் மிக அழகாக தெரிந்தாள். கண்ணாடியில் பார்க்கும் போது 30 வயது பெண்மணி போலவே தோன்றினாள்.

அப்படியே வெளியே வர கூச்சமாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். புடவை கட்டிக் கொண்டு பெண் பிள்ளையை போலவே அவள் மகன் இருந்தான். அவன் நேராக வந்து அவள் காலில் விழுந்தான்.

வினோத்: என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா.

அவனை எழுப்பி விட்டு அவனை அன்போடு அணைத்தாள். அம்மாவின் அறவணைப்பில் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தான்.

காயத்திரி: நீ புடவைல ரொம்ப அழகா இருக்கடா.

வினோத்: நீங்க இந்த டிரஸ்ல சூப்பரா இருக்கேங்க அம்மா. பார்க்கறதுக்கு எனக்கு அக்கா மாதிரி இருக்கேங்க.

காயத்திரி: தேங்க்ஸ் டா.

வினோத்: இந்த வருஷம் பிறந்தநாளுக்கு நான் புடவை கட்டினது மட்டும் இல்லாம ஒரு நல்ல மகள் மாதிரி உங்களுக்கு சமைச்சு போட போறேன்.

காயத்திரி: சமையலா? நீயா? உனக்கு சாப்பிட மட்டும் தானே தெரியும்?

காயத்திரி சிரித்தாள்.

வினோத்: கத்துக்கிட்டா போச்சு. நீங்க பக்கத்துல இருந்து சொல்லி குடுங்க. நான் அப்படியே நீங்க சொல்லறத செய்யறேன்.

----------------------------

ஸ்ரேயாவிற்கு உதிர போக்கு இன்றுதான் நின்றது. உடல் சற்று சோர்வாக இருந்ததால் இன்றும் பைக் ரேஸ் பயற்சிக்கு செல்லாமல் இருந்தாள். வினோத்தின் பிறந்தநாள் இன்று என்று அவளுக்கு ஞாபகம் வந்தது. அவனுக்கு இரவே மொபைலில் வாழ்த்து அனுப்பியிருந்தாள். அவன் மொபைலுக்கு அழைத்தான்.

ஸ்ரேயா: Happy birthday kanna!

வினோத்: தேங்க் யூ ஸ்ரேயா! உனக்கு எப்படி என் பர்த்டே தெரியும்?

ஸ்ரேயா: உன்னோட பர்ஸ் வெச்சு உன் ஜாதகத்தைய எடுத்தாச்சு! பர்த்டே பேபிக்கு என்ன வேணும்? உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வெச்சிருக்கேன்.

வினோத்: எனக்கு எதுவுமே வேண்டாம். நீ மட்டும் இருந்தா போதும். உன்னை கட்டி பிடிச்சுட்டே தூங்கனும்.

ஸ்ரேயா யோசித்தாள்.

ஸ்ரேயா: சரி ! Wish granted! நான் நைட் உன்னை கூட்டிட்டு போறேன். இங்க என் ரூமுக்கு வந்துடலாம். Early Morning உன்னை திரும்பவும் டிராப் பண்ணிடறேன். இங்க ஆண்கள் allowed இல்லை. நீ புடவை கட்டிட்டு பொம்பள மாதிரிதான் வந்து போகனும்.

வினோத்: எனக்கு Double Ok.

-----------------------------

போன் பேசி முடித்து ஹாலுக்கு வந்தான். அங்கே அவன் அம்மா கால் மேல் கால் போட்டு சோபாவில் கெத்தாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா ஜீன்ஸ் அணிந்த பின் அவள் body language மாறியதை கண்டு ரசித்தான்.

வினோத்: இப்போ பார்க்க லேடி டான் மாதிரியே இருக்கேங்க அம்மா!

காயத்திரி வெட்கப்பட்டு சிரித்தாள். கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருப்பதை இப்போது தான் உணர்ந்தாள். கூச்சத்துடன் நெளிந்து விட்டு காலை எடுத்து விட்டு சாதாரணமாக அமர்ந்தாள்.

வினோத்: கூச்சப்படாம freeya இருங்க அம்மா. இவ்வளவு வருஷமா புடவை கட்டிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கனு எனக்கு இந்த 2 - 3 நாள்ல தெரிஞ்சிடுச்சு. ஆம்பள மாதிரி சௌகர்யமா இருங்க. அதுக்காக தான் உங்களுக்கு ஜீன்ஸ் வாங்கி கொடுத்தேன்.

வினோத்தின் வார்த்தைகள் அவளுக்கு தன்னம்பிக்கையை தந்து கூச்சத்தை போக்கியது. காயத்திரி திரும்பவும் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள்.

காயத்திரி: இந்த உடுப்பு ரொம்ப சௌகர்யமா இருக்குடா. இதனால் தான் இந்த காலத்து பொண்ணுங்க இந்த உடுப்ப போட்டுட்டு சுத்துதுங்க போல. இப்போ கிட்சனுக்கு போய் சின்ன வெங்காயம் உறிச்சு நறுக்கி வை. நான் 10 நிமிஷத்துல வந்து உனக்கு என்ன பண்ணறதுன்னு சொல்லித் தரேன்.

வினோத் வெங்காயம் உறித்துக் கொண்டிருக்கும் போது அவன் அம்மா சமையலறைக்குள் வந்தார்.

காயத்திரி: இவ்வளவு நேரமா இவ்வளவு வெங்காயம் தான் உறிச்சிருக்கியா? சரி. பரவாயில்லை. இப்போதைக்கு இது போதும்.

காயத்திரி: நான் சொல்லறத சரியா செய்யனும். ஏதாவது சொதப்பினா நான் மகன்னு சலுகை தர மாட்டேன். திட்டு அடி உதை எல்லாம் வாங்கி தான் வீட்டு வேலையை சரியா செய்ய கத்துக்க முடியும்.

தன் அம்மா ஜீன்ஸ் அணிந்த பிறகு சற்று கர்வம் கூடியதை உணர்ந்தான் வினோத். காயத்திரியும் இவ்வளவு சுதந்திரத்தை இப்போதுதான் அனுபவித்தாள். மாராப்பை அடிக்கடி சரி செய்ய வேண்டிய தேவை இல்லை. நடக்கும் போது கால் இடறி விடுமோ என்ற கவலை இல்லை. காலை எப்படி வேண்டுமானாலும் தூக்கலாம் என்ற சல பல வசதிகளை திருமணத்திற்கு பிறகு இன்றுதான் தன் மகன் பேண்ட் வாங்கித் தந்ததால் அனுபவக்கிறாள்.

தான் ஜீன்ஸ் அணிந்து சௌகர்யமாக இருக்கும் போது, தன் மகன் புடவையில் சிரமப்படுவது அவளுக்கு ஒரு விதத்தில் வருத்தமாக இருந்தாலும், அவன் ஒரு பெண் போல அழகாக, நளினத்துடன் இருப்பதை கண்டு பூரிப்படையவும் செய்தாள்.

காயத்திரி: உனக்கு இந்த புடவை ரொம்ப அழகா இருக்குடா. பார்க்க நீ ஒரு பெண் போல தான் தெரியற. உன்னை வினோத் னு கூப்பிடாம வினோதினினு கூப்பிடனும் போல இருக்கு.

வினோத்: உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடுங்க அம்மா.

காயத்திரி: சரி டி. நீ சமையல் வேலையை ஆரம்பி.

தன் அம்மாவின் வழிகாட்டலுடன் சமையல் வேலையை ஆரம்பித்தான். காயத்திரி அவ்வப்போது அவனை திட்டியும், லேசாக அடித்தும் அவனுக்கு சமைக்க கற்று கொடுத்தாள்.

ஒரு வழியாக சமையல் வேலை முடிந்ததும் வினோத்தே அவன் அம்மாவை சோபாவில் அமர வைத்துவிட்டு பாத்திரம் தேய்ப்பது, வீட்டை கூட்டி துடைத்து விடுவது என அனைத்து வேலைகளையும் செய்தான். மாலை வந்ததும் வினோத் வெளியே போய் வரலாம் என்று கூறினான்.

காயத்திரி: இரு டி. நான் புடவை கட்டிட்டு வந்துடறேன்..

வினோத்: இல்லை அம்மா. நீங்க இப்படியே ஜீன்ஸ் போட்டுட்டு தான் வரணும். நானே தைரியமா புடவை கட்டிட்டு வரும் போது உங்களுக்கு ஜீன்ஸ் போட்டுட்டு வரதுல என்ன சிரமம்?

காயத்திரியும் ஒத்துக்கொண்டு தன் மகனை புடவையில் கூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் வெளியே சென்றாள். புடவை அணிந்து வண்டி ஓட்டுவதை விட ஜீன்ஸ் அணிந்து வண்டி ஓட்டுவது காயத்திரிக்கு மிகவும் வசதியாக இருந்தது. சென்ற இடத்திலெல்லாம் அவளை அனைவரும் மேடம் மேடம் என்று மரியாதையோடு அழைத்தனர். காயத்திரிக்கு இது மிகவும் பிடித்து போனது.

இரவு வீடு வந்து சேர்ந்தவுடன் காயத்திரி சிறிது நேரத்தில் தூங்கி விட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக